கேரளா பட்டாசு ஆலை வெடி விபத்து.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 கோடி நிவாரணம் அறிவித்த மோடி!
Kerala Crackers Factory Fire Accident | கேரள மாநிலம், திருச்சூர் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 12 பேர் பலியாகியுள்ள நிலையில், பலியானவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
திருச்சூர், ஏப்ரல் 21 : கேரள (Kerala) மாநிலம், திருச்சூரில் (Thrissur) ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Indian Prime Minister Narendra Modi) ரூ.2 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளார். இந்த விபத்தில் சிக்கி இதுவரை 12 பேர் பலியாகியுள்ள நிலையில், பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த நிலையில், பட்டாசு ஆலை வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் மோடி அறிவித்துள்ள நிவாரணம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
திருச்சூர் பட்டாசு ஆலை வெடி விபத்து – 12 பேர் பரிதாப பலி
கேரள மாநிலம், திருச்சூர் அருகே உள்ள முண்டத்திகோட் பகுதியில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில், திருச்சூர் பூரம் பண்டிகையை முன்னிட்டு அதிக அளவில் பட்டாசு தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வந்துள்ளது. மொத்தம் ஐந்து கூடாரங்கள் அமைக்கப்பட்டு பட்டாசு தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.




இதையும் படிங்க : பஹல்காமில் பாதுகாப்பை உறுதிப்படுத்த QR கோடு உடன் அடையாள அட்டை.. முக்கிய நடவடிக்கை!
நிவாரணம் அறிவித்த பிரதமர் நரேந்திர மோடி
മരിച്ച ഓരോ വ്യക്തിയുടെയും കുടുംബത്തിന് പ്രധാനമന്ത്രിയുടെ ദേശീയ ദുരിതാശ്വാസ നിധിയിൽ (PMNRF) നിന്ന് 2 ലക്ഷം രൂപ ധനസഹായം നൽകുമെന്ന് പ്രധാനമന്ത്രി അറിയിച്ചു. പരിക്കേറ്റവർക്ക് 50,000 രൂപ വീതം നൽകും. https://t.co/ECIZMC8YEv
— PMO India (@PMOIndia) April 21, 2026
இந்த பயங்கர தீ விபத்தில் சிக்கி 12 பேர் பலியாகியுள்ள நிலையில், 40-க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க : பஹல்காம் தாக்குதல் நடந்து ஓராண்டு நிறைவு – சுற்றுலா பயணிகளின் வருகை எப்படி இருக்கிறது?
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம்
இந்த நிலையில், பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணமும் அறிவித்துள்ளார். இந்த விபத்தில் சிக்கி படுகாயமடைந்த சிலர், உயிருக்கு ஆபத்தான முறையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது குறிப்பிடத்தக்கது.