Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Tiruchendur Temple Kumbabhishekam: திருச்செந்தூா் முருகன் கோயிலில் குடமுழுக்கை ஒட்டி தரிசன நேரம் மாற்றம்..

Tiruchendur Temple Kumbabhishekam: திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஜூலை 7, 2025 அன்று நடைபெறும் குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. 2025 ஜூலை 6, மதியம் 12 மணி வரை மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Tiruchendur Temple Kumbabhishekam: திருச்செந்தூா் முருகன் கோயிலில் குடமுழுக்கை ஒட்டி தரிசன நேரம் மாற்றம்..
திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்குImage Source: x
Sivasankari Bose
Sivasankari Bose | Updated On: 06 Jul 2025 07:26 AM

திருச்செந்தூர் ஜூலை 06: 2025 ஜூலை 7ஆம் தேதி திருச்செந்தூர் (Tiruchendur) முருகன் கோவிலில் நடைபெறும் குடமுழுக்கு விழாவை (Murugan Temple Consecration Ceremony) முன்னிட்டு, 2025 ஜூலை 6ஆம் தேதி மதியம் 12 மணிவரை மட்டுமே தரிசன அனுமதி வழங்கப்படுகிறது. விழாவுக்காக 3 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள், எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புக்காக 6,000 போலீசார், 25 மருத்துவ குழுக்கள், 27 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. விழாவின் முக்கிய நிகழ்வாக புனித நீரால் சுவாமிக்கு குடமுழுக்கு நடைபெறும். அதன் பின் மருந்து சாத்தும் பாரம்பரிய பூஜைகள் நடைபெறும். பின்னர் மீண்டும் தரிசன அனுமதி வழங்கப்படுமா என்பது பற்றி முடிவெடுக்கப்படும்.

ஞாயிறு மதியம் 12 மணி வரை மட்டுமே தரிசன அனுமதி

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஜூலை 7ஆம் தேதி (திங்கள்) நடைபெறும் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் திரண்டு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து, ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 6) பகல் 12 மணிவரை மட்டுமே தரிசன அனுமதி வழங்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு அறிவித்துள்ளார்.

விழா ஏற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள்

விழாவிற்காக மூன்று இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், எல்இடி திரைகளும் பல இடங்களில் நிறுவப்பட்டு, மக்கள் எளிதாக விழாவை காணும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணிக்காக 6,000 போலீசார் பணியில் ஈடுபடுகின்றனர். அத்துடன், 25 மருத்துவக் குழுக்கள், 27 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன.

பொதுமக்களுக்கு மீண்டும் தரிசன அனுமதி வழங்கப்படுமா?

திருச்செந்தூர் கோவிலில் குடமுழுக்கு விழாவுக்குப் பிறகு மருந்து சாத்தும் பூஜைகள் நடைபெறும் என்பது அந்த கோயிலின் பாரம்பரியமாகும். எனவே, 2025 ஜூலை 7 அன்று விழா முடிந்த பின்னர் சுவாமிக்கு எண்வகை மருந்து சாத்துதல் உள்ளிட்ட பாரம்பரிய பூஜைகள் நடைபெறும். அதன் பின்னரே பொதுமக்களுக்கு மீண்டும் தரிசன அனுமதி வழங்கப்படுமா என்பது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு விழா

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், குடமுழுக்கு விழா, 2025 இந்த ஆண்டு ஜூலை 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பாதுகாப்பு மற்றும் ஏற்பாடுகள் மிகப்பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விழாவின் முக்கிய அம்சமாக, புனித நீர் நிரப்பப்பட்ட திருக்குடம் முருகப்பெருமானின் மீது ஊற்றி அபிஷேகம் செய்யப்படும் குடமுழுக்கு நிகழ்வு நடைபெறும். இது திருச்செந்தூர் கோவிலின் பாரம்பரியத்தில் மிகவும் முக்கியமானதாகும்.

சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கம்

குடமுழுக்கு நிகழ்வை ஒட்டி சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. விழாவுக்காக 3 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் எளிதாக விழாவை காண, பல இடங்களில் எல்இடி திரைகள் பொருத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் 6,000 காவல்துறையினர் ஈடுபடுகிறார்கள். 25 மருத்துவக் குழுக்கள், 27 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் இருக்கின்றன. விழா பணிகளுக்காக 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

விழா முடிந்த பிறகு, கோவிலில் பின்பற்றப்படும் பாரம்பரியங்களின்படி சுவாமிக்கு எண்வகை மருந்து சாத்துதல் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதன் பின்னரே பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்படுமா என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.