கல்வி நிதி விவகாரம்.. மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு!
Three Language Policy : சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு தர வேண்டிய கல்வி நிதி ரூ.2,291 கோடியை மத்திய அரசு விடுவிக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. தேசிய கல்விக் கொள்கைகை செயல்படுத்தாததால், கல்வி நிதியை நிறுத்தி வைப்பது சட்டவிரோதம் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் - தமிழக முதல்வர் ஸ்டாலின்
டெல்லி, மே 21 : தமிழகத்திற்கு தர வேண்டிய கல்வி நிதியை (Education fund) உடனடியாக விடுவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. தேசிய கல்விக் கொள்கையை (National education policy) ஏற்றால் தான் ரூ.2,291 கோடி கல்வி நிதி வழங்கப்படும் என மத்திய அரசு கூறுவது சட்டவிரோதம் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும், பிஎம் ஸ்ரீ, அபியான் திட்டத்தின் நிதியை நிறுத்தி வைத்தது சட்டவிரோதம் என்றும் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தாதால் நிதியை நிறுத்தி வைப்பது ஏற்புடையதல்ல என மனுவில் தமிழக அரசு கூறியிருக்கிறது. சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கான ரூ.2,291 நிதியை மத்திய அரசு வழங்கு மறுத்து வருகிறது. இதனால், தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. பலமுறை கல்வி நிதி கேட்டு தமிழக அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டு வலியுறுத்தப்பட்டது.
கல்வி நிதி விவகாரம்
இருப்பினும், மத்திய அரசு தமிழகத்திற்கான கல்விநிதியை வழங்கவில்லை. புதிய கல்விக் கொள்கையை ஏற்றால் தான் தமிழகத்திற்கான கல்வி நிதி வழங்கப்படும் என மத்திய அரசு கூறி வருகிறது. பிஎம்ஸ்ரீ திட்டம் புதிய கல்விக் கொள்கையுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால், புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் மாநிலங்களுக்கு மட்டுமே கல்வி நிதி வழங்கப்படும் என மத்திய அரசு கூறியிருக்கிறது.
எனவே, புதிய கல்விக் கொள்கையை ஏற்றால் தான், தமிழகத்திற்கான நிதி வழங்கப்படும் என மத்திய அரசு திட்டவட்டமாக கூறி வருகிறது. ஆனால், மும்மொழிக் கொள்கை மூலம் மத்திய அரசு இந்தியை திணிப்பதாக தமிழக அரசு குற்றச்சாட்டி வருகிறது.
இதனால், எந்த காலத்திற்கும் மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்றும் மூம்மொழிக் கொள்கையை ஏற்றால் இடைநிற்றல் அதிகரிக்கும் என தமிழக அரசு கூறி வருகிறது. இந்த நிலையில், தமிழக அரசு கல்வி நிதி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு
Tamil Nadu Government has filed a petition before the Supreme Court against the Union Government for allegedly withholding funds under the Samagira Sikha Scheme
— ANI (@ANI) May 21, 2025
அதாவது, சமக்ரா திட்டத்துக்கான நிதியை 6 சதவீத வட்டியுடன் ரூ.2,291 கோடி வழங்க உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்தள்ளதால் மாணவர்கள் கடும் பாதிக்கப்படுவதாகவும் தமிழக அரசு மனுவில் குறிப்பிட்டுள்ளது.
அண்மையில் கூட முதல்வர் ஸ்டாலின், ”மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சென்றடைய வேண்டிய நிதி, அற்ப அரசியல் காரணமாக மத்திய அரசால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, கல்வி நிதி தொடர்பாக உச்ச நீதிமன்றதை அணுகுவோம். மாநிலங்களின் கூட்டாட்சி உரிமைகள் தொடர்பான பல வழக்குகளில் தமிழ்நாடு சமீபத்தில் சாதகமான தீர்ப்புகளைப் பெற்றுள்ளது. எனவே, இந்த வழக்கும் தனக்கு சாதகமாக இருக்கும்” என கூறியிருந்தார்.