Hair Fall: நாளுக்கு நாள் முடி உதிர்தல் அதிகரிக்கிறதா..? தடுக்க உதவும் 2 எளிய குறிப்புகள்!
How To Reduce Hairfall: இன்றைய காலகட்டத்தில் முடி உதிர்தல் மிகவும் சாதாரணமாகிவிட்டது, ஆண்களுக்கு வழுக்கை விழும் விகிதம் அதிகரித்து வருகிறது. அதைத் தடுக்க பல மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் உள்ளன. ஆனால், அது எந்த அளவிற்கு பக்கவிளைவு இல்லாமல் பலனை தரும் என்பது தெரியாது.

முடி உதிர்தல்
நீங்கள் தலை முடியை சீவும்போது உங்கள் தலையில் இருப்பதை விட சீப்பில் அதிக முடி இருந்தால் தலை முடி உதிர்வு (Hair Fall) பிரச்சனை அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம். முடி உதிர்தலுடன் போராடுபவர்களில் நீங்களும் ஒருவர் என்றால், இந்த செய்தி உங்களுக்கானது. இன்றைய காலகட்டத்தில் முடி உதிர்தல் மிகவும் சாதாரணமாகிவிட்டது, ஆண்களுக்கு வழுக்கை (Bald) விழும் விகிதம் அதிகரித்து வருகிறது. அதைத் தடுக்க பல மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் உள்ளன. ஆனால், அது எந்த அளவிற்கு பக்கவிளைவு இல்லாமல் பலனை தரும் என்பது தெரியாது. அந்தவகையில், முடி உதிர்தலை போக்க உதவும் தீர்வு உங்கள் சமையலறையிலேயே உள்ளது. அதை பயன்படுத்தி இந்த பிரச்சனையை சரி செய்யலாம்.
இதற்கான தீர்வு எளிமையாக வீட்டிலேயே உள்ளது. அதுதான் சிவப்பு பருப்பு என்று அழைக்கப்படும் மசூர் பருப்பு ஆகும். சிவப்பு பருப்பில் இரும்புச்சத்து, புரதம் மற்றும் உங்கள் தலைமுடி ஆரோக்கியத்திற்கு அவசியமான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இந்த பருப்பு உங்கள் தலைமுடி வேர்களை வலுப்படுத்தவும், உங்கள் தலைமுடியின் பளபளப்பை மீட்டெடுக்கவும் உதவும்.
ALSO READ: நரை முடியுடன் வெளியே தலை காட்ட சங்கடமா? கருமையாக்க உதவும் மாதுளை தோல்கள்!
முடி உதிர்தலை போக்க சிவப்பு பருப்பு எவ்வாறு உதவுகிறது..?
சிவப்பு பருப்பில் முடி வளர்ச்சிக்கு தேவையான இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம், புரதம் மற்றும் வைட்டமின் சி உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
இரும்புச்சத்து:
உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த இரும்புச்சத்து மிக மிக அவசியம். இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும்.
ஃபோலிக் அமிலம்:
ஃபோலிக் அமிலம் இரத்த சிவப்பணுக்கள் உருவாவதற்கு உதவுகிறது. இது உங்கள் மயிர்க்கால்களுக்கு போதுமான ஆக்ஸிஜனை வழங்குகிறது.
புரதம்:
பருப்பில் உள்ள புரதம், முடியை வலுப்படுத்தவும், உடைவதை தடுக்கவும் அவசியம்.
வைட்டமின் சி:
சிவப்பு பருப்பை எலுமிச்சை சாறு மற்றும் குடமிளகாய் போன்ற பொருட்களுடன் சேர்த்து சேர்க்கும்போது, உடலில் இரும்புச்சத்து உறிஞ்சப்படுவதை அதிகரிக்கிறது.
ALSO READ: 4 கிராம்பு போதும்! தலைமுடியில் இருந்து பொடுகு காணாமல் போகும்..!
வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை:
வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை பயன்படுத்துவது முடி உதிர்தலை தடுக்கவும், முடியை வலுப்படுத்தவும் உதவும். அதன்படி, இதை எப்படி தயாரிப்பது என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
- 3 டீஸ்பூன் வெந்தயம் மற்றும் ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை எடுத்துக் கொள்ளுங்கள்.
- 2 கப் தண்ணீரில் அரை கப் தண்ணீர் குறையும் வரை குறைந்த வெப்பத்தில் கொதிக்க வைக்கவும்.
- இந்தக் கலவையை மிக்ஸியில் கலந்து பேஸ்ட் செய்யவும்.
- ஷாம்பு பயன்படுத்துவதற்கு முன் ஒரு மணி நேரத்திற்கு முன்பு உங்கள் உச்சந்தலையில் மற்றும் தலைமுடியில் தடவவும்.
- பின்னர் சாதாரண தண்ணீரில் கழுவலாம். இது நல்ல நாளடைவில் நல்ல பலனை தரும்.