AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நவராத்திரி ஆன்மீகப் பயணம்: தரிசிக்க வேண்டிய 10 தேவி திருத்தலங்கள்….

Navratri Devi Temples: நவராத்திரி திருவிழா காலத்தில் இந்தியாவின் பிரசித்தி பெற்ற வைஷ்ணோ தேவி, காமாக்யா மற்றும் சாமுண்டேஸ்வரி போன்ற சக்தி பீடங்களுக்குச் சென்று வழிபடுவது பக்தர்களுக்கு ஆன்மீக அமைதியை வழங்கும். இந்தத் திருத்தலங்களில் நடைபெறும் பாரம்பரிய சடங்குகளும் சிறப்பு வழிபாடுகளும் இப்பண்டிகையை மேலும் அர்த்தமுள்ளதாகவும் உற்சாகமானதாகவும் மாற்றுகின்றன.

நவராத்திரி ஆன்மீகப் பயணம்: தரிசிக்க வேண்டிய 10 தேவி திருத்தலங்கள்….
தேவி கோவில்கள் Image Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 14 Oct 2026 17:15 PM IST

நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு இந்தியாவின் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களுக்கு ஆன்மீகப் பயணம் மேற்கொள்வது பக்தர்களுக்கு ஒரு சிறந்த தெய்வீக அனுபவத்தைத் தரும். ஜம்மு காஷ்மீரின் மலைப்பகுதியில் அமைந்துள்ள வைஷ்ணோ தேவி கோயிலில் அன்னை வைஷ்ணவியை தரிசிக்க பக்தர்கள் கடினமான மலையேற்றப் பயணத்தை மேற்கொள்கின்றனர். அசாம் மாநிலம் குவகாத்தியில் உள்ள நிலாச்சல் மலையில் அருள்பாலிக்கும் காமாக்யா கோயில் பெண் சக்தியின் மிக முக்கியமான சக்தி பீடமாகப் போற்றப்படுகிறது. கர்நாடகாவின் மைசூரு சாமுண்டி மலையில் அமைந்துள்ள சாமுண்டேஸ்வரி கோயிலில் உலகப் புகழ்பெற்ற தசாரா திருவிழா மற்றும் நவராத்திரி கொண்டாட்டங்கள் வெகு விமரிசையாக நடைபெறும். குஜராத்தின் அஜாபி (அம்பாஜி) கோயிலில் சிலைக்குப் பதிலாக தெய்வீக யந்திரம் மட்டுமே வழிபடப்படுவது இதன் தனித்துவமான ஆன்மீகச் சிறப்பம்சமாகும். இத்தகைய சிறப்புமிக்க சக்தி தலங்களுக்குச் சென்று வழிபடுவது பக்தர்கள் வாழ்வில் ஆன்மீக வளர்ச்சியையும் மன அமைதியையும் தரும்.

ஜம்மு காஷ்மீரின் பிரசித்தி பெற்ற வைஷ்ணோ தேவி கோயில்

திரிகூட மலைத்தொடரின் இயற்கை அழகிய சூழலில் அமைந்துள்ள வைஷ்ணோ தேவி கோயில், இந்தியாவில் அதிகம் பேரால் தரிசிக்கப்படும் மிக முக்கியமான ஆன்மீகத் தலங்களில் ஒன்றாகும். இந்தத் திருத்தலத்தில் அருள்பாலிக்கும் அன்னை வைஷ்ணவியை தரிசிக்க பக்தர்கள் சுமார் 13 கிலோமீட்டர் தூரம் கடினமான மலையேற்றப் பயணத்தை மேற்கொள்கின்றனர். நவராத்திரி காலங்களில் இந்த ஆன்மீகப் பயணம் பக்தர்களின் வாழ்வில் ஒரு மறக்க முடியாத தெய்வீக அனுபவத்தை வழங்குகிறது.

அசாமின் சக்தி பீடமான காமாக்யா கோயில்

குவகாத்தியின் நிலாச்சல் மலையில் அமைந்துள்ள காமாக்யா கோயில், பெண் சக்தியின் மையமாகவும், மிக வலிமை வாய்ந்த சக்தி பீடமாகவும் போற்றப்படுகிறது. நவராத்திரி மற்றும் சிறப்பு நாட்களில் ஆன்மீக வளர்ச்சி மற்றும் செழிப்பு வேண்டி நாட்டின் பல பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் இங்கு குவிகின்றனர். இந்தத் கோயிலின் தனித்துவமான வழிபாட்டு முறைகளும் பாரம்பரிய சடங்குகளும் இதன் வரலாற்றுச் சிறப்பை பறைசாற்றுகின்றன.

Also Read: தீபாவளி பண்டிகைக்கு வீட்டை மங்களகரமாய் மாற்ற எளிய வாஸ்து..!

கர்நாடகாவின் மைசூரு சாமுண்டேஸ்வரி கோயில்

மைசூரு நகரின் சாமுண்டி மலையின் உச்சியில் கம்பீரமாகக் காட்சி தரும் சாமுண்டேஸ்வரி கோயில், துர்கையின் உக்கிர வடிவமான தேவியை வணங்கும் சிறப்பு மிக்க தலமாகும். மைசூரு தசாரா திருவிழாவுடன் இணைந்து இங்கு நடைபெறும் நவராத்திரி கொண்டாட்டங்கள் மிகவும் பிரம்மாண்டமானவை. லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் இப்பண்டிகை இப்பகுதியையே ஒரு விசேஷமான திருவிழாக் கோலமாக மாற்றுகிறது.

குஜராத்தின் உலகப் புகழ்பெற்ற அம்பாஜி கோயில்

அராசூர் மலைப்பகுதிகளுக்கு அருகில் அமைந்துள்ள அஜாபி (அம்பாஜி) கோயில், இந்தியாவின் 51 சக்தி பீடங்களில் மிகவும் புனிதமான ஒன்றாகக் கருதப்படுகிறதி. நவராத்திரி நாட்களில் இப்பகுதி பக்திப் பாடல்களும் பாரம்பரியக் கலைகளும் இணைந்து ஒளிரும் திருவிழாக் களமாக மாறுகிறது. இங்குள்ள கோயிலில் வழக்கமான சிலைக்குப் பதிலாக தெய்வீக யந்திரம் மட்டுமே வழிபடப்படுவது இதன் தனித்துவமான சிறப்பம்சமாகும்.

Follow Us