பகலில் IT வேலை, சொகுசு வாழ்க்கை.. இரவில் வீடு வீடாக திருட்டு.. போலீசாருக்கு தண்ணி காட்டிய பலே கில்லாடி!!
Techie's "Lavish Lifestyle" Funded By 60 Robberies: தொடர் திருட்டில் ஈடுபட்டதன் மூலம் கிடைத்த பணத்தில், சொகுசு வாழ்க்கை வாழந்து வந்ததும் தெரியவந்துள்ளது. அதாவது, திருட்டு தொழிலுக்காக முதலில் ஒரு நபரின் பைக்கை திருடிய அந்த நபர், அதையே அனைத்து திருட்டிற்கும் பயன்படுத்தி வந்துள்ளார்.

திருட்டில் ஈடுபட்டு வந்த நபர்
ஆந்திரா, பிப்ரவரி 11: ஆந்திராவில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த ஐ.டி ஊழியர் ஒருவர் போலீசாரிடம் சிக்கியுள்ளார். கிட்டதட்ட 26 இடங்களில் கைவரிசை காட்டி வந்த அந்த நபர், ஒரு இடத்தில் கூட தடயம் விடாமல் திருடிவந்துள்ளான். இதனால் போலீசாரால் திருடனை படிக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஒவ்வொரு வீட்டில் திருடும்போது தடயத்தை விட்டுச்சென்று விடக்கூடாது என்பதில், மிகுந்த கவனம் செலுத்தி வந்துள்ளான். எனினும், 27வது முறையாக ஒரு வீட்டில் திருடிய அந்த நபர், சிறிய தடயத்தை தவறுதலாக விட்டுச்சென்றதாக தெரிகிறது. இதன் மூலம் துப்பறிந்த போலீசார், திருடனை கையும் களவுமாக பிடித்துள்ளனர். இந்த சுவாரஸ்ய திருடன் குறித்து இக்கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க: 30 ஆண்டுகள் சிறை.. நிரபராதி என கூறி விடுதலை.. அடுத்த நாளே உயிரிழந்த சோகம்.. நடந்தது என்ன?
தடயம் இல்லாமல் திருட்டு:
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் நகரின் பல்வேறு பகுதிகளிலும் அடிக்கடி தொடர் திருட்டுச் சம்பவங்கள் நிகழ்ந்து வந்துள்ளன. குறிப்பாக கடந்த சில மாதங்களாக நடந்து வந்த இந்த திருட்டு சம்பவங்களில் போலீசாருக்கு எந்த தடயமும் கிடைக்காமல் இருந்து வந்துள்ளது. இதனால், இந்த திருட்டு வழக்குகளை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச்செல்ல முடியாமல் அவர்கள் திணறி வந்துள்ளனர். இதற்காகவே, இரவு நேரங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கி கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். எனினும், திருடனை பிடிக்க முடியாமல் இருந்தது.
சிறிய தடயம் மூலம் சிக்கிய திருடன்:
இந்த நிலையில், கஜுவாகா பகுதியில் ஒரு திருட்டு சம்பவம் நிகழ்ந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று விசாரித்தபோது, சிறிய தடயம் ஒன்றை திருடன் விட்டுச்சென்றதாக தெரிகிறது. அதன் அடிப்படையில் விசாரணையை தொடங்கிய போலீசார், திருட்டில் ஈடுபட்டவரை சில மணி நேர விசாரணையில் கண்டுபிடித்து கைது செய்தனர். அந்த நபர் மென்பொருள் துறையில் வேலை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. திருடுவதற்காக பகலில் பல்வேறு இடங்களை நோட்டம் விட்டு வந்த அந்த நபர், குறிப்பிட்ட இடைவெளியில் திருட்டுகளை அரங்கேற்றி வந்துள்ளான்.
ஐடி துறையில் வேலை பார்த்தவாறு திருட்டு:
அதோடு, தொடர் திருட்டில் ஈடுபட்டதன் மூலம் கிடைத்த பணத்தில், சொகுசு வாழ்க்கை வாழந்து வந்ததும் தெரியவந்துள்ளது. அதாவது, திருட்டு தொழிலுக்காக முதலில் ஒரு நபரின் பைக்கை திருடிய அந்த நபர், அதையே அனைத்து திருட்டிற்கும் பயன்படுத்தி வந்துள்ளார். ஐடி துறையில் வேலை செய்வதால், கைரேகைகள் மற்றும் தடங்கயங்களை விட்டுச் செல்லாதவாறு நன்கு திட்டமிட்டு திருட்டுகளை அரங்கேற்றி வந்துள்ளார்.
திருடிய பணத்தில் சொகுசு கார்:
மேலும், திருடிய பணத்தில் பிம்டபுள்யூ சொகுசு கார் ஒன்றை வாங்கி பயன்படுத்தி வந்ததும் தெரியவந்துள்ளது. இதுவரை 26 இடங்களில் திருடியுள்ள அந்த நபர் அங்கிருந்து 699 கிராம் தங்கம், 3.8 கிலோ வெள்ளி மற்றும் சொகுசு கார், வீட்டை உடைக்க பயன்படுத்தும் கருவி உள்ளிட்டவை அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் அவரிடம் நடந்த விசாரணையில் பல்வேறு திடுக் தகவல்களும் கிடைத்துள்ளன.
இதையும் படிங்க: மும்பை ரயிலில் பர்தா அணிந்து பெண் பயணிகளிடம் பாலியல் சீண்டல் செய்த நபர்.. அதிர்ச்சி சம்பவம்!
சிறுவர் சீர் திருத்தப் பள்ளியில் இருந்த நபர்:
அதன்படி, பிடிபிட்ட அந்த ஐடி ஊழியர் பெயர் அச்சி மகேஷ் ரெட்டி என்பதும், அவர் சிறு வயதிலும் திருட்டில் ஈடுபட்டு சிறார் சீர் திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது. அதன்படி, தற்போது திருட்டில் ஈடுபட்ட 26 வழக்குகளிலும் ஒரு கிலோவுக்கும் அதிகமான தங்கம், 6 கிலோ வெள்ளி மற்றும் ரூ.40,000 பணம் ஆகியவை திருடுபோனதாக வழக்குகள் பதிவாகி உள்ளன. அதன் மொத்த மதிப்பு ரூ.25 லட்சத்திற்கு அதிகம் என கணக்கிடப்பட்டுள்ளது.