Children Care: குழந்தையின் தொண்டையில் ஏதாவது சிக்கிவிட்டதா? பயம் வேண்டாம்! உடனடி முதலுதவியாக இதை செய்யுங்கள்!
Food Stuck in Throat: கேரட் போன்றவற்றை உங்கள் குழந்தைகள் மெல்ல முடிந்தாலும், அவரை முழுமையாக கொடுப்பது ஆபத்தை கொடுக்கும். இதன் பெரிய துண்டை விழுங்கினால், இது குழந்தையின் குறுகிய உணவுக்குழாயில் சிக்கி கொள்ளும். இதன் விளைவாக மூச்சு திணறல் ஏற்படும்.

தொண்டையில் உணவு சிக்கல்
தவழும் சிறிய குழந்தைகளோ (Children Care), நடக்கும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளோ எதையும் எடுத்து வாயில் வைக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர். இதனால், குழந்தைகளை சுற்றி எப்போது யாரேனும் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். சமீபத்தில் ஈரோட்டில் 5 வயது சிறுவன் வாழைப்பழம் சாப்பிடும்போது தொண்டைக்குள் சிக்கி மூச்சு திணறி இறந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. அதன்படி, குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையை உண்டாக்கக்கூடும். சூயிங் கம் அல்லது நாணயம் (Coin) எதுவாக இருந்தாலும், குழந்தைகள் எல்லாவற்றையும் தங்கள் வாயிக்குள் போட்டு கொள்வார்கள். இப்படியான ஆபத்தான சூழ்நிலையில், உங்கள் குழந்தையின் தொண்டைக்குள் நாணயம் அல்லது வேறு ஏதாவது சிக்கி கொண்டால் அதை எப்படி அகற்றுவது என்பது பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.
விரலால் எடுக்க முயற்சி செய்யவும்:
உங்கள் குழந்தையின் தொண்டையில் ஏதாவது சிக்கியிருந்தால், முதலில் அவர்களின் வாயைத் திறந்து சரிபார்க்கவும். பொருள் மேலே தெரிந்தால், அதை உங்கள் விரலால் எடுக்க முயற்சிக்கவும். குழந்தையின் வாயில் உங்கள் விரலை நுழைக்கும்போது, பொருளை மேல்நோக்கி இழக்க முயற்சி செய்யுங்கள். அதை கீழே தள்ளும்போது குடலுக்குள் சென்றுவிடும்.
ALSO READ: மழைக்காலத்தில் குழந்தைகள் நோய்வாய்ப்படும் அபாயம்.. தடுப்பது எப்படி..?
குழந்தையை அமைதியாக உட்கார வையுங்கள்:
தொண்டையில் ஏதாவது சிக்கிக்கொண்டால், குழந்தையை அமைதிப்படுத்த முயற்சி செய்யுங்கள். இந்த சூழ்நிலையில், குழந்தையை உட்கார வையுங்கள். அப்படி இல்லையென்றால் நிற்க வையுங்கள். எக்காரணத்தையும் கொண்டு குழந்தைகளை படுக்கவோ, தூங்க வைக்கவோ முயற்சி செய்யாதீர்கள்.
குழந்தையின் முதுகில் தட்டுங்கள்:
குழந்தையின் தொண்டையில் ஒரு திடமான பொருள் சிக்கிக்கொண்டால், அவர்களின் முதுகில் 5 முறை மெதுவாகத் தட்டவும். இது அவர்களுக்கு இருமல் அல்லது தும்ம உதவும். குழந்தை இருமும்போது அல்லது தும்மும்போது, அது பொருளை வெளியேற்ற உதவும்.
எந்தெந்த பழங்களை கவனத்துடன் கொடுக்க வேண்டும்..?
கேரட் போன்றவற்றை உங்கள் குழந்தைகள் மெல்ல முடிந்தாலும், அவரை முழுமையாக கொடுப்பது ஆபத்தை கொடுக்கும். இதன் பெரிய துண்டை விழுங்கினால், இது குழந்தையின் குறுகிய உணவுக்குழாயில் சிக்கி கொள்ளும். இதன் விளைவாக மூச்சு திணறல் ஏற்படும்.
ஆப்பிள்கள், வாழைப்பழம் போன்றவை லேசானது என்று தோன்றினாலும், இதுவும் குழந்தையின் தொண்டையில் சிக்கி கொள்ளும். எனவே, உங்கள் குழந்தைகளுக்கு சரியாக மென்று மெதுவாக சாப்பிட கற்று கொடுங்கள்.
குழந்தையின் தொண்டையில் பழங்கள் சிக்கி கொண்டால் என்ன செய்வது..?
ஒரு வயதுக்குட்பட்ட குழந்தையின் தொண்டையில் பழம் அல்லது உணவு பொருட்கள் சிக்கிக்கொண்டால், முதலில் பயப்படாதீர்கள். குழந்தையையும் பயமுறுத்தாதீர்கள். குழந்தையை உங்கள் மடியில் குப்புற படுக்கப்போட்டு, உங்கள் உள்ளங்கையால் குழந்தையின் முதுகில் விட்டு அழுத்தம் கொடுங்கள். இது சிக்கிய பொருளை அகற்ற உதவும்.
ALSO READ: எந்த வயதில் எவ்வளவு உடற்பயிற்சி நல்லது..? உடலமைப்புக்கான ஆரோக்கிய குறிப்புகள்!
இதுவும் வேலை செய்யவில்லை என்றால், குழந்தையை திருப்பி அதன் மார்பு மீது 2 விரல்களால் அழுத்தம் கொடுக்கவும். அதிக அழுத்தத்தை கொடுக்காதீர்கள். அப்போதும், வெளியே வரவில்லை என்றால் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள்.