நள்ளிரவில் பிரிட்ஜில் இருந்த பச்சிளம் குழந்தை.. தாய் செய்த செயல்.. அடுத்து நடந்த ஷாக்!

Uttar Pradesh Women Puts Baby In Fridge : உத்தர பிரதேச மாநிலத்தில் பிறந்த 15 நாட்களே ஆன குழந்தையை, தாய் பிரிட்ஜில் வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குழந்தையை அழுகை சத்தத்தை கேட்ட குடும்பத்தினர், குழந்தையை உடனே பிரிட்ஜில் இருந்து வெளியே எடுத்தனர். குழந்தைக்கு நல்வாய்ப்பாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

நள்ளிரவில் பிரிட்ஜில் இருந்த பச்சிளம் குழந்தை.. தாய் செய்த செயல்.. அடுத்து நடந்த ஷாக்!

மாதிரிப்படம்

Updated On: 

11 Sep 2025 08:57 AM

 IST

உத்தர பிரதேசம், செப்டம்பர் 11 : உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில், ஒரு பெண் தனது 15 நாள் பிறந்த குழந்தையை பிரிட்ஜில் வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுததியுள்ளது. பிரவசத்திற்கு பிறகு அந்த பெண்ணுக்கு லேசான மனநிலை பாதிக்கப்பட்டது தெரியவந்தது. அதாவது, இதனை Postpartum depression எனக் மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால் தான், அந்த பெண் தனது பச்சிளம் குழந்தையை பிரிட்ஜில் வைத்து மூடியது தெரியவந்துள்ளது. பெரும்பாலான பெண்களுக்கு பிரசவத்திற்கு பிறகு, மனச் சோர்வ, மனக்கவலை, மன அழுத்தம் ஏற்படக் கூடும். இதனை Postpartum Depression என அழைக்கப்படுகிறது. இது பிரசவத்திற்கு பிறகு 4 முதல் 8 வாரங்களுக்கு இருக்கும். இந்த Postpartum Depression-னால் பெண்கள் பச்சிளம் குழந்தைகளை என்ன செய்வதன்று தெரியாமல், கொலை வரை கூட சென்றிருக்கிறது.

அந்த அளவுக்கு பெண்கள் பிரசவத்திற்கு பிறகு, மன அழுத்தத்தில் இருந்து வருகிறது. இந்த நிலையில், உத்தர பிரதேசத்தில் பெண் ஒருவர் Postpartum Depression-ஐ அனுபவிக்கும் நிலையில், தனது பச்சிளம் குழந்தையை பிரிட்ஜில் தூங்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது, உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் கருலாவைச் சேர்ந்தவர் பெண் ஒருவர், தனது கணவர், மாமியாருடன் வசித்து வருகிறார். இவர கணவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்த பெண்ணுக்கு 15 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில், 2025 செப்டம்ர் 5ஆம் தேதி குழந்தை தொடர்ந்து அழுது கொண்டிருந்தது. இதனால், அந்த பெண் தனது குழந்தையை சமையலறைக்குள் தூக்கிச் சென்று, குளிர்சாதன பெட்டியில் வைத்துவிட்டு மீண்டும் படுக்கைக்குச் சென்றார்.

Also Read : கசந்த 5 ஆண்டு கால காதல்.. இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

பச்சிளம் குழந்தையை பிரிட்ஜில் வைத்த தாய்

குழந்தை ஃப்ரீசரில் வைக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, அது அழத் தொடங்கியது. குழந்தையின் அழுகை சத்தம் கேட்ட குடும்பத்தினர், உடனே குழந்தை பிரிட்ஜில் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உடனடியாக குடும்ப உறுப்பினர்கள் 15 நாள் குழந்தையை ஃப்ரீசரில் இருந்து வெளியே எடுத்தனர். இதுகுறித்து குடும்பத்தினர் அந்த பெண்ணிடம் ஏன் இப்படி செய்தாய் என கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ”குழந்தை தூங்கவில்லை.

அதனால் நான் அவனை குளிர்சாதன பெட்டியில் வைத்தேன்” என கூலாக பதில் கொடுத்துள்ளார். இதனை அடுத்து, அந்த பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். முன்னதாக, இவருக்கு பேய் போன்றவை பிடித்திருக்கலாம் என எண்ணி, உள்ளூர் மந்திரவாதியிடம் அழைத்து சென்றனர். இதனை அறிந்த பெண்ணின் உறவினர் மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தியதை அடுத்து, அந்த பெண்ணுக்கு மனநல மருத்துவமனையில் சிகிச்சை  அளிக்கப்பட்டு வருகிறது.

Also Read : புலி கூண்டில் வனத்துறை அதிகாரிகள்.. பொதுமக்கள் கொடுத்த தண்டனை… காரணம் இதுவா?

எனவே, குழந்தைகள் பெற்ற இளம்தாய்மார்களுக்கு மனக் கவலை என்பது இருக்கும். உடல்களில் மாற்றங்களை எதிர்கொள்ளும்போது, இதுபோன்ற மனச்சோர்வை போன்றவை ஏற்படக் கூடும். இந்த நேரத்தில், குடும்பத்தில் இருப்பவர்கள் அவர்களுக்கு பக்கபலமாக இருந்து உதவி செய்யும், அவர்களுக்கு ஆறுதலாக இருக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.