லிப்டில் சிக்கிய இரு குழந்தைகள்.. சாமர்த்தியமாக செயல்பட்ட சிறுமி.. அடுத்து நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்!

Two Children Trapped In Elevator : சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வரும் வீடியோவில் சாமர்த்தியமாக செயல்பட்ட சிறுமியால் இரு குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் மீட்கப்பட்டனர். இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் .

லிப்டில் சிக்கிய இரு குழந்தைகள்.. சாமர்த்தியமாக செயல்பட்ட சிறுமி.. அடுத்து நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்!

லிப்டில் சிக்கிய இரு குழந்தைகளை சாமர்த்தியமாக மீட்ட சிறுமி

Published: 

22 Feb 2026 11:05 AM

 IST

சமூக வலைதளங்களில் சில நாட்களாக ஒரு சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு லிப்டுக்குள் இரு குழந்தைகள் மாட்டிக் கொள்வதும், அவர்களை காப்பாற்றுவதற்கு ஒரு சிறுமி முயற்சி செய்வதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இதில், லிப்டின் கதவை திறந்து அந்த சிறுமி உள்பட இரு குழந்தைகள் உள்ளே செல்கிறது. சிறிது நேரத்தில், அந்த லிப்டின் கதவு மூடத் தொடங்குகிறது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி இரு கதவுகளுக்கு நடுவில் நின்று கொண்டு கதவு மூடி விடாமல் தடுக்கிறார். அப்போது, இந்த சம்பவத்தை பார்த்து இரு குழந்தைகளும் கதறி அழுகிறது. ஆனால், இரு கதவுகளுக்கு நடுவில் அந்த சிறுமி இருப்பதால், அந்த இரு குழந்தைகளால் வெளியே வர முடியாமல் தவிக்கிறது. உடனே, அருகில் இருந்த பெரியோர்களை அந்த சிறுமி சத்தமிட்டு அழைக்கிறார். அப்போது, அங்கு வந்த பெண் மற்றும் ஒரு ஆண் லிப்டின் கதவுகளை திறக்க முயற்சி செய்கின்றனர்.

சாமர்த்தியமாக செயல்பட்ட சிறுமியால் குழந்தைகள் மீட்பு

ஆனால், அந்த கதவுகளை அவர்களால் திறக்க முடியவில்லை. இதனால், விபரீதத்தை உணர்ந்த அந்த சிறுமி சாமர்த்தியமாக செயல்பட்டு லிப்டின் உள்ளே சிக்கிக் கொண்ட இரு குழந்தைகளையும் ஒவ்வொன்றாக கைகளால் தூக்கி வெளியேற்றுகிறார். அப்போது, லிப்டின் வெளியே நின்று கொண்டிருந்த அந்த ஆண் அந்த குழந்தைகளை காப்பாற்றினார். இந்த விபரீதமான வீடியோ காட்சியில் லிப்டின் உள்ளே மாட்டிக் கொண்ட குழந்தைகளை காப்பாற்றுவதற்காக அந்த சிறுமி தக்க நேரத்தில் சாமர்த்தியமாக செயல்பட்டு லிப்டின் இரு கதவுகளுக்கு நடுவில் தடுப்பு போல நின்று கொண்டதால், அந்த லிப்ட் மூடாமல், மேலும் கீழும் நகராமல் அங்கேயே நின்றது.

மேலும் படிக்க: நண்பனின் மனைவியை வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய நபர்.. அதிர்ச்சி சம்பவம்!

மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்ப்பு

இதனால், மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. இதில், ஒரு நபர் இந்த லிப்டின் கதவு வித்தியாசமாக செயல்பட்டுள்ளது. லிப்டின் கதவுகளுக்கு நடுவில் ஏதேனும் தடை ஏற்பட்டால் அந்த கதவுகள் தானாக திறக்கப்பட வேண்டும். இந்த சம்பவத்தில் அது நடைபெறவில்லை என்று பதிவிட்டுள்ளார். மற்றொருவர், பழுதடைந்த லிப்டுக்கு அதன் உற்பத்தியாளர் பொறுப்பேற்க வேண்டும். கதவுகளுக்கு நடுவில் தடை ஏற்பட்டால் கதவு உடனடியாக திறக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

பெற்றோர்- பாதுகாவலரின் அலட்சியம்

இதேபோல, மற்றொரு நபர் இது முழுக்க முழுக்க லிப்டின் தவறாகும். அத்துடன், அந்த குழந்தைகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களின் அலட்சியமும் இதற்கு காரணமாகும். இந்த சம்பவத்தில் அந்த சிறுமி தைரியமாக செயல்பட்டு இரு குழந்தைகளையும் பத்திரமாக மீட்டுள்ளார். இது மிகவும் ஆபத்தான நடவடிக்கை ஆகும். லிப்ட் செயல்படாமல் போயிருந்தால் அந்த சிறுமியின் கால்கள் லிப்டின் உள்ளே மாட்டியிருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: பாஜக தேசிய தலைவருக்கு ஆசி வழங்கிய மகந்த் சுவாமி மகாராஜ் – வைரலாகும் படங்கள்

ஒரு மில்லியன் ரீல்ஸ் - அல்லு அர்ஜூன் - லோகேஷ் கனகராஜ் கொண்டாட்டம்
நடிகர் சல்மான் கானின் தந்தை மருத்துவமனையில் அனுமதி
ஈரானை தாக்க தயாராகும் அமெரிக்கா - வெளியான பரபரப்பு தகவல்
கார்திக் சுப்புராஜ் படத்தில் நடிகர் சுஹாஸ்!