வாழ்க்கையில் யாரிடமும் சொல்லக்கூடாத 3 விஷயங்கள் என்ன தெரியுமா?

வாழ்வில் வெற்றி பெற மூன்று விஷயங்களை மறைத்து வைக்க வேண்டும் என ஆச்சார்ய சாணக்கியரின் சாணக்ய நிதி கூறுகிறது. இது அனைத்து விஷயங்களுக்கும் பொருந்தும். அதன்படி தனிப்பட்ட பலவீனங்களை வெளிப்படுத்தக்கூடாது. ஏனெனில் எதிரிகள் அதைப் பயன்படுத்தி நம்மை வீழ்ச்சி பாதைக்கு தள்ளுவார்கள். மேலும் திட்டங்களை ரகசியமாக வைத்திருப்பது வெற்றிக்கான முக்கிய அம்சமாகவும் பார்க்கப்படுகிறது.

வாழ்க்கையில் யாரிடமும் சொல்லக்கூடாத 3 விஷயங்கள் என்ன தெரியுமா?

சாணக்ய நிதி

Updated On: 

28 Aug 2025 10:36 AM

வாழ்க்கையில் நாம் வளர்ச்சி பெற வேண்டும் , எந்தவொரு விஷயத்திலும் வெற்றி பெற வேண்டும். எந்த நொடியும் பாசிட்டிவான எண்ணங்கள் தோன்ற வேண்டும். நாமும் சரி, நம்மை சுற்றி இருக்கும் விஷயங்களும் சரி எப்போதும் சரியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். ஆனால் சுற்றுச்சூழல் அப்படி அமையாது. இன்பம், துன்பம் மாறி மாறி வந்து நம்மை புரட்டிப்போடும். ஒவ்வொரு செயலும் நம் அனுபவமாக மாறும். நாம் செய்யும் சில நேர தவறுகள் கூட நம்மை அதளபாதாளத்தில் தள்ளி விடும். இப்படியான நிலையில் தான் தத்துவ ஞானிகளும், அனுபவசாலிகளும் சொல்லும் கருத்துகள் நமக்கு பால பாடமாக அமையும்.அந்த வகையில் தத்துவ ஞானியாக அறியப்படும் ஆச்சார்ய சாணக்கியர் தனது அனுபவத்தாலும், எதிர்காலத்தைப் பற்றிய தொலைநோக்குப் பார்வையாலும் சாணக்ய நிதியில் எழுதிய கருத்துகள் சாதாரண வாழ்க்கைக்கும் வழிகாட்டுதலை வழங்குகின்றன.

இன்றும் கூட, அவரது கொள்கைகளில் மறைந்திருக்கும் ஞானம் ஒவ்வொரு நபருக்கும் வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில் சரியான பாதையைத் தேர்ந்தெடுக்கும் சக்தியை அளிக்கிறது. அப்படியான நிலையில் வாழ்க்கையில் சிலரை நம்பி, தவறுதலாகக் கூட உங்களைப் பற்றி சில விஷயங்களைச் சொல்ல வேண்டாம் என்று சாணக்கியர் அறிவுறுத்துகிறார். அதனைப் பற்றிக் காணலாம்.

இதையும் படிங்கChanakya Niti: இப்படியான உறவினர்களை பக்கத்தில் கூட சேர்க்காதீர்கள்!

யாரிடமும் சொல்லக்கூடாத 3 விஷயங்கள்

ஒருவர் எவ்வளவு சக்திவாய்ந்தவராக இருந்தாலும், தனது பலவீனங்களையோ அல்லது ரகசியங்களையோ தவறான நபரிடம் வெளிப்படுத்தக்கூடாது. அப்படி செய்தால் அவர்களுக்கு வீழ்ச்சி நிச்சயம் என்று சாணக்கியர் எச்சரிக்கிறார்.   உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் அவர்களின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு பலவீனம் இருக்கும். ஆனால், உங்கள் பலவீனத்தைப் பற்றி மற்றவர்களிடம் சொன்னால், மக்கள் அதைப் பயன்படுத்திக் கொள்வார்கள். குறிப்பாக உங்கள் எதிரிகள் அதைப் பயன்படுத்திக் கொண்டு, உங்கள் பலவீனத்தின் அடிப்படையில் உங்களை மீண்டும் மீண்டும் காயப்படுத்துவார்கள்.

உங்கள் திட்டத்தின் வெற்றிக்கு ரகசியம் மிகப்பெரிய திறவுகோலாக உள்ளது. எனவே முழுமையடையாத அல்லது முழுமையான திட்டங்களை முன்கூட்டியே யாரிடமும் சொல்லாதீர்கள். ஏனெனில் உங்கள் எதிரிகள் உங்கள் வழியில் தடைகளை உருவாக்க முயற்சிப்பார்கள்.

இதையும் படிங்கஉங்ககிட்ட இந்த குணங்கள் இருந்தா போதும்.. கவலையே இருக்காது!

ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் வலியை அனுபவிக்கிறார்கள். ஆனால் நீங்கள் உங்கள் வலியை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டால், மக்கள் உங்களை பலவீனமானவராக நினைக்கத் தொடங்குவார்கள். தனது வலியையும் துன்பத்தையும் மறைத்து, மற்றவர்கள் முன் சிரித்து வாழ்வவனே வலிமையானவன் என்று சாணக்கியர் தெரிவிக்கிறார்கள்.

ஆச்சார்ய சாணக்கியரின் இந்தப் போதனை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போலவே இன்றும் பயனுள்ளதாக இருக்கிறது. அது வேலை, வணிகம் அல்லது தனிப்பட்ட வாழ்க்கை  இந்த மூன்று விஷயங்களையும் நீங்கள் ரகசியமாக வைத்திருந்தால்  உங்களுக்கு எதிராக சதி செய்பவர்களால் கூட எதுவும் செய்ய முடியாது என கூறுகிறார்.