3 ஆண்களுடன் கள்ளக்காதல்.. திட்டமிட்டு மனைவியை கொலை செய்த கணவர்.. பகீர் பின்னணி!
Wife Brutally Killed With Husband's Plan | சேலத்தில் மூன்று ஆண்களுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த மனைவியை அவரது கணவர் திட்டமிட்டு கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட பெண் மற்றும் கொலை செய்தவர்கள்
சேலம், ஜனவரி 19 : சேலம் (Salem) மாவட்டம், கொண்டப்பநாயக்கன் பட்டி, அய்யன் நகரை சேர்ந்தவர் செல்வம். இவர் தனது தங்கை கனகவல்லி, ஜனவரி 13, 2026 அன்று அவரது மகன் மணிகண்டன் வீட்டுக்கு வந்ததாகவும், அவரை ஜனவரி 15, 2026 அன்று சந்தித்து பேசியதாகவும் ஆனால், அதற்கு பிறகு இரண்டு நாட்களாக அவரை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.
கனகவல்லி மாயமான வழக்கின் பகீர் பின்னணி
கனவல்லியின் முதல் கணவர் பழனிசாமி, இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், கணவனை பிரிந்துச் சென்று தவசியப்பன் என்பவரை கனகவல்லி திருமணம் செய்துக்கொண்டுள்ளார். இவர்களுக்கு கார்த்தி என்ற மகனும், சுவேதா என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில், கனவல்லி தனது கணவர் உடன் இணைந்து விசைத்தறி பட்டறை ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார்.
இதையும் படிங்க : உயர்நிலை மாணவர்களால் 2 ஆம் வகுப்பு பாடங்களைக் கூட படிக்க முடியவில்லை- ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு
இந்த நிலையில், கனகவல்லிக்கு பள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்த அண்ணன், தம்பி உட்பட மூன்று பேருடன் கள்ளத்தொடர்பு இருப்பது தவசியப்பனுக்கு தெரிய வந்துள்ளது. இதனால் கடும் கோபத்திற்கு உள்ளான அவர், கனவல்லியை உறவை துண்டிக்குமாறு கண்டித்துள்ளார். ஆனால், கனவல்லியோ அதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாமல் இருந்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தவசியப்பன், தனது மனைவியை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார்.
மகன்களின் உதவியுடன் அரங்கேறிய கொலை
இந்த நிலையில் தவசியப்பன் கனகவல்லியின் மகன்களான கார்த்தி மற்றும் மணிகண்டனை சந்தித்து கனகவல்லியை கொலை செய்ய வேண்டும் என்றும், அதற்காக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன் என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து தவசியப்பன் உள்ளிட்ட மூன்று பேரும் இணைந்து அந்த பகுதியை சேர்ந்த விஜயன் மற்றும் சுரேஷ் ஆகியோருடன் ரூ.50 ஆயிரம் பேரம் பேசி கொலைக்கான சதி திட்டத்தை தீட்டியுள்ளனர்.
இதையும் படிங்க : பொங்கல் நீச்சல் போட்டி… குழந்தைகள் கண்முன்னே தந்தை உயிரிழந்த சோகம்
அவர்கள் திட்டத்தின் படி, மணிகண்டன் வீட்டில் இருந்த கனவல்லியை கழுத்தில் வெட்டி பிறகு அவரது கழுத்தை அறுத்து அந்த கும்பல் கொடூரமாக கொலை செய்துள்ளது. பிறகு கனகவல்லியின் உடலை பழைய துணிகளை போட்டு எரித்துவிட்டு, பாதி எரிந்த உடலை மண் மற்றும் கற்களை கொண்டு அவர்கள் புதைத்துள்ளனர். இந்த விவகாரத்தில் தவசியப்பன், கார்த்தி, மணிகண்டன் ஆகியோரை கைது செய்துள்ள போலீசார், விஜயன் மற்றும் சுரேஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.