6ம் வகுப்பு முதல் மும்மொழிக் கொள்கை.. 2026 முதல் அமல்.. சிபிஎஸ்இ அதிரடி அறிவிப்பு!!

மும்மொழிக் கொள்கையில் புதிய தேசிய பாடத்திட்ட கட்டமைப்பின்படி, மாணவர்கள் படிக்கும் 3 மொழிகளில் குறைந்தபட்சம் 2 மொழிகள் இந்தியாவை சேர்ந்தவையாக இருக்க வேண்டும். 2026-27 ஆம் கல்வியாண்டு முதல் 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு 3-வது மொழி கட்டாயமாக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டிருக்கிறது.

6ம் வகுப்பு முதல் மும்மொழிக் கொள்கை.. 2026 முதல் அமல்.. சிபிஎஸ்இ அதிரடி அறிவிப்பு!!

மாதிரிப் புகைப்படம்

Published: 

04 Apr 2026 10:52 AM

 IST

2026-27ம் கல்வியாண்டில் இருந்து பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் மும்மொழி கொள்கை நடைமுறைப்படுத்தப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. சிபிஎஸ்இ நிர்வாகம், கல்வி முறையில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்து கொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2026-27-ம் கல்வியாண்டு முதல் புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி, 6-ம் வகுப்பு முதல் மும்மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படும் என்றும், 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம், அறிவியல் பாடங்களில் நிலையான மற்றும் விருப்பத்தேர்வான மேம்பட்ட நிலைகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதையும் படிக்க : மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றம்.. எரிப்பொருள் முதல் உரங்கள் வரை.. அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?

2 இந்திய மொழிகள் கட்டாயம்:

இதில் மும்மொழிக் கொள்கையில் புதிய தேசிய பாடத்திட்ட கட்டமைப்பின்படி, மாணவர்கள் படிக்கும் 3 மொழிகளில் குறைந்தபட்சம் 2 மொழிகள் இந்தியாவை சேர்ந்தவையாக இருக்க வேண்டும். பல மொழி சார்ந்த கல்வியை வாரியம் படிப்படியாக செயல்படுத்தி வருவதன் தொடர்ச்சியாக 2026-27-ம் கல்வியாண்டு முதல் 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு 3-வது மொழி கட்டாயமாக்கப்படும் என்றும், இதன் மூலம் ஒவ்வொரு மாணவரும் குறைந்தது 2 இந்திய மொழிகளையாவது கற்பது உறுதி செய்யப்படும் என கூறப்பட்டிருக்கிறது.

இருநிலை தேர்வு முறை:

இந்த நடைமுறையில், வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் படித்துவிட்டு திரும்பும் மாணவர்கள், 8, 9-ம் வகுப்பு வரை தாங்கள் படித்த 3-வது மொழி உள்நாட்டு பள்ளிகளில் கற்பிக்கப்படாமல் இருந்தால், அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகளின்படி, அந்த மாணவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படலாம். இருப்பினும் அவர்கள் கல்வித் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மொத்த பாடங்களின் எண்ணிக்கையை முழுமையாக கற்பது கட்டாயம் ஆகும் என சிபிஎஸ்இ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கட்டாயம் எழுதவேண்டும்:

இதேபோல், 9ம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம், அறிவியல் பாடங்களில் இருநிலை தேர்வு முறை அறிமுகப்படுத்துவது பற்றிய விளக்கத்தையும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. அதில், முதலாவது தரநிலை (ஸ்டாண்டர்டு) பாடத்திட்டத்தை படித்து 80 மதிப்பெண்களுக்கான 3 மணி நேர பொதுத்தேர்வை அனைத்து மாணவர்களும் கட்டாயம் எழுதவேண்டும். இதில் கூடுதல் திறன் பெற விரும்பும் மாணவர்கள், கணிதம் மற்றும் அறிவியல் அல்லது இரண்டு பாடங்களிலும் மேம்பட்ட நிலையை (அட்வான்ஸ்டு) தேர்வு செய்யலாம்.

இதையும் படிக்க: லாட்டரியில் ரூ.10 கோடி பரிசு.. கேரளா சூப்பர் மார்க்கெட் ஊழியருக்கு ஜாக்பாட்!

25 மதிப்பெண்களுக்கு ஒரு மணி நேரம் தேர்வு:

இது விருப்பத்தேர்வுதான். இதற்காக 25 மதிப்பெண்களுக்கு ஒரு மணி நேரம் தேர்வு நடத்தப்படும். அதில் பெறும் மதிப்பெண்கள் ஒட்டுமொத்த தொகுப்பு மதிப்பெண்ணுடன் சேர்க்கப்படாது. மாறாக 50 சதவீதம் அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெறும் மாணவர்களின் மதிப்பெண் தாளில் ‘மேம்பட்ட நிலைத் தகுதி’ என குறிப்பிடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டமைப்பின் கீழ் 10-ம் வகுப்புக்கும் முதல் பொதுத் தேர்வுகள் 2028-ம் கல்வியாண்டில் இருந்து நடத்தப்படும் எனவும் சிபிஎஸ்இ கூறியிருக்கிறது.

Follow Us
ரயில் டிக்கெட் ரத்து செய்வதில் புதிய மாற்றம் - இனி முழு கட்டணமும் திரும்ப கிடைக்காது!
அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களை தாக்குவோம் - ஈரான் எச்சரிக்கையால் மீண்டும் பதற்றம்
துல்கர் சல்மானுடன் மோதலா? டோவினோ தாமஸ் அதிரடி பதில்!
மீண்டும் சரிந்த தங்கம் விலை.