2026 ராசிபலன்: இந்த 5 ராசிகளுக்கு சொந்த வீடு, சொத்து, வாங்கும் யோகம் இருக்காம்!!
Astrology Predictions 2026: அடுத்த ஆண்டு ஐந்து ராசிக்காரர்களுக்குச் சொத்து விஷயங்களில் அதிர்ஷ்டமாக அமையும் என ஜோதிடங்கள் கணித்துள்ளன. அதன்படி, வீடு மற்றும் நிலம் வாங்குவது முதல் தங்கத்தில் முதலீடு செய்வது வரை, உங்கள் ராசி இந்த பட்டியலில் உள்ளதா என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
2025 ஆண்டு முடிவடையும் நிலையில், 2026-ஐ எதிர்நோக்கி பலரும் புதிய எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கிறார்கள். ஜோதிடக் கணக்குப்படி, 2026-ஆம் ஆண்டில் கிரகங்களின் பெயர்ச்சிகள் அனைத்து 12 ராசிகளின் வாழ்க்கையிலும் மாற்றங்களை ஏற்படுத்தும். கிரகங்களின் பெயர்ச்சிகள், குறிப்பாக சனி, குரு, ராகு – கேது ஆகியவற்றின் இயக்கங்கள், தனிப்பட்ட வாழ்க்கை, தொழில், பொருளாதாரம், குடும்பம் மற்றும் ஆரோக்கியம் போன்ற பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். சிலருக்கு கடந்த ஆண்டுகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் காணும் காலமாக இருக்கும்; மற்றவர்களுக்கு பொறுமை, திட்டமிடல் மற்றும் சரியான முடிவுகள் அவசியமாகும்.குறிப்பாக, சில ராசிக்காரர்களுக்கு வீடு மற்றும் நிலம் வாங்குவது முதல் தங்கத்தில் முதலீடு செய்வது வரை சொத்து தொடர்பான விஷயங்களில் பெரிய அதிர்ஷ்டம் கிடைக்கும் என ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர். அந்த 5 அதிர்ஷ்ட ராசிகள் யாவை என்பதை பார்க்கலாம்.
Also Read : காலை நேரத்தில் கண்ணாடி உடைந்தால் என்ன அர்த்தம்… வாஸ்து சொல்வதென்ன?
துலாம் ராசி:
2026-ஆம் ஆண்டு துலாம் ராசிக்காரர்களுக்கு மிகச் சிறப்பான ஆண்டாக அமையும். புதிய வீடு வாங்குவதற்கோ அல்லது கட்டுவதற்கோ நல்ல வாய்ப்புகள் உருவாகும். சனி பகவான் 6-ஆம் வீட்டிற்குப் பெயர்ச்சி ஆவதால், இதுவரை இருந்த தடைகள் நீங்கும். நிலம், வீடு தொடர்பான பிரச்சினைகள் உங்களுக்குச் சாதகமாக முடியும்.
மகர ராசி:
மகர ராசிக்காரர்களுக்கு 2026 ஆண்டு சொத்து விஷயங்களில் மகிழ்ச்சியான பலன்களை தரும். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டிற்கு மாறும் வாய்ப்பு உள்ளது. எதிர்பாராத பணவரவு கிடைக்கக்கூடும். அதன் மூலம் வீடு, நிலம் அல்லது மதிப்புள்ள சொத்துகளில் முதலீடு செய்ய வாய்ப்பு ஏற்படும்.
கும்ப ராசி:
கும்ப ராசிக்காரர்களுக்கு 2026-ஆம் ஆண்டு வீடு அல்லது நிலம் வாங்க ஏற்ற காலமாக இருக்கும். சனியின் ஆதரவான நிலை, சொத்து சேர்க்க உதவும். கட்டுமான பணிகளில் அவசரம் காட்டாமல் திட்டமிட்டு செயல்பட்டால், நிச்சயமாக இந்த ஆண்டு சொத்து வாங்கும் கனவு நிறைவேறும்.
சிம்ம ராசி:
சிம்ம ராசிக்காரர்களுக்கு 2026 ஆண்டு சிறந்த பலன்களை அளிக்கும். கிரகங்கள் சாதகமாக இருப்பதால் பெரிய தடைகள் எதுவும் இருக்காது. மூதாதையர் சொத்து தொடர்பான வழக்குகள் அல்லது சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்த சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற உங்கள் கனவு, இந்த ஆண்டில் நனவாகும்.
Also Read : பாதி வாளி நீர்.. குளியலறை முடி.. பாத்ரூமில் கவனிக்க வேண்டிய வாஸ்து விஷயங்கள்!
மேஷ ராசி:
மேஷ ராசிக்காரர்களுக்கு 2026 சொத்து வாங்க ஏற்ற ஆண்டாக இருக்கும். பணநெருக்கடிகள் மற்றும் கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். சேமிப்பு அதிகரிக்கும். வங்கி கடன்கள் எளிதில் கிடைக்கும். குடும்ப சொத்து தொடர்பான கருத்து வேறுபாடுகளும் சுமுகமாக தீரும்.
(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக மற்றும் ஜாதக நம்பிக்கையின்படி மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)