நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து.. 12 பேர் பலி.. மும்பையில் அதிர்ச்சி!

Mumbai Building Collapse : மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயம் அடைந்துள்ளனர். மேலும், இடிபாடுகளில் இன்னும் பல சிக்கியிருக்கலாம் என அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால், மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து.. 12 பேர் பலி.. மும்பையில் அதிர்ச்சி!

அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து

Updated On: 

28 Aug 2025 06:06 AM

மும்பை, ஆகஸ்ட் 28 : மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. கனமழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் இருந்தது. கடந்த வாரம் முழுவதும் கொட்டித் தீர்த்த கனமழையால் மும்பையே தத்தளித்தது. தற்போதும், மகாராஷ்டிராவில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால், அவ்வப்போது கட்டிடங்கள் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனிடையே, மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள விரார் என்ற இடத்தில் நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கட்டிடம் அனுமதியின்றி கட்டப்பட்டதாக தெரிகிறது.

தொடர்ந்து மழை பெய்து வந்ததால், 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் பலரும் இடிபாடுகளில் சிக்கினர். இந்த விபத்து குறித்து அறிந்ததும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து, இடிபாடுகளில் சிக்க உள்ளவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 12 பேர் உயிரிழந்தனர். மேலும், சிலருக்கு மருத்துவமனைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஆறு பேர் அப்பகுதியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளிலும், மும்பையின் புறநகரில் உள்ள நாலசோபராவிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Also Read : ஜம்மு காஷ்மீரில் பலத்த மழை.. நிலச்சரிவில் சிக்கி 31 பேர் உயிரிழப்பு.. பலர் மாயம்!

அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து

மேலும் மூன்று பேர் சிகிச்சைக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். விபத்து நடந்து 20 மணி நேரத்திற்கும் மேலாகியும், விபத்து நடந்த இடத்தில் இடிபாடுகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சட்டவிரோதமாக கட்டிடத்தை கட்டியவரை கைது செய்தனர்.

Also Read : ஜம்மு காஷ்மீரில் கனமழை … நிலச்சரிவு காரணமாக 10 பேர் உயிரிழப்பு

உயிரிழந்த 12 பேரின் 7 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆரோஹி ஓம்கார் ஜோவில் (24), அவரது ஒரு வயது மகள் உத்கர்ஷா ஜோவில், லக்ஷ்மன் கிஸ்கு சிங் (26), தினேஷ் பிரகாஷ் சப்கல் (43), சுப்ரியா நிவால்கர் (38), அர்னவ் நிவால்கர் (11), மற்றும் பார்வதி சப்கல் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இடிபாடுகளுக்குள் இன்னும் சிலர் புதைந்திருக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் இந்து ராணி ஜாக்கர் தெரிவித்துள்ளார். இன்னும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.