Diwali 2025: பட்டாசு வெடித்து தோல் மீது காயமா..? முதலுதவியாக என்ன செய்யலாம்? எதை செய்யவே கூடாது?

Diwali Safety Tips: குழந்தைகளுக்கு தங்கள் கைகளைப் பயன்படுத்தி பட்டாசுகளை வெடிப்பதற்குப் பதிலாக நீண்ட ஊதுபத்தியை பயன்படுத்த கற்றுக் கொடுங்கள். ஒருமுறை பற்ற வைத்தவுடன், பட்டாசுகளிலிருந்து உடனடியாக குறைந்தது 10-15 அடி தூரத்தில் தள்ளி நிற்க கற்று கொடுத்தால் தீக்காயம் ஏற்படாது.

Diwali 2025: பட்டாசு வெடித்து தோல் மீது காயமா..? முதலுதவியாக என்ன செய்யலாம்? எதை செய்யவே கூடாது?

வெடி வெடிக்கும்போது செய்ய வேண்டிய விஷயங்கள்

Published: 

18 Oct 2025 17:53 PM

 IST

தீபாவளி (Diwali) நாட்களில் பட்டாசு வெடிக்கும்போது ஒரு சிறிய கவனக்குறைவு பெரிய விபத்துக்கு வழிவகுக்கும். எனவே, தீபாவளியின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அவசியம் மட்டுமல்ல, உயிர் காக்கவும் உதவும். தீபாவளியன்று பட்டாசு (Crackers) வெடிக்கும்போது யாராவது தீக்காயம் அடைந்தால் என்ன செய்வது என்பது என்பதை தெரிந்து கொள்வோம். அதேநேரத்தில், மக்கள் கொஞ்சம் விழிப்புணர்வுடன் இருந்தால், இந்த சம்பவங்களைத் தடுக்கலாம். தீபாவளி காலக்கட்டத்தில் ஏற்படும் தீக்காயங்களில் சுமார் 60% சிறுவர்களுக்குதான் ஏற்படுகிறது. சிறுவர்கள் இயல்பிலேயே அதிக உற்சாகத்துடன் இருப்பதால், பட்டாசுகள் போன்றவற்றில் அவர்களுக்கு இருக்கும் ஆர்வம் மற்றும் கவனக்குறைவு தீக்காயத்தை ஏற்படுத்திவிடுகிறது. இதன் காரணமாக, குழந்தைகள் ஒருபோதும் தனியாக பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்கக்கூடாது.

தண்ணீர், மணல்களை அருகில் வையுங்கள்:

ஒவ்வொரு குடும்பமும் பட்டாசு வெடிப்பதற்கு முன்பு ஒரு வாளி தண்ணீர், ஒரு வாளி மணல் மற்றும் ஒரு தடிமனான போர்வையை தங்கள் அருகில் வைத்து கொள்வது சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும். நாம் வாளியில் எடுத்து வைத்திருக்கும் மணலானது வைக்கோல், பட்டாசுகள் அல்லது சிறிய வெடிப்புகளை அடக்குவதில் பயனுள்ளதாக இருக்கும். அதேநேரத்தில், தண்ணீர் மற்றும் போர்வைகள் ஒரு நபரின் மீது எதிர்பாராத விதமாக தீ பிடித்து கொண்டால் தடுக்க உதவும்.

ALSO READ: பசுமை பட்டாசுகள் என்றால் என்ன? இது மாசுபாட்டை ஏற்படுத்தாதா..?

சரியாக பட்டாசு வெடிக்கும் நுட்பம்:

குழந்தைகளுக்கு தங்கள் கைகளைப் பயன்படுத்தி பட்டாசுகளை வெடிப்பதற்குப் பதிலாக நீண்ட ஊதுபத்தியை பயன்படுத்த கற்றுக் கொடுங்கள். ஒருமுறை பற்ற வைத்தவுடன், பட்டாசுகளிலிருந்து உடனடியாக குறைந்தது 10-15 அடி தூரத்தில் தள்ளி நிற்க கற்று கொடுங்கள். ஒருபோதும் பட்டாசை கையில் பிடித்துக் கொண்டு தூக்கி எரியவோ அல்லது ஒருவருக்கு பின்னாடி வைப்பதை தவறு என்றும் சொல்லி கொடுங்கள். ஏனெனில் இது மிகவும் ஆபத்தானது. ஒரு முறை தீ வைத்த பட்டாசுகள் வெடிக்கவில்லை என்றால், அவற்றை மீண்டும் பற்றவைக்க முயற்சிக்க வேண்டாம் என்று சொல்லி கொடுங்கள். இதுவும் விபத்திற்கு வழிவகுக்கும்.

தயார் நிலையில் முதலுதவி பெட்டியை வையுங்கள்:

ஒரு சிறிய முதலுதவி பெட்டி உங்கள் முழு குடும்பத்தையும் ஒரு பெரிய விபத்தில் இருந்து காப்பாற்றும். தீபாவளி போன்ற நாட்கள் மட்டுமின்றி ஒவ்வொரு வீட்டிலும் மற்ற நாட்களில் முதலுதவி பெட்டி இருக்க வேண்டும். அதன்படி, அதில் தீக்காய கிரீம், பாதுகாப்பு கட்டுகள், கிருமி நாசினி லோஷன் மற்றும் வலி நிவாரணிகள் இருக்க வேண்டும். தீக்காயமடைந்த பகுதியை குளிர்ந்த நீரில் கழுவிய பின், சில்வர் சல்ஃபாடியாசின் போன்ற தீக்காய கிரீம் தடவவும்.

கண் பாதுகாப்பு:

தீபாவளியின் போது கண் தொடர்பான விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன. பட்டாசுகளிலிருந்து வரும் புகை அல்லது தீப்பொறிகள் சில நேரங்களில் கண்களுக்குள் நுழையலாம். இது எரிச்சலையும், சில சமயங்களில் நிரந்தர சேதத்தையும் கூட ஏற்படுத்தும். பட்டாசு புகை அல்லது துப்பாக்கிப் பொடி கண்களில் பட்டால், உடனடியாக அவற்றைத் தேய்ப்பதற்குப் பதிலாக குளிர்ந்த, சுத்தமான தண்ணீரில் கழுவவும். கண்களை தேய்ப்பது கார்னியாவை சேதப்படுத்தும். தீபாவளியன்று வெளிப்படையான பாதுகாப்பு கண்ணாடிகளை அணிவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ALSO READ: தீபாவளி நாளில் இந்த தவறுகளை செய்யாதீர்கள்.. பெரும் விபத்தை தவிர்க்கலாம்..!

தீக்காயங்கள் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது?

  • தீக்காயம் ஏற்பட்ட இடத்தை உடனடியாக குளிர்ந்த நீரில் கழுவலாம். இது வீக்கத்தைக் குறைத்து கொப்புளங்களைத் தடுக்கும்.
  • தீக்காயம் ஏற்பட்டால் இறுக்கமான ஆடைகள் மற்றும் நகைகளை உடனடியாக அகற்றவும். தீக்காயம் வீக்கத்தை ஏற்படுத்தும்.
  • தீக்காயம் ஏற்பட்டால் சில்வர் சல்ஃபாடியாசின் போன்ற தீக்காய கிரீம் தடவவும்.
  • தீக்காயத்தினால் ஏற்படும் தொற்றுநோயைத் தடுக்க காயத்தை லேசான, சுத்தமான கட்டுடன் மூடவும்.
  • தீக்காயம் ஏற்பட்டவுடன் எக்காரணத்தை கொண்டும் பல் துலக்கும் பேஸ்ட், மஞ்சள், கடலை மாவு அல்லது வேறு எந்த வீட்டு வைத்தியங்களையும் மேற்கொள்ள வேண்டாம்.
  • காயம் ஏற்பட்ட இடத்தின் மீது நேரடியாக ஐஸ் கட்டியைப் பயன்படுத்த வேண்டாம், ஏனெனில் அது எரிச்சலை ஏற்படுத்தும்.
  • தீக்காயத்தால் சருமத்தில் ஏற்படும் கொப்புளங்களை உடைக்காதீர்கள். காயத்தை அழுத்தி தேய்க்காதீர்கள்.