புலி கூண்டில் வனத்துறை அதிகாரிகள்.. பொதுமக்கள் கொடுத்த தண்டனை… காரணம் இதுவா?

Forest Officials Locked Up In Tiger Cage : கர்நாடக மாநிலத்தில் வனத்துறை அதிகாரிகளை புலி கூண்டில் கிராம மக்கள் அடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் புலியை பிடிக்க ஒருமாதமாக அப்பகுதி மக்கள் முறையிட்டு வந்த நிலையில், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரத்தில் அவர்களை கூண்டில் அடைத்துள்ளனர்.

புலி கூண்டில் வனத்துறை அதிகாரிகள்.. பொதுமக்கள் கொடுத்த தண்டனை... காரணம் இதுவா?

புலி கூண்டில் வனத்துறை அதிகாரிகள்

Updated On: 

10 Sep 2025 11:50 AM

 IST

கர்நாடகா, செப்டம்பர் 10 : கர்நாடக மாநிலத்தில் வனத்துறை அதிகாரிகள் மக்கள் புலி கூண்டில் அடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புலியை சிறை பிடிப்பதில் வனத்துறை அலட்சியம் செய்ததால், கோபமடைந்த அப்பகுதி கிராமத்தினர் அவர்களை கூண்டில் அடைத்தனர். கர்நாடக மாநிலம் சாமராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகாவில் பொம்மலாபுர கிராமம் ஒன்று உள்ளது. இந்த கிராமம் வனப்பகுதிக்கு அருகில் உள்ளது. பொம்மலாபுரா மற்றும் அதைச் சுற்றியுள்ள வனப்பகுதி கிராமங்களில் புலிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. புலிகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், மக்கள் இரவு நேரங்களில் வயல்களுக்கு செல்வவோ அல்லது வீடுகளை விட்டு வெளியே வரவோ பயந்து இருக்கின்றனர். அண்மையில் கூட, சிறுமி ஒருவரை புலி தாக்கியதாக கூறப்படுகிறது.

ஒரு மாதமாக புலிகளின் நடமாட்டம் அதிகம் இருப்பதல், வனத்துறையினரிடம் அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர். இருப்பினும், புலியை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், அப்பகுதி வனத்துறை அலுவலகம் முன்பு ஒன்றுகூடி முறையிட்டனர். அதன்பிறகு, வனத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் ஒரு கூண்டை நிறுவனர். ஆனால், அதற்குபிறகு, வனத்துறை அதிகாரிகள் அந்த பக்கம் வரவில்லை என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டி உள்ளனர். கடந்த ஒரு மாதமாக சுற்றித்திரியும் புலி எங்களின் கால்நடை கொன்று, அச்சத்தை ஏற்படுத்தி வருவதாகவும் அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர்.

Also Read : பாம்பு கடித்த குழந்தைகள்.. உயிர் பிழைக்க மாந்த்ரீக பூஜை.. அடுத்து நடந்த ஷாக்!

புலி கூண்டில் வனத்துறை அதிகாரிகள்


புலியை பிடிக்க வனத்துறை அலட்சியம் காட்டி வருவதாகவும் அவர்கள் குற்றச்சாட்டினர். இதனால், பொறுமை இழந்த கிராம மக்கள், வனத்துறை அதிகாரிகள் சிலரை பிடித்து புலிக்காக வைக்கப்பட்ட கூண்டில் அடைத்தனர். 7 அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வரும் வரை அவர்களை விடுவிக்க மாட்டோம் என்று வலியுறுத்தி, புலி கூண்டில் அவர்களை வைத்து பூட்டினர்.

இதனை அறிந்த உயர் அதிகாரிகளான சரக ஏசிஎஃப் சுரேஷ் மற்றும் பந்திப்பூர் சரக ஏசிஎஃப் நவீன் குமார் ஆகியோர் கிராமத்திற்கு விரைந்து, உள்ளூர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகளுக்கும் கிராம மக்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

Also Read : தேர்வு எழுத விடாததால் ஆத்திரம்.. ஆசிரியரை சரமாரியாக கத்தியால் குத்திய மாணவர்.. பகீர் சம்பவம்!

கோபமடைந்த கிராம மக்கள், “நாங்கள் ஒவ்வொரு நாளும் காட்டு விலங்குகளுக்கு பயந்து, எங்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு வாழ்கிறோம். நேரத்தில் நீங்கள் அலட்சியம் காட்டுகிறீர்கள்” எனக் கூறினார். புலியை பிடிக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து, 7 வனத்துறை அதிகாரிகள் கூண்டில் இருந்து வெளியேற்றினர்.