Food Recipes: ஆயில் இல்லா ஆரோக்கிய காலை உணவு.. குறைந்த நேரத்தில் இப்படி குக் செய்து அசத்துங்க!
Oil Free Breakfast: எண்ணெய் இல்லாமல் செய்யக்கூடிய மூன்று ஆரோக்கியமான காலை உணவு வகைகளை இந்தக் கட்டுரை விளக்குகிறது. பனீர் கார்ன் சாலட், ஓட்ஸ் உப்புமா மற்றும் உருளைக்கிழங்கு ரொட்டி ஆகியவை எளிதில் வீட்டில் தயாரிக்கக்கூடியவை. இவை நேரம் மிச்சப்படுத்தும் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. சுவையான இந்த உணவுகளை தயாரிக்கும் முறைகள் விவரிக்கப்பட்டுள்ளன.

ஆயில் இல்லா ஆரோக்கிய உணவுகள்
நமது உணவுப் பழக்கவழக்கங்களே நமது ஆரோக்கியத்திற்கு (Healthy Food) சிறந்த பலனை தரும். தவறான உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் துரித உணவுகள் ஒன்றல்ல, இரண்டல்ல, உடலில் பல நோய்களுக்கு மூல காரணமாக அமைந்துவிடுகிறது. அதன்படி, இன்று இந்த கட்டுரையில் எண்ணெய் இல்லாமல் தயாரிக்கப்படும் சில ஆரோக்கியமான மற்றும் அதேநேரத்தில் சுவையான காலை உணவு வகைகளை பற்றி தெரிந்துகொள்வோம். இவற்றை வீட்டிலேயே எளிதாக செய்யலாம். இவற்றை தயாரிக்க அதிக நேரமும் எடுக்காது. அதன்படி, எண்ணெய் இல்லாமல் (Oil Free Breakfast) சமைக்கக்கூடிய காலை உணவு 3ஐ பற்றி தெரிந்து கொள்வோம்.
பனீர் கார்ன் சாலட்:
நீங்கள் காலை உணவை சுவையாகவும், ஆரோக்கியமானதாகவும் சாப்பிட விரும்பினால், பனீர் கார்ன் சாலட் சிறந்த உணவாகும். இதை தயாரிக்க முதலில் ஒரு நான்-ஸ்டிக் பாத்திரத்தை எடுத்து, அதில் பனீர் துண்டுகளை பொன்னிறமாகும் வரை வறுக்கவும், அதன் பிறகு நறுக்கிய வெங்காயம், தக்காளி மற்றும் கார்ன் ஆகியவற்றை சேர்த்து பனீருடன் வதக்கவும். இவை அனைத்தையும் நன்றாக வதங்கியதும் மிளகு பொடி காரத்திற்கு ஏற்ப சேர்த்து, தேவையான அளவு உப்பும் சேர்த்து கொள்ளலாம். கடைசியாக இவற்றை இறக்கி அதில், சாட் மசாலா மற்றும் எலுமிச்சை சாற்றை சேர்த்து பரிமாறினால் பனீர் கார்ன் சாலட் ரெடி.
ஓட்ஸ் உப்புமா:
5 நிமிடத்தில் அவசரமாகவும், அதேநேரத்தில் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், உங்கள் சிறந்த உணவு ஓட்ஸ் உப்புமாதான். இதை தயாரிக்க, முதலில் ஓட்ஸை சுடுதண்ணீரில் போட்டு வேகவைத்து கொள்ளவும். அதன்பிறகு, வெங்காயம் மற்றும் தக்காளியுடன் கேரட், பீன்ஸ் போன்ற காய்கறிகளையும் நீங்கள் சேர்த்து கொள்ளலாம். இதன்பிறகு, நான் – ஸ்டிக் பாத்திரத்தை வைத்து ஓட்ஸ் மற்றும் காய்கறிகளை கொட்டி, 5-10 நிமிடங்கள் வெந்தபிறகு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து சிறிதுநேரம் மீண்டும் கிளறவும். அவ்வளவுதான், சுவை மற்றும் ஆரோக்கியமான ஓட்ஸ் உப்புமா ரெடி.
உருளைக்கிழங்கு ரொட்டி:
எண்ணெய் சேர்க்காமலும் உருளைக்கிழங்கு ரொட்டி செய்து அசத்தலாம். அதற்கு முதலில் உருளைக்கிழங்கை வேகவைத்து, பின்னர் அதனை நன்றாக மசித்து எடுத்துக்கொள்ளவும். இதனுடன், அரிசி மாவு மற்றும் கோதுமை மாவு சிறிது பிசைந்து கொள்ளவும். தேவையான அளவில் உருண்டை பிடித்து சப்பாத்தி போல் உருட்டி கொள்ளவும். அதன்பிறகு தயாரிக்கப்பட்ட ரொட்டிகளை ஒவ்வொன்றாக ஒரு நான்-ஸ்டிக் பாத்திரத்தில் சுட வேண்டும். இதனை தயிர் அல்லது ஏதேனு சட்னியுடன் சாப்பிட்டால் சுவை தாறுமாறாக இருக்கும்.