Health Tips: குளிருக்கு பயம்..! போர்வைக்குள் முகத்தை இறுக்க மூடி தூங்குகிறீர்களா? இந்த பிரச்சனைகள் வரலாம்!
Winter Sleeping Tips: முகத்தை மூடி தூங்கும்போது குறைந்த அளவு ஆக்ஸிஜன் மற்றும் அதிக கார்பன் டை ஆக்சைடு அளவுகள் தலைவலி, தலைச்சுற்றல், அமைதியின்மை மற்றும் தூக்கமின்மையை ஏற்படுத்தும். சில நேரங்களில், காலையில் எழுந்ததும், ஒரு முழு இரவு தூக்கத்திற்குப் பிறகும் உங்களுக்கு அதிகபடியான சோர்வை கொடுக்கலாம்.

சரியான தூக்க முறை
குளிர்காலத்தில் (Winter) இரவு நேரங்களில் குளிர் தீவிரமடையும் போது, தடிமனான மற்றும் கனமான போர்வைகளுக்குள் இறுக்கமாகப் படுத்து சுகமான உறங்குவது (Sleeping) பலரும் வழக்கமாக கொண்டுள்ளனர். இரவு நேரங்களில் பலரும் தங்களை அறியாமலேயே உடலை சூடாக வைத்திருக்க போர்வையை தங்கள் முகத்திற்கு மேலே இழுத்து மூடி கொள்கிறார்கள். ஆனால் இப்படியான பழக்கம் உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்றால் உங்களால் நம்ப முடியுமா..? நிபுணர்களின் கூற்றுப்படி, தூங்கும் போது முகத்தை மூடுவது சுவாசத்தைத் தடுத்து, தூய்மையான காற்றை உள்ளே விடாது என்று கூறுகின்றனர்.
ALSO READ: குளிர்காலத்தில் குறையும் நீர்ச்சத்து.. சிறுநீரக கற்கள் வருவதற்கான அறிகுறிகள் இதுதான்!
போர்வையை இழுத்து மூடி தூங்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்:
இரவு நேரத்தில் குளிரும்போது முகத்தை மூடி தூங்கும்போது, சில நேரங்களில் தூக்கத்தின் தரத்தை பாதிக்கலாம். அப்படி இல்லையென்றால், தூக்கம் வராமல் தடுக்கலாம். குறிப்பாக நுரையீரல் பிரச்சினைகள் உள்ளவர்கள் முகத்தை மூடி இறுக்கமாக தூங்கும்போது சுவாசிப்பதில் பிரச்சனைகளை எதிர்கொள்ளலாம். மேலும், நீண்ட நேரம் அவ்வாறு செய்வது உடலில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. தொடர்ந்து, வாய் மற்றும் மூக்கை போர்வையின் கீழ் மூடி தூங்கும் போது, வெளியில் இருந்து வரும் ப்ரஷான காற்று குறைவாக உள்ளே வரும். இத்தகைய சூழ்நிலையில், அந்த நபர் அவர்கள் வெளியேற்றும் கார்பன் டை ஆக்சைடை மீண்டும் மீண்டும் போர்வைக்குள் சுற்றி கொண்டு இருக்கும். இது ஆக்ஸிஜன் அளவைக் குறைக்க செய்யும்.
தலைவலி:
முகத்தை மூடி தூங்கும்போது குறைந்த அளவு ஆக்ஸிஜன் மற்றும் அதிக கார்பன் டை ஆக்சைடு அளவுகள் தலைவலி, தலைச்சுற்றல், அமைதியின்மை மற்றும் தூக்கமின்மையை ஏற்படுத்தும். சில நேரங்களில், காலையில் எழுந்ததும், ஒரு முழு இரவு தூக்கத்திற்குப் பிறகும் உங்களுக்கு அதிகபடியான சோர்வை கொடுக்கலாம். அதிக நேரம் முகத்தை மூடி தூங்கும்போது வெப்பத்தையும் ஈரப்பதத்தையும் போர்வைக்குள் தக்க வைத்துக் கொள்ளும். இது இரவில் வியர்த்தல், அடிக்கடி விழித்தெழுதல் போன்றவற்றிற்கு வழிவகுக்கும். நல்ல தூக்கத்திற்கு சீரான உடல் வெப்பநிலையை பராமரிப்பது அவசியம்.
இப்படியாக தூங்கும் பழக்கம் சிலருக்கு மிகவும் ஆபத்தானதாக மாறலாம். அதாவது ஆஸ்துமா, சிஓபிடி அல்லது ஸ்லீப் அப்னியா உள்ளவர்களுக்கு ஏற்கனவே உணர்திறன் வாய்ந்த சுவாசம் இருக்கும். இது குழந்தைகள் மற்றும் ஆஸ்துமா உள்ளவர்களுக்கு மூச்சு திணறலை ஏற்படுத்தலாம்.
ALSO READ: காலையில் செய்ய வேண்டிய முக்கிய 3 விஷயங்கள்.. இவை ஆற்றலை அதிகரிக்கும்..!
காற்றோட்டம் தேவை:
குளிர் மற்றும் வறண்ட காற்று, மூடிய அறைகள் மற்றும் குளிர்காலத்தில் மோசமான காற்றோட்டம் ஆகியவை சுவாசப் பிரச்சினைகளை அதிகரிக்கின்றன. இரவில் காற்றோட்டத்தை மேலும் கட்டுப்படுத்துவது ஆபத்தை அதிகரிக்கக்கூடும். நீங்கள் சூடான உணர்வை பெற வேண்டும் எனில், உங்கள் முகத்தை விட உங்கள் உடலை மறைப்பது நல்லது. அடர்த்தி மிகுந்த ஆடைகளை அணிவது பாதுகாப்பானது. மேலும், போர்வையை உங்கள் தோள்கள் வரை வைத்திருங்கள். இது குளிரைத் தவிர்க்கவும் சுவாசிக்கவும் உதவும்.