AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கோவை டூ காஷ்மீர்: மிகக்குறைந்த விலையில் IRCTC-யின் ‘ஜில்’ என ஒரு விமான சுற்றுலா!

IRCTC Kashmir Tour: கோவையிலிருந்து காஷ்மீர் செல்லத் துடிக்கும் பயணிகளுக்கு ஒரு நற்செய்தி! இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) கோடை காலத்தை முன்னிட்டு மிகக் குறைந்த செலவில் ஒரு அட்டகாசமான விமான சுற்றுலாத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனைப் பற்றிய விரிவான தகவல்களை இங்கே காணலாம்.

கோவை டூ காஷ்மீர்: மிகக்குறைந்த விலையில் IRCTC-யின் ‘ஜில்’ என ஒரு விமான சுற்றுலா!
கோவை டூ காஷ்மீர்Image Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 30 Apr 2026 14:45 PM IST

இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC), சுற்றுலாப் பயணிகளின் விருப்பத்திற்கேற்ப அவ்வப்போது பல்வேறு சிறப்புத் தொகுப்புகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில், தற்போது தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவையிலிருந்து, “பூலோக வைகுண்டம்” என்று போற்றப்படும் காஷ்மீருக்கு நேரடி விமான சுற்றுலாத் திட்டத்தை அறிவித்துள்ளது. உள்நாட்டு சுற்றுலாவை ஊக்குவிக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம், நடுத்தர குடும்பத்தினரும் எளிதில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு உருவாக்கப்பட்டுள்ளது. கோவையிலிருந்து காஷ்மீர் செல்லத் துடிக்கும் பயணிகளுக்கு ஒரு நற்செய்தி! இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) கோடை காலத்தை முன்னிட்டு மிகக் குறைந்த செலவில் ஒரு அட்டகாசமான விமான சுற்றுலாத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

அரசு ஊழியர்களுக்கான எல்.டி.சி (LTC) சலுகைகள்

இந்தச் சுற்றுலாத் திட்டத்தில் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் தங்களது விடுமுறை பயணச் சலுகையை (Leave Travel Concession – LTC) இதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். இதன் மூலம் அரசுப் பணியில் இருப்பவர்கள் தங்களது குடும்பத்தினருடன் குறைந்த செலவில் இமயமலைப் பகுதிகளுக்குச் சென்று வர ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கும், ஓய்வு பெற்றவர்களுக்கும் ஏற்ற வகையில் தங்குமிடம் மற்றும் உணவு வசதிகள் மிக நேர்த்தியாகத் திட்டமிடப்பட்டுள்ளன.

சுற்றுலாப் பயணத்தின் முழு விவரம் மற்றும் இடங்கள்

இந்தக் கண்கவர் சுற்றுலாப் பயணம் வரும் மே மாதம் 21-ஆம் தேதி கோவையிலிருந்து தொடங்குகிறது. மொத்தம் 7 நாட்கள் கொண்ட இந்தப் பயணத்தில், காஷ்மீரின் மிக முக்கியமான சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் உள்ளடக்கப்பட்டுள்ளன. குறிப்பாக:

  • பனி படர்ந்த மலைச்சிகரங்களைக் கொண்ட குல்மார்க்.
  • தங்கப் புல்வெளிகள் நிறைந்த சோன்மார்க்.
  • அமைதி தவழும் நதிக்கரைகளைக் கொண்ட பஹல்காம்.
  • இயற்கை எழில் கொஞ்சும் ஸ்ரீநகர் மற்றும் உலகப்புகழ் பெற்ற டால் ஏரி.
  • இங்குள்ள முகலாயத் தோட்டங்கள், அழகான பூங்காக்கள் மற்றும் ஷிகாரா படகு சவாரி போன்றவற்றை அனுபவிக்கச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முன்பதிவு மற்றும் கூடுதல் தகவல்கள்

இந்தச் சுற்றுலாவில் இணைய விரும்புபவர்கள் மற்றும் கட்டண விவரங்களைத் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் ஐ.ஆர்.சி.டி.சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.irctctourism.com என்ற முகவரியைப் பார்க்கலாம். மேலும், நேரடியாகத் தொடர்பு கொண்டு சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள 90031 40655 மற்றும் 82879 32064 ஆகிய அலைபேசி எண்களை அணுகலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இடங்கள் குறைவாக இருப்பதால், காஷ்மீர் கனவை நனவாக்க விரும்புபவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டுப் பதிவு செய்வது அவசியமாகும்.

Follow Us