Ponneri Constituency Election 2026: அதிமுகவின் கோட்டையாக இருக்கும் பொன்னேரி சட்டமன்ற தொகுதி.. முக்கிய பிரச்சனைகள் என்ன? | TV9 Tamil News

Ponneri Constituency Election 2026: அதிமுகவின் கோட்டையாக இருக்கும் பொன்னேரி சட்டமன்ற தொகுதி.. முக்கிய பிரச்சனைகள் என்ன?

Published: 

10 Apr 2026 22:33 PM

 IST

2026 சட்டமன்ற தேர்தலைப் பொருத்தவரை, காங்கிரஸ் தரப்பில் மீண்டும் துரை சந்திரசேகருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அதிமுக தரப்பில் பாலராமனுக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றி கழகம் சார்பில் டாக்டர் எம்.எஸ். ரவி, நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜாத்தி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதனால், இந்த நான்கு வேட்பாளர்களுக்கிடையே 2026 சட்டமன்ற தேர்தலில் கடுமையான போட்டி நிலவுகிறது.

1 / 6தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், முக்கியமான சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றாக பொன்னேரி தொகுதி பார்க்கப்படுகிறது. இது திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளதுடன், தனித் தொகுதியாக (SC) விளங்குகிறது. திருவள்ளூர் மக்களவை தொகுதி உட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளில் இதுவும் ஒன்றாகும்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், முக்கியமான சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றாக பொன்னேரி தொகுதி பார்க்கப்படுகிறது. இது திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளதுடன், தனித் தொகுதியாக (SC) விளங்குகிறது. திருவள்ளூர் மக்களவை தொகுதி உட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளில் இதுவும் ஒன்றாகும்.

2 / 6

பொன்னேரி சட்டமன்ற தொகுதி என்பது பொன்னேரி, மின்னூர், ஆரணி, அனகாபுத்தூர், மீஞ்சூர், புழல் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கியதாகும். நகர்ப்புற மற்றும் கிராமப்புற வாக்காளர்கள் கலவையாக உள்ள முக்கிய தொகுதியாக இது பார்க்கப்படுகிறது. தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சாலை ஊழியர்கள் அதிகமாக உள்ள பகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது.

3 / 6

எண்ணெய், மின் உற்பத்தி மற்றும் துறைமுகம் சார்ந்த தொழில்கள் இங்கு அதிகமாக உள்ளன. மேலும், அருகில் காட்டுப்பள்ளி துறைமுகம் அமைந்துள்ளதால், மீனவர் சமுதாயமும் அதிகமாக உள்ளது. என்.எல்.சி, எஸ்.எல்.சி போன்ற தொழில்துறை அமைப்புகளும் இந்த பகுதியில் செயல்பட்டு வருகின்றன.

4 / 6

2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எடுத்துக்கொண்டால், காங்கிரஸ் வேட்பாளர் துரை சந்திரசேகர் 94,528 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இரண்டாவது இடத்தில் அதிமுக வேட்பாளர் பாலராமன் 84,839 வாக்குகள் பெற்றிருந்தார். இந்த தொகுதியை வரலாற்று ரீதியாக பார்க்கும்போது, இது அதிமுகவின் கோட்டையாக கருதப்படுகிறது. 1977ஆம் ஆண்டு முதல் தற்போது வரை அதிமுக ஏழு முறைவும், திமுக இரண்டு முறைவும் வெற்றி பெற்றுள்ளன.

5 / 6

இந்த தொகுதியில் மக்கள் முன்வைக்கும் முக்கிய பிரச்சினைகள் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் தொழிற்சாலை மாசு ஆகும். அருகிலுள்ள நீர்நிலைகளில் தொழிற்சாலைகளின் கழிவுகள் கலப்பதால் குடிநீர் மாசடைவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருவதால், இதற்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. அதேபோல், மீனவர்களின் பிரச்சினைகளும் இந்த தொகுதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

6 / 6

2026 சட்டமன்ற தேர்தலைப் பொருத்தவரை, காங்கிரஸ் தரப்பில் மீண்டும் துரை சந்திரசேகருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அதிமுக தரப்பில் பாலராமனுக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றி கழகம் சார்பில் டாக்டர் எம்.எஸ். ரவி, நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜாத்தி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதனால், இந்த நான்கு வேட்பாளர்களுக்கிடையே 2026 சட்டமன்ற தேர்தலில் கடுமையான போட்டி நிலவுகிறது. வெற்றி வாய்ப்புகள் மற்றும் மக்கள் மனநிலை ஆகியவை, உள்ளூர் பிரச்சினைகள் மற்றும் கட்சிகள் வழங்கும் வாக்குறுதிகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us