Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

BAPS: புத்தாண்டை முன்னிட்டு நீலகண்டவர்ணி சுவாமிக்கு அபிஷேக தரிசனம்..

2026 ஆம் ஆண்டு துவங்கியுள்ள நிலையில், இந்த புத்தாண்டை உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் ஆன்மிக உணர்வுடன் வரவேற்கும் இந்த இனிய தருணத்தில், அனைவரின் வாழ்விலும் அமைதி, செழிப்பு, நல்ல உடல்நலம் மற்றும் ஆன்மிக முன்னேற்றம் நிறைந்த ஆண்டாக அமைய வேண்டும் என மகந்த் சுவாமி மகாராஜா மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

BAPS: புத்தாண்டை முன்னிட்டு நீலகண்டவர்ணி சுவாமிக்கு அபிஷேக தரிசனம்..
மகந்த் சுவாமி மகாராஜா புத்தாண்டு வாழ்த்து
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 01 Jan 2026 20:05 PM IST

2026 ஆம் ஆண்டு துவங்கியுள்ள நிலையில், இந்த புத்தாண்டை உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் ஆன்மிக உணர்வுடன் வரவேற்கும் இந்த இனிய தருணத்தில், அனைவரின் வாழ்விலும் அமைதி, செழிப்பு, நல்ல உடல்நலம் மற்றும் ஆன்மிக முன்னேற்றம் நிறைந்த ஆண்டாக அமைய வேண்டும் என போச்சாசன்வாசி அக்ஷர் புருஷோத்தம் ஸ்வாமிநாராயண் சான்ஸ்தா (BAPS) புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,  பகவான் சுவாமி நாராயணின் புனித திருவடிகளில் சரணடைந்து, அவரது கருணைமிகு அருளின் கீழ், இந்த புதிய ஆண்டு ஒவ்வொருவரின் வாழ்விலும் தெய்வீக ஆசீர்வாதங்கள், உள்ளார்ந்த பலம் மற்றும் மனநிறைவான மகிழ்ச்சி ஆகியவற்றை கொண்டு வர வேண்டும் என மகந்த் சுவாமி மகாராஜா பணிவுடன் பிரார்த்தனை செய்துள்ளார்.

இந்த புனிதமான புத்தாண்டு நாளை முன்னிட்டு, பகவான் நீலகண்ட்வர்ணியின் அபிஷேக தரிசனத்தை பக்தர்களுடன் பகிர்ந்து கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த அபிஷேக தரிசனம், பக்தர்களின் உள்ளங்களை புனிதப்படுத்தி, சிந்தனைகளை தூய்மைப்படுத்தி, பக்தி, சேவை ஆகியவற்றின் பாதையில் உறுதியுடன் நடக்க அனைவருக்கும் ஊக்கமாக அமைய வேண்டும் என்பதே தனது வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த 2026 புத்தாண்டு  முழுவதும், இறை அருளால் மனிதர்கள் நல்ல எண்ணங்களுடன், நல்ல செயல்களில் ஈடுபட்டு, ஆன்மிக ஒளியுடன் வாழ்க்கையை வழிநடத்த வேண்டும் என்றும், குடும்பங்களிலும் சமுதாயத்திலும் அமைதி மற்றும் ஒற்றுமை நிலவ வேண்டும் என்றும் மகந்த் சுவாமி மகாராஜா தெரிவித்துள்ளார்.

இந்த புனிதமான புத்தாண்டு நாளில், அனைத்து குடும்பங்களும் இறைவனின் அருளால் வளமும் நலனும் பெற்றதாக இருக்க வேண்டும் என்றும், அனைவருக்கும் இந்த ஆண்டு மகிழ்ச்சியும், ஆசீர்வாதமும், ஆன்மிக புனிதமும் நிறைந்ததாக அமைய வேண்டும் என்றும் அவர் வாழ்த்தியுள்ளார். உலகம் முழுவதும் உள்ள பக்தர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும், புத்தாண்டு 2026 இனியதாகவும், புனிதமாகவும், ஆசீர்வாதம் நிறைந்ததாகவும் அமைய வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.