இன்று கூடும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்.. தாக்கல் செய்யப்படும் முக்கிய மசோதாக்கள் என்ன?

The monsoon session of Parliament: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. நாடாளுமன்ற நிகழ்வின் படி முதல் நாளான 2025 ஜூலை 21ஆம் தேதி பிரதமர் மோடி உரையாற்றி தொடங்கி வைப்பார். அதனைத் தொடர்ந்து இம்முறை பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் அதன் மீது விவாதங்கள் நடத்தப்படும் எனவும் கூறப்படுகிறது.

இன்று கூடும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்.. தாக்கல் செய்யப்படும் முக்கிய மசோதாக்கள் என்ன?

கோப்பு புகைப்படம்

Published: 

21 Jul 2025 09:57 AM

டெல்லி, ஜூலை 21, 2025: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று அதாவது 2025 ஜூலை 21ஆம் தேதி தொடங்குகிறது. இந்து தொடர் ஆகஸ்ட் 21 2025 வரை ஒரு மாத காலத்திற்கு நடக்க உள்ளது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்ற நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரானது தற்போது தொடங்குகிறது. இந்த கூட்ட தொடரில் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் என்பதால் முந்தைய இரண்டு நாட்கள் அதாவது 2025 ஆகஸ்ட் 13 மற்றும் ஆகஸ்ட் 14 என மொத்தம் மூன்று நாட்கள் நாடாளுமன்ற கூட்டு தொடர் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆபரேஷன் சிந்தூருக்கு பின் கூடும் நாடாளுமன்ற கூட்டத்தொடர்:

2025 ஜூலை 21ஆம் தேதி தொடங்கும் இந்த நாடாளுமன்ற கூட்ட தொடரானது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு மே மாதம் இந்தியா தரப்பில் ஆபரேஷன் சிந்தூர் மேற்கொள்ளப்பட்டது. அதாவது ஜம்மு காஷ்மீரின் பஹல்ஹாமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா தரப்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து முதல் முறையாக தற்போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் கூடுகிறது.

Also Read: ஜூலை 21 ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்.. 8 மசோதாக்கல் நிறைவேற்ற திட்டம்..

திட்டம் என்ன?

நாடாளுமன்ற நிகழ்வின் படி முதல் நாளான 2025 ஜூலை 21ஆம் தேதி பிரதமர் மோடி உரையாற்றி தொடங்கி வைப்பார். அதனைத் தொடர்ந்து இம்முறை பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் அதன் மீது விவாதங்கள் நடத்தப்படும் எனவும் கூறப்படுகிறது. அதில் முக்கியமாக சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் ஒரு முக்கிய அம்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் ஆபரேஷன் சிந்துரின் போது இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகள் இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே இருந்த மோதல் குறித்து எதிர்க்கட்சிகள் தரப்பில் கேள்விகள் எழுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டால் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இது நடைமுறைக்கு கொண்டுவரப்படும்.

Also Read: ஆபரேஷன் சிந்தூரில் ராணுவத்தினருக்கு பால், டீ கொண்டு சென்ற சிறுவன்.. கல்வி செலவை ஏற்ற ராணுவம்!

கூட்டத்தொடரில் கலந்துக்கொள்ளும் 54 தலைவர்கள்:

இதற்கு இடையில் 2025 ஜூலை 20 அன்று கூடிய அனைத்து கட்சி கூட்டத்திற்கு பின் மதிய நாடாளுமன்ற விவகார அமைச்சர் திறன் பிரிஜி ஜூ நாடாளுமன்றம் சுமுகமாக செயல்படுபவரை உறுதி செய்ய ஆளு மற்றும் எதிர்கட்சிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. அதேபோல் இந்த நாடாளுமன்ற விவகார அமைச்சகத்தின் வெளியீட்டின்படி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் அமைச்சர்கள் உட்பட 40 அரசியல் கட்சிகளை சேர்ந்த 54 தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

என்னென்ன மசோதாக்கல் நிறைவேற்றப்படும்?

  • சட்டமன்ற வணிகம் சரக்கு போக்குவரத்து மசோதா 2024
  • கடல் வழியாக பொருட்களை எடுத்துச் சொல்லும் மசோதா 2024
  • கடலோர கப்பல் போக்குவரத்து மசோதா
  • கோவா மாநில சட்டமன்ற தொகுதிகளில் பட்டியலிடப்பட்ட பழங்குடியினரின் பிரதிநிதித்துவத்தை மறுசீரமைத்தல் மசோதா
  • வணிகக் கப்பல் போக்குவரத்து மசோதா
  • இந்திய துறைமுக மசோதா வருமானவரி மசோதா
  • மணிப்பூர் சரக்கு மற்றும் சேவை வரி திருத்த மசோதா
  • ஜன் விஷ்வாஷ் மசோதா
  • இந்திய மேலாண்மை நிறுவனங்கள் மசோதா
  • வரிவிதிப்பு சட்டங்கள் மசோதா
  • புவிசார் பாரம்பரிய தளங்கள் மற்றும் புவிசார் நினைவு சின்னங்கள் மசோதா
  • சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் திருத்த மசோதா
  • தேசிய விளையாட்டு ஆளுகை மசோதா
  • தேசிய ஊக்க மருந்து எதிர்ப்பு துரத்த மசோதா
  • 2025 – 2026 ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு
  • மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை நீடிப்பதற்கான ஒப்புதலை கோரும் தீர்மானம்