AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பெண்களே! தினமும் இந்த 10 ஆன்மீக பழக்கங்களைப் பின்பற்றுங்கள்…

10 Spiritual Habits: பெண்கள் தினமும் வீட்டைச் சுத்தமாக வைத்திருத்தல், காலையிலும் மாலையிலும் குத்துவிளக்கு ஏற்றுதல், வாசலில் கோலமிடுதல் போன்ற பாரம்பரிய பழக்கங்களைக் கடைபிடிப்பது மங்களகரமானதாக நம்பப்படுகிறது. கோவிலில் பக்தியுடன் வழிபடுதல், மஞ்சள் பயன்படுத்துதல், ஆடை அணிவதில் ஒழுங்கைக் கடைபிடித்தல் ஆகியவையும் முக்கிய ஆன்மீக வழிமுறைகளாகக் கூறப்படுகின்றன.

பெண்களே! தினமும் இந்த 10 ஆன்மீக பழக்கங்களைப் பின்பற்றுங்கள்…
ஆன்மீக பழக்கங்கள்Image Source: magnific
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 03 Nov 2026 06:00 AM IST

இந்து மத நம்பிக்கைகளின்படி, பெண்கள் குடும்பத்தின் நலன் மற்றும் மகிழ்ச்சியில் முக்கியப் பங்கு வகிப்பவர்களாகக் (Woman Health) கருதப்படுகின்றனர். பெண்கள் அன்றாட வாழ்க்கையில் சில பாரம்பரிய ஆன்மீக பழக்கங்களைக் கடைபிடிப்பது வீட்டில் நேர்மறை எண்ணங்கள், அமைதி மற்றும் வளம் பெருக உதவும் என்று நம்பப்படுகிறது. அந்த வகையில் பெண்கள் தினமும் பின்பற்ற வேண்டியதாகக் கூறப்படும் 10 ஆன்மீக வழிமுறைகள் குறித்து பார்க்கலாம்.

1. ஆடை அணிவதில் கவனம்: பாரம்பரிய நம்பிக்கைகளின்படி, பெண்கள் ஆடை அணியும்போது ஒழுங்காகவும் நேர்த்தியாகவும் இருக்க வேண்டும். குறிப்பாக, புடவை அணியும்போது முந்தானையை சரியாகச் செருகிக்கொள்வதும், மாலை நேரங்களில் தலைவிரி கோலமாக இருப்பதைத் தவிர்ப்பதும் நல்ல பழக்கங்களாகக் கூறப்படுகின்றன.

2. கோவிலில் வழிபடும் முறை: ஆலயத்திற்குச் செல்லும்போது பணிவுடனும் பக்தியுடனும் இறைவனை வழிபட வேண்டும். மரபுப்படி பஞ்சாங்க நமஸ்காரம் செய்வது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. வழிபாட்டின்போது ஒழுக்கத்தையும் மரியாதையையும் கடைபிடிப்பது அவசியம்.

3. தீர்த்தம் பெறும் முறை: கோவிலில் தீர்த்தம் வாங்கும்போது இரு கைகளையும் இணைத்து மரியாதையுடன் பெற்றுக்கொள்ள வேண்டும். தீர்த்தம் சிந்தாமல் கவனமாக வாங்கி, பின்னர் தலையில் தொட்டு வணங்குவது பாரம்பரிய வழக்கமாக உள்ளது.

4. மஞ்சள் பயன்படுத்துதல்: திருமணமான பெண்கள் குளிக்கும்போது மஞ்சளைப் பயன்படுத்துவது பாரம்பரிய வழக்கங்களில் ஒன்றாகும். மஞ்சள் சருமப் பராமரிப்புக்கும் பயன்படுவதால், பழங்காலம் முதல் பெண்களின் அன்றாட அழகு பராமரிப்பில் முக்கிய இடம் பெற்றுள்ளது.

5. குத்துவிளக்கு ஏற்றுதல்: வீட்டில் தினமும் காலையிலும் மாலையிலும் குத்துவிளக்கு ஏற்றுவது மங்களகரமான செயலாக நம்பப்படுகிறது. ஐந்து முகங்களிலும் திரியிட்டு விளக்கேற்றுவது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. தினமும் முடியாவிட்டாலும் வெள்ளி, செவ்வாய் மற்றும் விசேஷ நாட்களில் விளக்கேற்றலாம்.

6. வீட்டு வாசலை சுத்தம் செய்தல்: காலையில் வீட்டின் வாசலை சுத்தம் செய்து தண்ணீர் தெளிப்பது பாரம்பரிய பழக்கமாகும். இதனால் சுற்றுப்புறம் தூய்மையாக இருப்பதுடன், கோலமிடுவதற்கும் ஏற்ற சூழல் உருவாகிறது.

7. கோலமிடும் திசை: வீட்டின் வாசலில் கோலமிடுவது மகாலட்சுமியை வரவேற்கும் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. பாரம்பரிய வாஸ்து நம்பிக்கைகளின்படி கிழக்கு அல்லது வடக்கு திசையை நோக்கிக் கோலமிடுவது சிறப்பானதாகக் கூறப்படுகிறது.

8. கோலத்தின் அமைப்பு: கோலமிடும்போது அதன் கோடுகள் தெற்கு திசையில் முடிவடையாமல் கிழக்கு, மேற்கு அல்லது வடக்கு திசையில் முடிவது நல்லது என்பது பாரம்பரிய நம்பிக்கையாக உள்ளது. தினமும் வாசலில் கோலமிடுவது வீட்டிற்கு மங்களம் சேர்க்கும் என்றும் நம்பப்படுகிறது.

9. இரட்டை இழைக் கோலம்: இரண்டு இணையான கோடுகளைக் கொண்டு போடப்படும் இரட்டை இழைக் கோலம் பாரம்பரியத்தில் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இது வீட்டிற்கு மங்களத்தையும் நேர்மறை ஆற்றலையும் வரவேற்பதுடன், குடும்பத்தில் ஒற்றுமை மற்றும் மன அமைதி நிலவ உதவும் என்பது ஆன்மீக நம்பிக்கை.

10. பசுவிற்கு உணவளித்தல்: இந்து மதத்தில் பசு மகாலட்சுமியின் அம்சமாகக் கருதப்படுகிறது. வீட்டிற்கு வரும் பசுவிற்கு புல், வாழைப்பழம் அல்லது சிறுதானியங்கள் வழங்குவது புண்ணியச் செயலாக நம்பப்படுகிறது. பசுவை மரியாதையுடன் உபசரிப்பது குடும்பத்திற்கு செல்வ வளத்தையும் நன்மைகளையும் கொண்டுவரும் என்பது ஐதீகம்.

பொறுப்புத்துறப்பு: ஆன்மிக நம்பிக்கைகள் மற்றும் பாரம்பரிய வழக்கங்களின் அடிப்படையில் இத்தகவல்கள் வழங்கப்படுகின்றன. இவற்றைப் பின்பற்றுவதால் பிரச்சினைகள் தீரும் அல்லது செல்வம் பெருகும் என்பதற்கு அறிவியல் ஆதாரம் இல்லை.

Follow Us