Food Recipe: விநாயருக்கு விருந்து படைக்க ஆசையா..? ஈஸியான சேமியா பாயாசம் செய்து ஆசிர்வாதம் பெறுங்கள்..!
Easy Semiya Payasam Recipe: விநாயகர் சதுர்த்திக்கு எளிதாகவும், வேகமாகவும் செய்யக்கூடிய சேமியா பாயாசம் செய்முறை இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. பால், நெய், சர்க்கரை/வெல்லம், பாதாம், முந்திரி போன்ற பொருட்களைப் பயன்படுத்தி சுவையான பாயாசம் தயாரிக்கும் முறையை படிப்படியாக விளக்கப்பட்டுள்ளது. இந்த எளிய செய்முறையைப் பின்பற்றி, விநாயகருக்கு படையலிட்டு, அவரது அருள் பெறுங்கள்.

சேமியா பாயாசம்
விநாயகர் சதுர்த்தி பூஜையின் போது விநாயகர் பிரசாதமாக பல வகையான பிரபலமான தென்னிந்திய உணவுகள் படைக்கப்படுகிறது. இதில் மிக முக்கியமானது சேமியா பாயாசம். தென்னிந்திய மாநிலங்களில் பண்டிகைகள் மற்றும் திருமணங்கள் உட்பட பல நல்ல நிகழ்வுகளில் தயாரிக்கப்படும் பிரபலமான இனிப்பு (Sweets) உணவு இதுவாகும். சேமியா பாயசம், பால், நெய், வெல்லம் அல்லது சர்க்கரை மர்றும் பாதாம் ஆகியவற்றை தயாரிக்கப்படுகிறது. தயாரிக்க எளிதானது, ருசிக்கவும் சுவையானது அந்த வகையில், விநாயகர் சதுர்த்தி (Vinayagar Chaturthi) நாளில் எளிதான சேமியா பாயாசம் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.
ALSO READ: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்.. ஈஸியான மோதிச்சூர் லட்டை யானைமுகத்தானுக்கு படையுங்கள்..!
சேமியா பாயசம் செய்ய தேவையான பொருட்கள்:
- சேமியா – ஒரு கப்
- தண்ணீர் – 2 கப்
- கெட்டியான பால் – 1 கப்
- நெய் – தேவையான அளவு
- ஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன்
- குங்குமப்பூ – சிறிதளவு
- சர்க்கரை அல்லது வெல்லம் – தேவையான அளவு
- நறுக்கிய திராட்சை, முந்திரி, பாதாம், பிஸ்தா – அரை கப்
ALSO READ: விநாயகர் சதுர்த்திக்கு சுலபமான கொழுக்கட்டை செய்வது எப்படி? படிப்படியான வழிமுறை இதோ!
சேமியா பாயாசம் செய்வது எப்படி..?
- முதலில், ஒரு தடிமனான அடிப்பகுதி கொண்ட கடாயை அடுப்பில் வைத்து, ஒரு ஸ்பூன் நெய்யைச் சேர்த்து சூடாக்கவும். நெய் சூடானதும், கால் கப் நன்றாக நறுக்கிய திராட்சை, முந்திரி, பாதாம், பிஸ்தா உள்ளிட்ட உலர் பழங்களைச் சேர்த்து வதக்கவும்.
- உலர் பழங்கள் லேசாக வறுத்தவுடன், அவற்றை ஒரு கிண்ணத்தில் தனியாக எடுத்துக் கொள்ளவும். அதே கடாயில், ஒரு கப் சேமியாவைச் சேர்த்து, குறைந்த தீயில் வறுக்கவும்.
- சேமியா வறுத்துக்கொண்டிருக்கும் போது, ஒரு கடாயை மற்றொரு அடுப்பில் வைத்து, 2 கப் தண்ணீர் மற்றும் ஒரு கப் கெட்டியான பால் சேர்த்து கொதிக்க விடவும்.
- பால் கொதித்ததும், வறுத்த சேமியாவைச் சேர்த்து கலக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, சேமியாவை மென்மையாகும் வரை சமைக்கவும். வறுத்த சேமியா நன்கு வெந்தவுடன், சுவைக்கேற்ப சர்க்கரையை சேர்த்து கலக்கவும்.
- சர்க்கரை முழுவதுமாக கரைந்து சிறிது கெட்டியானதும், அரை டீஸ்பூன் ஏலக்காய் தூள், சிறிதளவு குங்குமப்பூ, முன் வறுத்த உலர் பழங்களைச் சேர்த்து கலக்கவும்.
- அவ்வளவுதான், இவ்வளவு எளிமையாகச் செய்தால், சேமியா பாயசம் பிரசாதம் தயார்.
- நேரம் குறைவாக இருக்கும்போது பாயசம் தயாரிக்க இது ஒரு சிறந்த வழி. இந்த சேமியா பாயசத்தை விநாயகர் சதுர்த்தி நாளில் விநாயகர் படைத்து வழிபடுங்கள். விநாயகர் முழு ஆசிர்வாதம் வழங்குவார். ஒரு கப் சாப்பிட்ட பிறகு, வீட்டில் உள்ள அனைவரும் இன்னொரு கப் கேட்டாலும் கேட்பார்கள்.