Aadi Pooram: ஆடிப்பூரம் நாளில் இந்த 5 பொருட்கள் வாங்கினால் செல்வம் கொட்டும்!

ஆடிப்பூரம், அம்மன் வழிபாட்டிற்குரிய முக்கிய நாளாக சாஸ்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நாளில் விரதமிருந்து வழிபட்டால் திருமணத் தடை, குழந்தைப் பேறு போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும் என நம்பப்படுகிறது. அதேசமயம் பச்சரிசி, கண்ணாடி வளையல் போன்ற பொருட்களை வாங்கி வீட்டில் வழிபடலாம்.

Aadi Pooram: ஆடிப்பூரம் நாளில் இந்த 5 பொருட்கள் வாங்கினால் செல்வம் கொட்டும்!

ஆடிப்பூரம்

Published: 

26 Jul 2025 15:29 PM

ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரத்தில் ஆடிப்பூரம் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்நாள் அம்மன் வழிபாட்டுக்குரிய மிக மிக விசேஷ நாளாக பார்க்கப்படுகிறது. அனைத்து பெண் தெய்வங்கள் கொண்ட கோயில்களிலும் இந்நாளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இத்தகைய ஆடிப்பூர வழிபாட்டில் நாம் பங்கேற்றால் திருமண தடை, குழந்தை பேறு, தொழில் வளர்ச்சி, கல்வியில் ஏற்றம் உள்ளிட்ட பல நிலைகளில் மாற்றம், பிரச்னைகள் தீரும் என நம்பப்படுகிறது. ஆடிப்பூர வழிபாட்டை நாம் வீட்டிலும் மேற்கொள்ளலாம். இந்நாள் பெயரை சொன்னாலே பெரும்பாலானோருக்கு அம்மன் கோயிலில் நடக்கும் வளைகாப்பு திருவிழா தான் நினைவுக்கு வரும். அப்படியான பட்சத்தில் நம்மால் முடிந்த அளவு கண்ணாடி வளையல் வாங்கி அம்மனுக்கு வழங்கலாம். இதனால் வாழ்க்கையில் ஏற்றம் கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது.

இதே ஆடிப்பூரம் நாளில். தான் பூமா தேவி உலக மக்களை காக்க அவதரித்ததாக நம்பப்படுகிறது. அதேசமயம் வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் அவதரித்த தினமாகவும் இந்நாள் கருதப்படுகிறது. இப்படியாக சைவ, வைணவ ஆகிய இரு சமயத்தாருக்கும் இந்நாள் மிகவும் முக்கியமான பண்டிகை தினமாகும்.

2025ம் ஆண்டு ஆடிப்பூரம் ஜூலை 28ம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. ஏற்கனவே அனைத்து கோயில்களிலும் 10 நாட்கள் திருவிழா தொடங்கி நடைபெற்றும் வருகிறது. இத்தகையாக பல்வேறு சிறப்புகள் வாய்ந்த ஆடிப்பூரம் நாளில் நாம் சில பொருட்களை வாங்கினால் புண்ணியம் என சொல்லப்படுகிறது. அதனைப் பற்றிக் காணலாம்.

Also Read: Aadi Friday: ஆடி வெள்ளிக்கிழமை வழிபாடு.. இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

என்னென்ன பொருட்கள் வாங்க வேண்டும்?

கல் உப்பு: ஆடிப்பூரம் நாளில் கோயிலுக்கு சென்று வழிபட்டால் மட்டும் போதாது. வீட்டிலும் வழிபட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த நிலையில் கல் உப்பை முதல் நாளே வாங்கி வைக்க வேண்டும். அதனை ஆடிப்பூர நாளின்ன் பிரம்ம முகூர்த்த நேரத்தில் வீட்டில் வழிபடலாம். மாலையில் விளக்கேற்றும்போது வைத்து வழிபடலாம்.

இனிப்பு பொருட்கள்: இந்நாளில் வெள்ளை, நாட்டுச் சர்க்கரை மற்றும் வெல்லம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை வீட்டில் வாங்கி வைத்து வழிபாட்டில் வைத்து பின்னர் பயன்படுத்தலாம்.

மஞ்சள் மற்றும் குங்குமம்: ஆடிப்பூரம் நாள் அம்பாளுக்குரிய நாள் என்பதால் இந்நாளில் மஞ்சள் கிழங்கு அல்லது மஞ்சள் தூள் வாங்க வேண்டும். மஞ்சளை மட்டும் தனியாக வாங்கக் கூடாது. இதனை குங்குமத்துடன் சேர்த்து வாங்கி வீட்டில் வைத்து வழிபட்டால் சுபகாரியங்கள் நடக்கும்.

பச்சரிசி: பச்சரிசி மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது. இந்நாளில் அதனை வாங்கி வீட்டில் வைத்து பயன்படுத்தலாம். பச்சரிசியால் செய்யப்பட்ட உணவுகளை மாலை வழிபாட்டில் படைக்கலாம்.

Also Read: அனைத்து வளங்களையும் அருளும் தையல்நாயகி அம்மன்.. இந்த கோயில் தெரியுமா?

கண்ணாடி வளையல்: ஆடிப்பூரம் நாள் என்றாலே அம்பாளுக்கு கண்ணாடி வளையல் மாலை அணிவிப்பது வழக்கமாகும். நீங்கள் கோயிலுக்கு சென்றாலும் சரி, வீட்டில் வழிபாட்டாலும் கண்ணாடி வளையலை மறக்கக்கூடாது. அதேசமயம் கோயிலில் வழங்கப்படும் வளையல் நம் கைக்கு சேரவில்லை என்ற எண்ணம் இருக்கக்கூடாது. அதனை வீட்டில் இருப்பவர்களுக்கு கொடுத்து மகிழ வேண்டும்.

(இறை மற்றும் ஆன்மிக நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)