Vastu Tips: கிருஷ்ண ஜெயந்தி நாளில் பின்பற்ற வேண்டிய வாஸ்து விதிகள்!
Gokulashtami Vastu Tips: 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் தேதி சனிக்கிழமை கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கோகுலாஷ்டமி வழிபாட்டில் வாஸ்து விதிகளை பின்பற்றுவது முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. கிருஷ்ணரின் ஊஞ்சல் வழிபாட்டில் நாம் என்ன செய்ய வேண்டும் என பார்க்கலாம்.

கிருஷ்ண ஜெயந்தி வாஸ்து விதிகள்
கிருஷ்ண ஜெயந்தி (Gokulashtami) பண்டிகையானது நாடு முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாகும். விஷ்ணுவின் தசாவதாரங்களில் 9வது அவதாரமாக உள்ளது தான் கிருஷ்ணர். அதர்மம் எங்கெல்லாம் தலை தூக்குகிறதோ அங்கெல்லாம் தான் தோன்றி தர்மத்தை நிலை நாட்டுவேன் என்ற கொள்கை அடிப்படையில் கிருஷ்ண பகவான் (Lord Krishna) தோன்றியதாக நம்பப்படுகிறது. கிருஷ்ணர் வாசுதேவர் – வாசுகி தம்பதியினரின் 8வது குழந்தையாவார். மதுராவில் கொடுங்கோல் ஆட்சி செய்து வந்த தன் தாய்மாமா கம்சன் மன்னரை அழிக்கவே கிருஷ்ண அவதாரம் நிகழ்ந்ததாக சொல்லப்படுகிறது. அதனால் தான் கிருஷ்ணர் சிறைச்சாலையில் ஆவணி மாதத்தின் ரோகிணி நட்சத்திரத்தில், தேய்பிறை அஷ்டமி நாளில் நள்ளிரவில் பிறந்தார். இந்த நாளே கிருஷ்ண ஜென்மாஷ்டமியாக கொண்டாடப்படுகிறது.
2025 ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையானது ஆகஸ்ட் 16ஆம் தேதி சனிக்கிழமை வருகிறது. வழக்கமாக ஆவணி மாதத்தில் வரும் இந்த விசேஷ நாள் இம்முறை ஆடி மாதத்தில் வருவது மிக சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இப்படி சிறப்பு வாய்ந்த கோகுலாஷ்டமி நாளில் பின்பற்ற வேண்டிய வாஸ்து விதிகள் பற்றி காணலாம். அதன்படி நள்ளிரவு 12 மணிக்கு மேல் கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.
Also Read: Krishna Jayanthi: கிருஷ்ண ஜெயந்தி விழா.. வீட்டில் வழிபாடு செய்வது எப்படி?
இதெல்லாம் மறக்காம பின்பற்றுங்க!
- கிருஷ்ண ஜெயந்தி நாளில் குழந்தை கிருஷ்ணரை ஊஞ்சலில் வைத்து ஆட்டும் வைபவம் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இந்த ஊஞ்சலை ஈசானிய மூலையான வடகிழக்கு அல்லது கிழக்கு திசையில் வைப்பது சிறந்ததாக பார்க்கப்படுகிறது.இந்த திசைகளில் கடவுள்கள் வசிப்பதாக ஐதீகமாக பார்க்கப்படுகிறது. பகவான் கிருஷ்ணரின் சிலை முகம் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
- வாஸ்து சாஸ்திரப்படி கோகுலாஷ்டமி நாளில் குழந்தை கிருஷ்ணருக்கு ஊஞ்சல் வைபவம் செய்வதாக இருந்தால் மஞ்சள், வெள்ளை, வெளிர் நீலம் அல்லது கோல்டு போன்ற நிறங்களைப் பயன்படுத்தலாம். இது அதிர்ஷ்டத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.
- இந்த ஊஞ்சல் மரத்தால் செய்யப்பட்டதால் மிகவும் நல்லதாக சொல்லப்படுகிறது. அதேசமயம் வெள்ளி அல்லது பித்தளையால் செய்யப்படுவதும் உகந்ததாகும். ஆனால் எக்காரணம் கொண்டு எஃகு அல்லது இரும்பினால் செய்யப்பட்ட ஊஞ்சலை பயன்படுத்தாதீர்கள். இந்த ஊஞ்சலை துளசி, பட்டு துணி, முத்து மாலைகள், மயில் இறகுகள், புல்லாங்குழல், சிறிய சிலைகள் போன்றவற்றால் அலங்காரம் செய்யலாம்.
Also Read: Gokulashtami 2025: கிருஷ்ண ஜெயந்தி.. 56 வகை உணவுகள் படைக்க காரணம் இதோ!
கிருஷ்ணரின் பக்தி பாடல்களை பாராயணம் செய்யலாம்
கிருஷ்ண பகவானின் வழிபாட்டின் போது அவருக்குரிய மந்திரங்கள், பக்தி பாடல்கள், சினிமாவில் இடம் பெற்ற பாடல்கள் என எது தெரிகிறதோ அதனை செய்யலாம். பகவத் கீதை படிக்கலாம். மேலும் கிருஷ்ண பகவானுக்குரிய நைவேத்தியம் வைத்து வழிபாடுகளை மேற்கொள்ளலாம்.
(ஆன்மிகம் மற்றும் வாஸ்து நம்பிக்கையின் அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)