AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஐப்பசி மாதத்தில் உஷார்! இந்த 5 ராசிக்காரர்களுக்கு முக்கிய எச்சரிக்கை…….

Aippasi Month 2026: ஐப்பசி மாதத்தில் சூரியன் துலாம் ராசிக்கு பெயர்ச்சியடைவதால் மேஷம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ஆகிய ஐந்து ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. பணம், தொழில், குடும்ப உறவுகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். அவசர முடிவுகளைத் தவிர்த்து, பொறுமையுடனும் திட்டமிட்டும் செயல்படுவது நல்லது.

ஐப்பசி மாதத்தில் உஷார்! இந்த 5 ராசிக்காரர்களுக்கு முக்கிய எச்சரிக்கை…….
ராசிபலன்Image Source: tv9
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 15 Oct 2026 13:10 PM IST

2026 அக்டோபர் 17ஆம் தேதி சூரியன் துலாம் ராசிக்கு பெயர்ச்சியடைவதால் ஐப்பசி மாதம் (Aippasi Month) தொடங்குகிறது. ஜோதிடக் கணிப்புகளின்படி மேஷ ராசிக்காரர்கள் தொழில் மற்றும் குடும்ப உறவுகளில் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். சிம்ம ராசிக்காரர்கள் பணியிடத்திலும் தகவல் தொடர்பிலும் கவனமாக இருக்க வேண்டும். கன்னி ராசிக்காரர்கள் தேவையற்ற செலவுகளைக் குறைத்து நிதி விஷயங்களில் எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும். துலாம் ராசிக்காரர்கள் உடல் மற்றும் மனச் சோர்வைத் தவிர்க்க ஓய்வுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். விருச்சிக ராசிக்காரர்கள் வேலைப்பளு மற்றும் எதிர்பாராத செலவுகளைச் சமாளிக்கத் திட்டமிட வேண்டும். இந்த ராசிக்காரர்கள் அனைவரும் அவசர முடிவுகளைத் தவிர்த்து, பொறுமையுடனும் நிதானத்துடனும் செயல்படுவது நல்லது.

Also Read: அக்டோபர் 15ம் தேதி இன்றைய ராசிபலன்…. அதிர்ஷ்டம் கொட்டும் ராசிகள் எவை?

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் இந்த மாதத்தில் தொழில் மற்றும் குடும்ப உறவுகளில் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அல்லது கூட்டாளிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். முக்கிய முடிவுகளை அவசரமாக எடுக்காமல், முதலீடு தொடர்பான விஷயங்களில் நிதானமாகச் செயல்படுவது நல்லது. துணையிடம் விட்டுக்கொடுத்துச் செல்வதும், மற்றவர்களின் கருத்துகளை மதிப்பதும் உறவுகளில் பிரச்சினைகள் ஏற்படுவதைத் தவிர்க்க உதவும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் பணியிடத்திலும் தகவல் தொடர்பிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பயணத் திட்டங்கள் மற்றும் பேச்சுவார்த்தைகளில் சில தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. வருமானம் தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பதுடன், வேலைகளைத் தள்ளிப்போடாமல் திட்டமிட்டுச் செயல்படுவது அவசியம். குடும்பத்தினர் மற்றும் உடன்பிறந்தவர்களுடன் பேசும்போது தவறான புரிதல்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த ஐப்பசி மாதத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் வாக்குவாதங்களைத் தவிர்த்து, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. பணத்தைச் செலவிடுவதற்கு முன் தேவைகளை மதிப்பீடு செய்து, தேவையற்ற செலவுகளைக் குறைக்க முயற்சி செய்ய வேண்டும். பணியிடத்தில் மற்றவர்களிடம் கடுமையாகப் பேசுவதைத் தவிர்ப்பதும், குடும்ப உறவுகளில் விட்டுக்கொடுத்துச் செல்வதும் அமைதியைப் பேண உதவும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் உடல் மற்றும் மனச் சோர்வை உணரக்கூடும் என ஜோதிடக் கணிப்புகள் கூறுகின்றன. இதனால் தன்னம்பிக்கை குறைவது அல்லது முக்கிய முடிவுகளை எடுப்பதில் தயக்கம் ஏற்படுவது போன்ற நிலைகள் உருவாகலாம். பணியிடத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும்போது அவற்றைத் திட்டமிட்டு நிறைவேற்றுவது அவசியம். நிதி சார்ந்த முடிவுகளை அவசரமாக எடுக்காமல், உறவுகளில் சமநிலையைக் கடைப்பிடிப்பது நல்லது.

Also Read: அக்டோபர் 15ம் தேதி இன்றைய ராசிபலன்…. அதிர்ஷ்டம் கொட்டும் ராசிகள் எவை?

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் இந்த மாதத்தில் மன அழுத்தம், வேலைப்பளு மற்றும் எதிர்பாராத செலவுகள் போன்றவற்றை எதிர்கொள்ள நேரிடலாம். வெளிநாடு தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் கிடைத்தாலும், உழைப்புக்கான அங்கீகாரம் தாமதமாகக் கிடைக்கலாம் எனக் கணிக்கப்படுகிறது. ஆன்மிக விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கக்கூடும். பணியிடத்திலும் குடும்பத்திலும் மற்றவர்களுடன் அனுசரித்துச் செல்வதன் மூலம் மன அமைதியைப் பேண முடியும்.

பொறுப்புத்துறப்பு: இந்தக்கட்டுரை ஜாதக நம்பிக்கையின்படி எழுதப்பட்டது. இது அறிவியல் பூர்வமாக நிரூபணம் ஆனது அல்ல.

Follow Us