Astrology: மேஷத்தில் இணைந்த சூரியன் – புதன்.. இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டம் தான்!
2025 மே 7 ஆம் தேதி தொடங்கும் புத ஆதித்ய ராஜ யோகம் 12 ராசிகளையும் பாதிக்கும். மிதுனம், சிம்மம், துலாம், மகரம் மற்றும் கும்ப ராசிகளுக்கு இது சாதகமான பலன்களைத் தரும் என சொல்லப்பட்டுள்ளது. மிதுன ராசிக்காரர்களுக்கு நிதி வளர்ச்சி, சிம்ம ராசிக்காரர்களுக்கு செல்வ பெருகும் என கணிக்கப்பட்டிருக்கிறது.

ஜோதிடப்பலன்
ஜோதிட சாஸ்திரத்தின் மீது பலருக்கும் அபரிமிதமான நம்பிக்கை இருக்கும். அதில் இருக்கும் கிரகங்களின் இயக்கம் மனித வாழ்க்கையில் ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது. இப்படியான நிலையில் 2025 மே 7 ஆம் தேதி முதல் சூரியன் புதனை சந்தித்துள்ளார். இதன் மூலம் புத ஆதித்ய ராஜ யோகம் உருவாகியுள்ளது. இந்த ராஜயோகம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பல்வேறு மாற்றங்களை உண்டாக்குகிறது. இந்த நிகழ்வானது 12 மாதங்களுக்கு மேஷ ராசியில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜோதிடத்தில் சூரிய பகவான் ஒவ்வொரு மாதமும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்வார். அந்த வகையில் பார்த்தால் கிரகங்களின் அதிபதியான புதனும் ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒருமுறை தனது ராசியை மாற்றுவார். இந்த இரண்டு கிரகங்களின் இணைவு சில ராசிக்காரர்களுக்கு என்னென்ன மாற்றத்தை உண்டாக்கும் என பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த இரு கிரகங்களின் இணைவு ஒரு நல்ல நேரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே 2025, மே 11 ஆம் தேதி குரு பகவான் இந்த ராசிக்கு இடம் பெயர உள்ள நிலையில் ராசிக்காரர்களின் நிதி நிலைமை மேம்படும். புதிய வருமான ஆதாரங்களுக்கான பாதைகள் புலப்படும். எவ்வளவு முதலீடு செய்தாலும் அதிலிருந்து லாபம் பெறுவீர்கள். வாழ்க்கையில் உறவு வட்டம் பெரிதாகும்.
சிம்மம்
சூரியன் அதிபதியாக கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த இருகிரகங்களின் சேர்க்கை செல்வம் பெருகும் காலத்திற்கான வாய்ப்புகளாக அமையும். ஏற்கனவே திருமணமானவர்கள், இனி திருமணம் செய்ய போகிறவர்கள் வாழ்க்கை மிகவும் நன்றாக இருக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சியும் வளமும் பெருகும். கல்வி மற்றும் வேலைவாய்ப்பு இரண்டிலும் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் உள்ளன. தொழில் விருத்தியாகும்.
துலாம்
சூரியன் மற்றும் புதனின் சேர்க்கை அமைந்த இந்த நேரம் துலாம் ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமானதாக உள்ளது, உங்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியால் நிறைந்திருக்கும். வேலையில் பதவி உயர்வு மற்றும் வியாபாரத்தில் லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதேசமயம் ஆரோக்கியமும் சாதகமாக இருக்கும். தொட்டதெல்லாம் பொன்னாகும்.
மகரம்
புதன் மற்றும் சூரியனின் இணைவு மகர ராசிக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது. இந்த ராசியினர் தங்கள் எல்லா முயற்சிகளிலும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. வாழ்க்கையின் அனைத்து நிலைகளுக்கும் பெற்றோர் மற்றும் பெரியவர்களிடமிருந்து ஆதரவு கிடைக்கும். இந்த ராசியினர் தனது குடும்பத்துடன் நல்ல நேரத்தை செலவிடுவார். இதனால் மகிழ்ச்சி தங்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு புத்திர ஆதித்ய ராஜயோகம் சிறப்பான பலன்களைத் தரும் என கணிக்கப்பட்டிருக்கிறது. இந்த இணைப்பால் வணிகர்கள் மற்றும் ஊழியர்கள் இருவரும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வியாபாரிகள் தொழிலில் லாபம் மற்றும் பெரிதாக மாற்றக்கூடிய சூழல் கைகூடும். ஊழியர்கள் தங்கள் இடத்தில் பெரும் வாய்ப்புகளை பெறுவார்கள். இது கும்ப ராசிக்காரர்களின் குடும்பத்திற்கும் ஒரு நல்ல நேரமாக அமையும்.
(ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் இந்த செய்தியானது கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது)