Summer Tips: கோடையில் வாட்டர் டேங்கில் தண்ணீர் கொதிக்கிறதா..? இப்படி செய்யுங்க.. ஜில்லுன்னு இருக்கும்..!
Cool Water Tank Tips: தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் அதிகரித்து வரும் வெப்பத்தால் தண்ணீர் தொட்டி சூடாவதை எப்படித் தடுப்பது என்பதை இந்தக் கட்டுரை விளக்குகிறது. வெள்ளை நிற தொட்டிகள், சணல் சாக்கு, அலுமினியத் தாள் போன்ற எளிய முறைகளைப் பயன்படுத்தி தண்ணீரை குளிர்ச்சியாக வைத்திருக்கலாம். மரக்கொப்புகள் அல்லது மண் பூசுவதும் பாரம்பரியமான தீர்வாகும். சூரிய ஒளி படாத இடத்தில் தொட்டியை வைப்பதும் முக்கியம்.

வாட்டர் டேங்க்
தமிழ்நாடு (Tamil Nadu) மட்டுமின்றி இந்தியா முழுவதும் நாளுக்குநாள் வெப்பநிலையானது அதிகரித்து வருகிறது. காலை 8 மணிக்கே சூரியனின் வெப்பத்தால் வீட்டிற்குள் வெட்கை அடிக்க தொடங்கி விடுகிறது. இந்த வெயிலில் இருந்து தப்பிக்கலாம் என்று குளிக்க சென்றால், மாடி மீது வைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டியில் (Water Tank) உள்ள தண்ணீர் மிகவும் சூடாகிறது. இதனால், குளிக்க முடியாமல் மட்டுமல்லாமல், கை மற்றும் கால்களை கழுவுவது கூட சிரமமாக இருக்கும். கோடை காலம் (Summer) மட்டுமல்ல, எந்த பருவ காலத்திலும் தண்ணீரின்றி எந்த வேலையும் செய்ய முடியாது. கோடை காலத்தில் தண்ணீர் சூடாக இருப்பது தெரியாமல் சவரில் அப்படியே குளிக்கும்போது, உடலில் எரிச்சல், வெப்பத் தடிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
இதன் காரணமாகவே மக்கள் குழாய்களை தொடவே பயப்படுகிறார்கள். ஆனால் அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக மாடியில் வைக்கப்பட்டுள்ள தொட்டியில் உள்ள தண்ணீரை குளிர்ச்சியாக வைத்திருக்க முடியாமல் தவிர்க்கிறார்கள். அந்தவகையில், மாடியில் வைக்கப்பட்டிக்கும் தொட்டியில் உள்ள தண்ணீரை எந்த செலவும் இல்லாமல் கொளுத்தும் வெயிலில் எப்படி குளிர்ச்சியாக வைத்திருக்க முடியும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
முதலில் வீடுகளுக்கு மேல் தண்ணீர் தொட்டி வைக்கும்போது முடிந்தவரை கருப்பு நிற பிளாஸ்டிக் தொட்டிகளை வாங்காமல், வெள்ளை நிற தொட்டிகளை வாங்கி பயன்படுத்துங்கள். அப்படி உங்கள் மேல் நிலைத்தொட்டி கருப்பு நிறம் கொண்டதாக இருந்தால், கடைகளில் வெள்ளை நிற பெயிண்ட் வாங்கி அடிக்கலாம். அப்படி இல்லையென்றால் வீடுகளில் இருக்கும் பழைய வேஷ்டி துணியை கொண்டு மூடலாம்.
சணல் சாக்கு:
கோடையில் தொட்டி நீரை குளிர்ச்சியாக வைத்திருக்க சில எளிதான விஷயங்களை மேற்கொள்ளலாம். இதுவும் சிறந்த பயனை தரும். அதன்படி, வீட்டில் இருக்கும் சணல் சாக்கை தண்ணீரில் நனைத்து தொட்டியைச் சுற்றி சுற்றி வைப்பதும், தண்ணீர் சூடாகும் முறையை தடுக்கும். அதாவது, சணல் சாக்கு சூரிய ஒளியிலிருந்து பாதுகாத்து குளிர்ந்த ஈரப்பதத்தைத் தக்கவைத்துக்கொள்வதால், இந்த முறை தண்ணீரை நீண்ட நேரம் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவி செய்யும்.
அப்படி இல்லையென்றால், சமையலுக்கு நாம் பயன்படுத்தும் அலுமினியத் தாள்களை கொண்டும் தொட்டி முழுவதையும் மூடலாம். இந்த அலுமினியத் தாள் வெப்பத்தை உள்வாங்குவதை தடுத்து, வெளியே பிரதிபலிக்க செய்யும். இதனாலும் தண்ணீர் எளிதாக சூடாகாது.
மேலும் சில வழிமுறைகள்:
தொட்டியை குளிர்ச்சியாக வைத்திருக்க மற்றொரு வழி என்னவென்றால், மரத்தின் கொப்புகளை உடைத்து தொட்டியை முழுவதுமாக மறைக்கலாம். அப்படி இல்லையென்றால் மண்ணை தண்ணீரில் நன்றாக குழப்பி தொட்டி மீது பூசலாம். இதுவும் சூரிய ஒளி மூலம் தண்ணீர் சூடாகுவதை தடுக்கும். இது ஒரு பாரம்பரியமான ஆனால் பயனுள்ள முறையாகும். இந்த வழிமுறைகள் பல ஆண்டுகளாக கிராமங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்றும் கூட பயன்பாட்டில் இருந்து வருகிறது.
முடிந்தால் வீடு கட்டும்போதே தொட்டியை நேரடி சூரிய ஒளி படாத இடத்தில் வைக்க வேண்டும். இந்த சிறிய ஆனால் பயனுள்ள முறைகள் மூலம், கோடையில் தொட்டியில் உள்ள தண்ணீரை குளிர்ச்சியாக வைக்கலாம்.