மரணத்தின் பிடியில் நிமிஷா பிரியா.. உச்ச நீதிமன்றத்தில் மனு.. காப்பாற்றப்படுவாரா?

Nimisha Priya Case : கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு 2025 ஜூலை 16ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்படும் நிலையில், அவரை காப்பாற்ற கோரி அவரது தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதை அடுத்து, 2025 ஜூலை 11ஆம் தேதியான நாளை விசாரிக்க பட்டியலிடுவதாக நீதிபதிகள் சுதன்ஷு துலியா மற்றும்  ஜாய்மல்யா பாக்சி அறிவித்துள்ளனர்.

மரணத்தின் பிடியில் நிமிஷா பிரியா.. உச்ச நீதிமன்றத்தில் மனு.. காப்பாற்றப்படுவாரா?

நிமிஷா பிரியா

Updated On: 

10 Jul 2025 13:57 PM

டெல்லி, ஜூலை 10 : கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு (Nimisha Priya Case) ஏமன் நாட்டில் விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனை (Nimisha Priya Execution) 2025 ஜூலை 16ஆம் தேதி நிறைவேற்றப்பட உள்ளது. அவரை காப்பாற்ற தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இந்த விவகாரத்தில் இந்திய அரசு உதவ வேண்டும் எனவும் நிமிஷா பிரியா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை நிறுத்த நடவடிக்கை எடுக்க கோரி உச்ச நீதிமன்றம் நிமிஷா பிரியா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை 2025 ஜூலை 11ஆம் தேதியான நாளை நடத்தப்படும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறிவித்துள்ளனர். நீதிபதிகள் சுதன்ஷு துலியா மற்றும்  ஜாய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு நிமிஷா பிரியாவின் மனுவை 2025 ஜூலை 11ஆம் தேதியான நாளை விசாரிக்கிறது.

முதலில் நீதிமன்றம் இந்த மனுவை 2025 ஜூலை 14ஆம் தேதி பட்டியலிட ஒப்புக் கொண்டது. இருப்பினும், 2025 ஜூலை 16ஆம் தேதி மரணதண்டனை நிறைவேற்றப்படுவதால், இந்திய அரசு ராஜாங்க ரீதியான நடவடிக்கைகளுக்கு இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளதால், அது பயனுள்ளதாக இருக்காது என்று மூத்த வழக்கறிஞர் ராகேந்திர பசந்த் நீதிபதியிடம் சுட்டிக்காட்டினார். இதனால், இன்று அல்லது நாளை பட்டியலிடமாறு முறையிட்டார். இதனை கேட்ட நீதிபதிகள் வழக்கை 2025 ஜூலை 10ஆம் தேதி விசாரிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

Also Read : ஏமனில் ஜூலை 16ல் மரண தண்டனை.. நிமிஷா பிரியாவை காப்பாற்ற முடியுமா? கடைசி வாய்ப்பு!

நிமிஷா பிரியாவுக்கு ஜூலை 16ல் மரண தண்டனை

கேரள மாவட்டம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் நிமிஷா பிரியா. இவர் 2008ஆம் ஆண்டு ஏமனுக்கு குடிபெயர்ந்தார். இவர் ஏமனில் பல மருத்துவமனைகளில் பணிபுரிந்த அவர், சொந்தமாக கிளினிக் வைக்க முடிவு செய்தார். ஆனால், ஏமனில் வெளிநாட்டவர்கள் கிளினிக் தொடங்க வேண்டுமென்றால், அந்நாட்டவருடன் இணைந்தே அதைத் செய்ய இயலும். அதனால் தான், தலால் அப்தோ மஹ்தியுடன் கூட்டமாக நிமிஷா பிரியா கிளினிக் ஆரம்பித்தார்.

சில நாட்களுக்கு கழித்து நிமிஷா பிரியாவின் பாஸ்போர்ட், கிளினிக் வருமானம் உள்ளிட்டவற்றை தலால் அப்து மாஹதி பறித்து கொண்டதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி, நிமிஷா பிரியாவை துன்புறுத்தியதாகவும் தெரிகிறது- இதனை அடுத்து, 2017ஆம் ஆண்டு தனது பாஸ்போர்ட்டை மீட்க அதிகமாக மயக்க மருந்து கொடுத்ததால், மாஹதி உயிரிழந்தார்.

இதனை அடுத்து, நிமிஷா மீது வழக்குப்பதிவு செய்து 2017ல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 2018ல் நிமிஷா பிரியா குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதோடு, மரண தண்டனையும் அறிவிக்கப்பட்டது. இதனை அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் 2023ல் உறுதி செய்தது. 2024ஆம் ஆண்டு ஏமன் ஜனாதிபதி மரண தண்டனையை உறுதி செய்தார்.

Also Read : பாலின ஒடுக்குமுறை.. இரண்டு தாலிபான் தலைவர்களுக்கு எதிராக கைது வாரண்ட்.. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அதிரடி..

தற்போது, அவருக்கு மரண தண்டனை 2025 ஜூலை 16ல் நிறைவேற்றப்பட உள்ளது. எனவே, இவரை காப்பாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், மஹாதி குடும்பத்தினர் நஷ்ட ஈடு தொகையை வாங்க ஒப்புக் கொண்டார், இவர் காப்பாற்றப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.