Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

உங்கள் காரில் கிருஷ்ணர் சிலை வைக்க ஆசையா?.. அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க!!

வீட்டில் தேவையான இடத்தைப் போல, காரின் டாஷ்போர்டையும் வாரம் ஒருமுறை சுத்தம் செய்வது நல்லது. அதேபோல், பிரேக் அடிக்கும் நேரம், பாதை குழிவுகள், திடீர் திருப்பங்கள்.இவை அனைத்தும் சிலையை கவிழ்த்துவிடலாம். எனவே சிலை இறுக்கமாகக் இருப்பதை உறுதி செய்யுங்கள். காருக்குள் தூபம், தீபம் ஏற்றுவது பாதுகாப்புக்கு ஆபத்து. ஆன்மீக செயல்களை வீட்டில்தான் செய்ய வேண்டும்.

esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 08 Dec 2025 15:14 PM IST
காரில் கிருஷ்ணர் சிலை வைப்பது என்பது பலருக்கும் ஒரு ஆன்மீக நிம்மதியையும், பாதுகாப்பு உணர்வையும் அளிக்கிறது. அது வெறும் டாஷ்போர்டில் சிலை வைப்பது மட்டுமல்ல; வீட்டில் எப்படி மரியாதையுடன் வைத்திருக்கிறோமோ, அதுபோலவே காரிலும் கவனமாக வைத்திருக்க வேண்டும். காரில் கிருஷ்ணர் சிலை வைக்க விரும்புபவர்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றலாம்.

1 / 5
காரில் வெப்பம் அதிகமாக இருக்கும், அதிர்வு மற்றும் குலுக்கலும் அதிகம் ஏற்படும். அதனால் சிறிய அளவில் வலுவான, விரைவில் சேதமடையாத ஒரு சிலையைத் தேர்வு செய்வது நல்லது. சிலையை எங்கு வைப்பது என்பது அதே அளவு முக்கியம். அது ஓட்டுனரின் முன் பார்வையை மறைக்கக்கூடாது. பொதுவாக பலர் நடுவே வைப்பார்கள்; ஆனால் அது தடையாக இருந்தால் சிறிது பக்கமாக மாற்றுங்கள். அத்துடன், சிலை நகராமல் இருக்க  வலுவான அடிப்பகுதியை பயன்படுத்துவது அவசியம்.

2 / 5
காரில் தூசி வேகமாக தேங்கும். வீட்டில் தேவையான இடத்தைப் போல, காரின் டாஷ்போர்டையும் வாரம் ஒருமுறை சுத்தம் செய்வது நல்லது. அதேபோல், பிரேக் அடிக்கும் நேரம், பாதை குழிவுகள், திடீர் திருப்பங்கள்.இவை அனைத்தும் சிலையை கவிழ்த்துவிடலாம். எனவே சிலை இறுக்கமாகக் இருப்பதை உறுதி செய்யுங்கள். காருக்குள் தூபம், தீபம் ஏற்றுவது பாதுகாப்புக்கு ஆபத்து. ஆன்மீக செயல்களை வீட்டில்தான் செய்ய வேண்டும்.

3 / 5
ஏர்பேக் இருக்கும் பகுதிக்கு அருகில் வைக்க கூடாது. அவ்வாறு வைப்பதன் மூலம், ஏர்பேக் திறக்கும்போது, சிறிய சிலை கூட வேகமாக பறந்து காயப்படுத்தும் அபாயம் உண்டு.டாஷ்போர்டில் மிக அதிகமாக பொருட்களை சேர்க்காதீர்கள், ஒரு சிலை போதுமானது. அதிக மலர் மாலைகள், ஸ்டிக்கர்கள், பல தெய்வங்களின் சிலைகள் என இவை அனைத்தும் குழப்பத்திற்க்கும், கவனச்சிதறலுக்கும் காரணமாக அமையும்.

4 / 5
சிலை விரிசலாகவோ அல்லது உடைந்திந்தாலோ, அதை காரில் வைக்க வேண்டாம். மேலும், காரில் கிருஷ்ணர் சிலை வைப்பது ஆன்மீக அமைதியையும் மன நிம்மதியையும் தரலாம். ஆனால் அதற்கு இணையான  மரியாதை கொடுக்க வேண்டும். பாதுகாப்பையும் பக்தியையும் கருத்தில் கொண்டு சிலையை வைத்தால், பயணமும் மனமும்  நிம்மதியாக இருக்கும்.

5 / 5