கார்த்திகை தீபம்… வீடுகளில் தீபம் ஏற்றிய பிறகு செய்யக் கூடாதவை என்ன? முழு விவரம் இதோ

Karthigai Deepam : கார்த்திகை தீபம் தினத்தன்று வீடுகளில் தீபம் ஏற்றுவதால் செல்வம், மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியம் கூடும் என்பது பாரம்பரிய நம்பிக்கையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் அன்றைய தினம் விளக்கேற்றிய பிறகு செய்யக் கூடாதவை குறித்து விரிவாக பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்... வீடுகளில் தீபம் ஏற்றிய பிறகு செய்யக் கூடாதவை என்ன? முழு விவரம் இதோ

மாதிரி புகைப்படம்

Published: 

02 Dec 2025 22:29 PM

 IST

தமிழகத்தில் டிசம்பர் 3, 2025 அன்று திருகார்த்திகை தீபத் திருநாள் (Karthigai Deepam) வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் திருவண்ணாமலையில் (Tiruvannamalai) மகர தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கம். இதனால் அங்கு தமிழகம் மற்றும் அருகில் உள்ள மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழக்கம். இதனையடுத்து அரசு சார்பில் அங்கு முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அங்கு செல்ல முடியாத பக்தர்கள் வீடுகளில் விளக்கேற்றுவதன் மூலம் முழு பலனை அடைகிறார்கள் என ஆன்மீக பெரியவர்கள் தெரிவிக்கின்றனர்.  இந்நாளில் வீடுகளில் தீபம் ஏற்றுவதால் செல்வம், மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியம் கூடும் என்பது பாரம்பரிய நம்பிக்கையாக இருந்து வருகிறது.

திருகார்த்திகையின் சிறப்புகள் என்ன?

திருக்கார்த்திகை அன்று வீடுகளில் விளக்கேற்றுவதால், வீட்டில் செல்வம் பெருகும், துன்பங்கள் நீங்கும், தடைகள், தடங்கல்கள் அகலும், நல்ல செய்திகளை கொண்டும் வரும் என்பது நம்பிக்கை. இதனையடுத்து வீடுகளில் கார்த்திகை தினத்தன்று மாலை நேரம் விளக்கேற்றி கடவுளை வழிபட வேண்டும். விளக்கேற்றுவதற்கு சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் அப்போது தான் நமக்கு முழு பலன் கிடைக்கும்.

இதையும் படிக்க : கார்த்திகை தீபத் திருநாள்: வீட்டில் இதையெல்லாம் தவறிக்கூட செய்யக்கூடாது!!

தீபம் ஏற்றிய பிறகு செய்யக்கூடாதவை

ஆன்மிக நம்பிக்கையின் படி, வீட்டில் தீபம் ஏற்றிய பிறகு வீடுகளை பூட்டி வெளியே போகக் கூடாது. மேலும் வீடுகளில் விளக்கேற்றிய பிறகு பால், வெல்லம், அரிசி, பருப்பு, எண்ணெய், மஞ்சள் ஆகியவற்றை கடையில் வாங்கக் கூடாது. கடன் வாங்கி பொருட்கள் வாங்கக் கூடாது. இப்படி செய்தால் காரத்திகை தீபத்தன்று விளக்கேற்றுவதால் கிடைக்கும் பலன் கிடைக்காமல் போகும் என்பது நம்பிக்கை.

ஏற்ற வேண்டிய தீப வழிமுறைகள்

  •  வீட்டில் எந்த அறையும் இருட்டாக இருக்கக் கூடாது. இரவு முழுவதும் குறைந்தது ஒரு தீபம் எரிந்து கொண்டே இருக்க வேண்டும்.
  • பெண்கள் தான் வீட்டில் விளக்கேற்ற வேண்டும்.  அவர்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுடன் இணைந்து தீபம் ஏற்றலாம்
  • வீடு சுத்தமாக இல்லாவிட்டால், அதனால் நன்மை கிடைக்காது
  • வீட்டின் வாசலில் தீபம் கட்டாயம் ஏற்ற வேண்டும்.  வாசலில் வைக்கப்படும் தீபம் காரணமாக, வீட்டிற்குள் நன்மை உள்ளே வரும் என்ற நம்பிக்கை.

இதையும் படிக்க : கார்த்திகை தீபம் : வீடுகளில் எப்படி விளக்கேற்றினால் முழு பலன் கிடைக்கும்?

சரவணப் பொய்கையில் முருகன் கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டார். அதனால் கார்த்திகை நட்சத்திரம் முருகப்பெருமானுக்கு மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. இதனால் திருக்கார்த்திகை தினத்தன்று கார்த்திகை தீபம் ஏற்றி முருகனை வழிபட்டால், தடைகள் அகன்று வாழ்க்கையில் நீண்ட ஆயுள், ஆரோக்கியம், செல்வம், சுபீட்சம் பெருகும் என நம்பப்படுகிறது.

மீண்டும் இணையும் பேட்ட காம்போ! - ஜெயிலர் 2 படத்தில் விஜய் சேதுபதி?
பிரணவ் மோகன்லாலின் டைஸ் ஐரே - ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிப்பு
இலங்கை, இந்தோனேசியாவை தாக்கிய இரட்டை புயல்கள் - 350க்கும் மேற்பட்டோர் பலி
முதல்நாளே வசூலை குவித்த ‘தேரே இஷ்க் மே’.. இந்தியில் சாம்ராஜ்யம் படைக்கும் தனுஷ்!!