கேரளத்தில் பலாப்பழத்தில் வெடிகுண்டு வைத்து யானை கொலை.. முதியவர் கைது!

Wild Elephant Killed With Bomb Infused Jackfruit | கேரளத்தில் காட்டில் இருந்து உணவு தேடி கிராமத்திற்குள் நுழைந்த காட்டு யானை பலாப்பழம் ஒன்றை சாப்பிட்டுள்ளது. அது வெடித்த நிலையில், சம்பவ இடத்திலேயே யானை பரிதாபமாக உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளத்தில் பலாப்பழத்தில் வெடிகுண்டு வைத்து யானை கொலை.. முதியவர் கைது!

பலியான யானை

Updated On: 

22 Apr 2026 00:11 AM

 IST

கொச்சி, ஏப்ரல் 21 : கேரள (Kerala) மாநிலம் கொச்சி (Kochi) அருகே உள்ள ஆனைக்குளம் பகுதியில் பழங்குடியின கிராம் ஒன்று உள்ளது. இந்த பகுதியில் அடிக்கடி காட்டு யானைகள் நடமாட்டம் இருப்பது வழக்கமான ஒன்று. அந்த வகையில், நேற்று (ஏப்ரல் 20, 2026) இந்த கிராமத்திற்குள் நுழைந்த காட்டு யானை ஒன்று அந்த பழங்குடியின கிராமத்தில் இருந்த பலாப்பழம் ஒன்றை ருசி பார்த்துள்ளது. அப்போது அந்த பலாப்பழம் திடீரென வெடித்த நிலையில், அந்த யானை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த நிலையில், பலாப்பழம் வெடித்து யானை உயிரிழந்தது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

பலாப்பழம் வெடித்து பலியான காட்டு யானை

காட்டில் இருந்து உணவு தேடி கிராமத்திற்கு நுழைந்த காட்டு யானை, அங்கிருந்த பலா பழத்தை ருசி பார்த்த நிலையில் அது எதிர்பாராத விதமாக வெடித்துள்ளது. இதனால் அந்த யானைக்கு வாயில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் வலி தாங்க முடியாமல் அந்த யானை தவித்துள்ளது. பிறகு சிரிது நேரம் கழித்து அந்த பகுதியில் யானை உயிரிழந்துள்ளது.

இதையும் படிங்க : தரையிறங்காமல் 4 மணி நேரம் வானில் பறந்த விமானம் – அலறிய பயணிகள் – திக் திக் நிமிடம்

சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்ட வனத்துறையினர்

யானை குண்டு வெடித்து உயிரிழந்தது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் அந்த பகுதி முழுவதையும் ஆய்வு செய்துள்ளனர். இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், காட்டு யானை அடிக்கடி ஊருக்குள் வந்து அட்டகாசம் செய்து வந்த நிலையில், அதனை தீர்த்துக்கட்ட முடிவு செய்து அந்த கிராமத்தை சேர்ந்த சசீந்தரன் என்ற 65 வயது முதியவர் இந்த கொடூரத்தை செய்தது தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க : பஹல்காமில் பாதுகாப்பை உறுதிப்படுத்த QR கோடு உடன் அடையாள அட்டை.. முக்கிய நடவடிக்கை!

இந்த நிலையில், வெடிகுண்டு வைத்து யானையை கொலை செய்த குற்றத்திற்காக முதியவர் சரீந்தரன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us
எங்கள் விமானம் தாக்கப்படும் அபாயம் - பாகிஸ்தான் சென்ற ஈரான் குழுவினர் அச்சம்
போரைப் போல மோதிக்கொள்ளும் சிம்பான்சிகள் - காரணம் என்ன?
UPI-ல் ரூ.10,000-க்கு மேல் பணம் அனுப்ப ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?.. ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சீனா தயாரித்த செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பு? எழுந்த புதிய பாதுகாப்பு கவலை..