Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

உலக தேநீர் தினம் 2025: ஆரோக்கியத்துக்கு சிறந்தது க்ரீன் டீயா? பிளாக் டீயா?

Healthier tea choice : ஒவ்வொரு ஆண்டும் மே 21 ஆம் தேதி உலக தேநீர் தினம் கொண்டாடப்படுகிறது. உலக அளவில் பல வகைகளில் தேநீர் இருந்தாலும் கிரீன் டீ மற்றும் பிளாக் டீ மக்களிடையே பிரபலமாக இருந்து வருகிறது. இதில் எந்த வகை டீ சிறந்தது என இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

உலக தேநீர் தினம் 2025: ஆரோக்கியத்துக்கு சிறந்தது க்ரீன் டீயா? பிளாக் டீயா?
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Published: 21 May 2025 21:29 PM

ஒவ்வொரு ஆண்டும் மே 21ஆம் தேதி உலக தேநீர் தினம் (International Tea Day) கொண்டாடப்படுகிறது. உலகமெங்கும் மக்கள் தினசரி  அதிகம் அருந்தும் பானமாக தேநீர் இருக்கிறது. டீ (Tea) நமது வாழ்க்கையோடு இரண்டற கலந்து விட்டது. பெரும்பாலான மக்கள் டீ இல்லாம் தங்கள் அன்றைய நாளை தொடங்குவதில்லை. மேலும் மகிழ்ச்சி, கவலை என அனைத்து விதமான உணர்வுகளுக்கும் டீ துணையாகவும் மருந்தாகவும் இருக்கிறது. நண்பர்களுடன் நாம் அருந்தும் ஒரு டீ அன்றைய நாளை மகிழ்ச்சிகரமாக மாற்றிவிடும். பரபரப்பான அலுவலக வேலை நேரத்துக்கு இடையில் நாம் எடுக்கும் தேநீர் இடைவேளை நம்மை ரிஃப்ரெஷாக மாற்றும். டீயில் பல ஆரோக்கிய நன்மைகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக நாம் அருந்தும் ஒரு டீ நமக்கு புத்துணர்வு அளிப்பதோடு நமது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் தருகிறது.

பலவிதமான டீ தற்போது விற்பனை செய்யப்படுகின்றன. கிரீன் டீ, பிளாக் டீ, மசாலா டீ, துவங்கி சாக்லெட் டீ , மேகி டீ வரை ஏராளமான வகைகளில் டீ கிடைக்கின்றன. குறிப்பாக ஆரோக்கிய விரும்பிகளுக்கு கிரீன் டீ மற்றும் பிளாக் டீ ஆகியவை சிறந்த தேர்வாக இருக்கிறது. ஆனால் இந்த இரண்டு வகையில் எது சிறந்தது என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

கிரீன் டீ

பெரும்பாலும் கிரீன் டீ  இயற்கையான முறையிலேயே தயாரிக்கப்படுகிறது.  அதாவது வழக்கமான முறையில் வறுத்து கெமிக்கல் முறையில் கிரீன் டீ தயாரிக்கப்படுவதில்லை. மேலும் இதில் ஆண்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் கேட்டச்சின்கள் (Catechins) நிறைந்துள்ளன.

நன்மைகள்

  • நீரிழிவு மற்றும் இருதய நோய்களைத் தடுக்கும்.

  • உடல் எடையை குறைக்க பெரிதும் உதவும்.

  • தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

  • மூளை செயல்பாடுகள் சீராக இருக்கும்.

பிளாக் டீ

பிளாக் டீ என்பது முழுமையாக ஃபார்மேட்டட் (fermented) முறையில் தயாரிக்கப்படுகிறது. இதில் காஃபின் அளவு அதிகமாக இருக்கும். இது பலருக்கும் காலை நேரத்தில் புத்துணர்ச்சி அளிக்கும். மேலும் வழக்கான டீ தூள் பயன்படுத்தியும் பிளாக் டீ தயாரிக்கப்படுகிறது.

நன்மைகள்

  • மன அழுத்தத்தை குறைக்கும்.

  • மூளை செயல்பாடுகளை சீராக்கும் மற்றும் மனநலத்தை மேம்படுத்தும்.

  • உடலுக்கு ஆற்றல் தரும்.

  • இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.

இரண்டு வகையான தேநீரும் உடலுக்கு பல நன்மைகளை வழங்குகின்றன. உங்கள் உடல் நிலை, நோய்  பாதிப்புகள், மற்றும் தினசரி வாழ்க்கை முறை இவற்றைப் பொருத்து தேர்வு செய்யலாம். எடை குறைக்க, மனஅழுத்தம் போக்க விரும்புபவர்கள் க்ரீன் டீ பரிந்துரைக்கப்படுகிறது. அது போல புத்துணர்ச்சி, சுறுசுறுப்பு, மற்றும் சுவை ஆகியவற்றை விரும்புபவர்கள் பிளாக் டீயைத் தேர்வு செய்யலாம். உங்கள் தேநீர் தேர்வில் எந்த வகையாக இருந்தாலும், மிதமான அளவில் நுகர்வது தான் சிறந்தது. இந்த உலக தேநீர் தினத்தில், ஒரு கப் க்ரீன் டீ அல்லது பிளாக் டீ எடுத்துக்கொண்டு உங்கள் ஆரோக்கியத்தை பயணிக்க தொடங்குங்கள்.

ஐகூ 10 ப்ரோ பிளஸ் அறிமுகம் - சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
ஐகூ 10 ப்ரோ பிளஸ் அறிமுகம் - சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?...
Pomegranate: தினமும் மாதுளையை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் !
Pomegranate: தினமும் மாதுளையை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் !...
வெறும் ரூ.210 முதலீடு செய்து மாதம் ரூ.5,000 ஓய்வூதியம் பெறலாம்!
வெறும் ரூ.210 முதலீடு செய்து மாதம் ரூ.5,000 ஓய்வூதியம் பெறலாம்!...
அப்துல் கலாமாக நடிக்கும் தனுஷ் - இயக்குநர் யார் தெரியுமா?
அப்துல் கலாமாக நடிக்கும் தனுஷ் - இயக்குநர் யார் தெரியுமா?...
புயல் காரணமாக நடுவானில் விமானம் சேதம் - பயத்தில் அலறிய பயணிகள்
புயல் காரணமாக நடுவானில் விமானம் சேதம் - பயத்தில் அலறிய பயணிகள்...
டெல்லியில் கனமழை! மின் தடை.. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
டெல்லியில் கனமழை! மின் தடை.. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!...
ஏஸ் முதல் நரிவேட்ட வரை... இந்த வார தியேட்டர் ரிலீஸ் லிஸ்ட் இதோ!
ஏஸ் முதல் நரிவேட்ட வரை... இந்த வார தியேட்டர் ரிலீஸ் லிஸ்ட் இதோ!...
ரயிலில் இருந்து எறியப்பட்ட சூட்கேஸ்.. திறந்தால் இளம் பெண் உடல்..!
ரயிலில் இருந்து எறியப்பட்ட சூட்கேஸ்.. திறந்தால் இளம் பெண் உடல்..!...
ஆரோக்கியத்துக்கு சிறந்தது க்ரீன் டீயா? பிளாக் டீயா?
ஆரோக்கியத்துக்கு சிறந்தது க்ரீன் டீயா? பிளாக் டீயா?...
20 வருசமா ஹீரோயினா இருப்பது பெருசு - த்ரிஷாவை புகழ்ந்த விஜய்
20 வருசமா ஹீரோயினா இருப்பது பெருசு - த்ரிஷாவை புகழ்ந்த விஜய்...
சாட்ஜிபிடி மூலம் Black & White புகைப்படத்தை Colour-ஆக மாற்றலாம்!
சாட்ஜிபிடி மூலம் Black & White புகைப்படத்தை Colour-ஆக மாற்றலாம்!...