சாலையில் சென்ற காரில் இருந்து சிறுநீர் கழித்த நபர்.. அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறை!

Two Arrested After Video Goes Viral | ஹரியானாவில் சாலையில் சென்றுக்கொண்டு இருந்த காரில் இருந்து கதவை திறந்து வெளியே வந்த நபர் ஒருவர் ஓடும் காரில் இருந்து சிறுநீர் கழித்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், காவல்துறை அது தொடர்பாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

சாலையில் சென்ற காரில் இருந்து சிறுநீர் கழித்த நபர்.. அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறை!

வைரல் வீடியோ

Published: 

26 Oct 2025 08:57 AM

 IST

சண்டிகர், அக்டோபர் 26 : ஹரியானாவில் (Haryana) சாலையில் சென்றுக்கொண்டு இருந்த காரின் கதவை திறந்து சிறுநீர் கழித்த விவகாரத்தில் இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அந்த நபர்கள் காரில் சென்றபடி சிறுநீர் கழிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து இந்த நடவடிக்கையை காவல்துறை மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில், சாலையில் சென்ற காரில் இருந்து சிறுநீர் கழித்தவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக விரிவாக பார்க்கலாம்.

சாலையில் சென்ற கார் – கதவை திறந்து சிறுநீர் கழித்த இருவர்

ஹரியானா மாநிலம், குருகிராமில் உள்ள சாகர் பஜார் பகுதியில் சாலையில் கார் ஒன்று சென்றுக்கொண்டு இருந்துள்ளது. இந்த நிலையில், சாலையில் சென்றுக்கொண்ட காரில் இருந்து ஒருவர் கதவை திறந்து சிறுநீர் கழித்துள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக, இந்த விவகாரத்தில் ஈடுபட்ட நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

இதையும் படிங்க : பெண்கள் தங்க நகைகளை அணிய கட்டுப்பாடு விதித்த கிராமம்.. காரணம் இதுதான்!

வைரல் வீடியோ குறித்து நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறை

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில், சாலையில் தார் ராக்ஸ் கார் ஒன்று செல்கிறது. போக்குவரத்து மிகுந்த பகுதியில் அந்த கார் செல்லும் நிலையில், அதில் இருந்து கதவை திறந்து வெளியே வரும் நபர் ஒருவர் சிறுநீர் கழிக்கிறார். இதனை அந்த காருக்கு பின்னால் சென்ற மற்றொரு காரில் இருந்த நபர்கள் வீடியோ பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : வரதட்சணை கொடுமை.. திருமணமான 6 மாதங்களில் இளம் பெண் தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்!

இந்த விவகாரம் குறித்து விசாரணையை தொடங்கிய போலீசார், இது தொடர்பாக மோகித் என்ற 25 வயது இளைஞரையும், அனுஜ் என்ற வயது இளைஞரையும் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்கள் பயணம் செய்த காரையும் பறிமுதல் செய்துள்ளனர். காவல்துறையின் இந்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.