B Sudershan Reddy: துணை குடியரசுத் தலைவர் தேர்தல்.. இந்தியா கூட்டணி வேட்பாளர் அறிவிப்பு!
Vice Presidential Election: 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 அம் தேதி துணை குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. அவரை எதிர்த்து தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் தான் இந்தியா கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

சுதர்சன் ரெட்டி
டெல்லி, ஆகஸ்ட் 19: குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு எதிர்க்கட்சிகள் இணைந்த இந்தியா கூட்டணியின் வேட்பாளராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார். 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 அம் தேதி துணை குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக தற்போதைய மகாராஷ்ட்ரா ஆளுநரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டிருந்தார். இதனிடையே அவரை எதிர்த்து தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் தான் இந்தியா கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இரண்டு நாட்கள் இழுபறிக்கு பின் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வேட்பாளர் பெயரை கூட்டணி கட்சிகளுடனான ஆலோசனைக்குப் பின் அறிவித்தார்.
சுதர்சன் ரெட்டி யார் தெரியுமா?
#WATCH | INDIA alliance names former Supreme Court Judge B. Sudershan Reddy as its candidate for the Vice President of India post
Congress President Mallikarjun Kharge says, “He will nomination on August 21. Tomorrow, all opposition parties’ MPs are meeting in the central hall… pic.twitter.com/Bf9AimasPx
— ANI (@ANI) August 19, 2025
ஆந்திரப் பிரதேசத்தின் ரங்காரெட்டி மாவட்டத்தில் சுதர்சன ரெட்டி பிறந்தார். இவர் 1971 ஆம் ஆண்டு வழக்கறிஞராக தனது பணி வாழ்க்கையைத் தொடங்கினார். அதன்பிறகு ஆந்திரப்பிரதேச உயர்நீதிமன்றத்தில் பயிற்சி பெற்ற நிலையில், 1995 ஆம் ஆண்டு அம்மாநில உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் கவுகாத்தி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார்.
Also Read: பாஜகவின் துணை ஜனாதிபதி வேட்பாளராக சி.பி ராதாகிருஷ்ணன் அறிவிப்பு.. இவர் கடந்து வந்த பாதை என்ன?
புகழ்பெற்ற சட்ட வல்லுநராக திகழ்ந்த சுதர்சன ரெட்டி 2007ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திய உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கிட்டதட்ட 4 ஆண்டுகள் பணியாற்றிய அவர் 2011ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஓய்வு பெற்றார். அதன் பிறகு, கோவாவில் அரசு ஊழியர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க மாநில அரசால் அமைக்கப்பட்ட அமைப்பான முதல் லோக்ஆயுக்தாவில் பணியாற்றியுள்ளார்.
குடியரசுத் துணைத்தலைவர் தேர்தல்
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள். காலியிடங்களை தவிர்த்து பார்த்தால் 782 உறுப்பினர்கள் தற்போது உள்ளனர். இதில் வெற்றி பெற குறைந்தது 392 வாக்குகளை பெற வேண்டும் என்ற நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மக்களவையில் 293 உறுப்பினர்களையும், மாநிலங்களவையில் 133 உறுப்பினர்களையும் கொண்டிருக்கிறது. இந்த எண்ணிக்கையில் பார்த்தால் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளரான சிபி ராதாகிருஷ்ணன் மிக எளிதாக வெற்றி பெறுவார் என கணிக்கப்பட்டுள்ளது.
Also Read: டெல்லியில் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு உற்சாக வரவேற்பு
அதேசமயம் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள திமுகவுக்கு சிக்கலான சூழல் எழுந்துள்ளது. அதாவது திமுக கூட்டணி இந்தியா கூட்டணி வேட்பாளரை ஆதரிக்க போகிறார்களா அல்லது தமிழ்நாட்டைச் சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணனை ஆதரவு கொடுப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.