Grow Coriander Easily: மண் வேண்டாம்! தொட்டி வேண்டாம்! எளிதாக வீட்டிலேயே கொத்தமல்லி தழையை வளர்ப்பது எப்படி..?
Coriander Propagation: கொத்தமல்லித் தழைகளை எளிதாக வளர்ப்பது குறித்த இந்தக் கட்டுரை, மண் அல்லது பானை இல்லாமலேயே கொத்தமல்லித் தண்டுகளைப் பயன்படுத்தி புதிய தழைகளை வளர்ப்பது எப்படி என்பதை விளக்குகிறது. தண்ணீரில் வைத்து வளர்ப்பது மற்றும் மண்ணில் நட்டு வளர்ப்பது உள்ளிட்ட இரண்டு முறைகள் விவரிக்கப்பட்டுள்ளன. தினமும் தண்ணீர் மாற்ற வேண்டியதன் அவசியம் மற்றும் போதுமான சூரிய ஒளி தேவை என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எளிய முறைகளைக் கையாண்டு, நீங்களே வீட்டில் கொத்தமல்லித் தழைகளை வளர்த்து மகிழுங்கள்!

நகரங்களிலும், கிராமங்களிலும் செடி மற்றும் மரங்களை வளர்க்க ஆசைப்படுகிறார்கள். கிராமங்களில் இது சாத்தியம் என்றாலும், நகரப்புறங்களில் சொந்த வீடு உள்ளவர்கள் வீட்டின் மொட்டைமாடிகளில் தோட்டம் ( Terrace Garden) வைக்கிறார்கள். நீங்களும் உங்கள் வீட்டில் எளிதான ஏதேனும் வளர்க்க விரும்பினால், அதுவும் சமையலுக்கு பயன்படுத்தும் இலையாக இருந்தால் உங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி தானே. நகரங்களில் தொட்டிகளில் மண் மற்றும் விதைகளை வைத்து, அவற்றை வளர்த்து பராமரிப்பது கஷ்டம். நீங்கள் கடின உழைப்பு இல்லாமல் கொத்தமல்லி தழைகளை (Coriander Leaves) வளர்க்க, இந்த கட்டுரை உதவி செய்யும். இத்தகைய சூழ்நிலையில், நீங்கள் கடைகளில் இருந்து ஒரு முறை கொத்தமல்லி தழையை வாங்கிய பிறகு, மீண்டும் அதை வாங்க வேண்டியதில்லை. இதை வளர்க்க உங்களுக்கு மண் மற்றும் பானை கூட தேவையில்லை.
வீட்டிலேயே கொத்தமல்லி தழைகளை வளர்ப்பது எப்படி..?
View this post on Instagram
நீங்கள் கடைகளில் இருந்து கொத்தமல்லி தழைகளை வாங்கி, அதன் இலைகளை பறித்த பிறகு அதன் தண்டை வைத்து கொள்ளுங்கள். இப்போது இந்த தண்டுகளை தண்ணீர் நிரப்பப்பட்ட ஒரு ஜாடி அல்லது கண்ணாடியில் வைக்கவும். தண்டின் அடிப்பகுதி அதாவது வேர் சிறுது தண்ணீரில் மூழ்கி இருக்கிறதா என்பதை கவனித்து கொள்ளுங்கள். ஜாடி அல்லது கண்ணாடியை சூரிய ஒளி படும் ஜன்னலுக்கு அருகில் வையுங்கள். இப்படி செய்வதன்மூலம், ஒரு சில நாட்களில் புதிய கொத்தமல்லி தழைகள் வளர தொடங்கும்.
கவனம் தேவை:
கொத்தமல்லி தண்டுகளுக்கு தண்ணீர் ஊற்றி இலைகளை வளர்க்கும்போது கொஞ்சம் கவனம் செலுத்தும் முக்கியம். அதன்படி, தண்ணீரை தினமும் மாற்ற வேண்டும். மேலும், செடியானது வெயில் படும்படியான இடத்தில் மட்டுமே வைக்க வேண்டும். இலைகள் வளர்ந்தபின், அவற்றை வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள். இதனால் இலைகள் மீண்டும் வளர்வதற்கு இடம் கிடைக்கும்.
தொட்டி இருந்தால் இதை செய்யுங்கள்..
உங்களுக்கு ஒரு தொட்டியும் மண்ணும் இருந்தால் நீங்கள் மண்ணில் கொத்தமல்லி தண்டை நட்டு வைக்கவும். இதற்கு, தண்டின் கீழ் பகுதியை மண்ணில் அழுத்தி, மண் ஈரப்பதமாக இருப்பதை உறுதி செய்யவும். சில நாட்களில், தண்டுகளிலிருந்து புதிய இலைகள் வெளிவரத் தொடங்கும். இதற்கு சிறிது நேரம் ஆகலாம், எனவே பொறுமையாக இருக்க வேண்டும். கொத்தமல்லி செடியை பாரமரிக்க, போதுமான சூரிய ஒளி மற்றும் தண்ணீர் இருப்பதையும் உறுதி செய்யுங்கள்.