கொட்டாவியால் இளைஞருக்கு வந்த சிக்கல்.. மீண்டும் வாயை மூட முடியாமல் அவதி!

Youth Got Into Trouble While Yawning | கொட்டாவி வருவது இயல்பான ஒன்று. இந்த நிலையில், ரயிலில் பயணம் செய்தபோது கொட்டாவி விட்ட இளைஞர் ஒருவர் மீண்டும் தனது வாயை மூட முடியாமல் தவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கொட்டாவியால் இளைஞருக்கு வந்த சிக்கல்.. மீண்டும் வாயை மூட முடியாமல் அவதி!

வைரலாகும் வீடியோ

Updated On: 

19 Oct 2025 12:43 PM

 IST

கொச்சி, அக்டோபர் 19 : கன்னியாகுமரியில் (Kanyakumari) இருந்து ரயிலில் பயணம் செய்த இளைஞர் ஒருவர் வித்தியாசமான பிரச்னையை எதிர்க்கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, அந்த இளைஞர் கொட்டாவி விட வாயை திறந்தபோது, அவர் மீண்டும் வாயை மூட முடியாமல் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளார். இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த நிலையில், கொட்டாவி விடும்போது இளைஞருக்கு ஏற்பட்ட சிக்கல் குறித்து விரிவாக பார்க்கலாம்.

கொட்டாவியால் இளைஞருக்கு ஏற்பட்ட சிக்கல்

கன்னியாகுமரி – அசாஸ் விரைவு ரயிலில் இளைஞர் ஒருவர் பயணம் செய்துள்ளார். அப்போது ரயில் கேரள மாநிலம், பாலக்கோடு அருகே வந்தபோது அவர் வழக்கம்போல கொட்டாவி விட்டுள்ளார். பொதுவாக வாயை திறந்து கொட்டாவி விட்டதற்கு பிறகு வாய் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும். ஆனால், அந்த இளைஞரால் தான் கொட்டாவி விட்ட பிறகு மீண்டும் வாயை மூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : போதைப்பொருள் கொடுத்து ஆசிரியர் பாலியல் வன்கொடுமை.. இளைஞர்கள் வெறிச்செயல்!

வாயை மூட முடியாமல் சிரமப்பட்ட இளைஞர்

அந்த இளைஞர் தனக்கு வாயை மூட முடியாத சிக்கல் ஏற்பட்டுள்ளது என்பதை கூட அவர் மற்றவர்களிடம் சொல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இளைஞரின் அந்த நிலையை கண்டு அதிர்ச்சி அடைந்த சக பயணிகள் உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பாலக்காடு ரயில்வே மருத்துவமனையில் இருந்து மருத்துவர் பிஎஸ்ஜிதன் விரைந்து வந்து இளைஞருக்கு சிகிச்சை அளித்துள்ளார்.

இதையும் படிங்க : தாய் அன்புக்கு ஈடே இல்லை.. 46 வயது மகனுக்கு கிட்னியை தானமாக கொடுத்த 72 வயது தாய்!

மருத்துவரின் சிகிச்சைக்கு பிறகு வாயை மூட முடியாமல் தவித்து வந்த இளைஞர், வாயை மூடி மீண்டும் இயல்பாக பேச தொடங்கியுள்ளார். இந்த சம்பவம் பொதுமக்கள் மற்றும் சக பயணிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.