Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

75 வயதில் ஓய்வுபெற வேண்டுமா? – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் விளக்கம்

RSS Chief Mohan Bhagwat: பாஜக தலைவர்கள் 75 வயதுக்கு பிறகு ஓய்வு பெற வேண்டும் என்ற விதி இருப்பதாக கடந்த சில மாதங்களாக தகவல் பரவி வருகிறது. இது குறித்து ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கமளித்தார்.

75 வயதில் ஓய்வுபெற வேண்டுமா? – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் விளக்கம்
மோகன் பகவத்
Karthikeyan S
Karthikeyan S | Published: 28 Aug 2025 21:23 PM

புதுடெல்லி, ஆகஸ்ட் 28 : ஆர்எஸ்எஸ் (RSS) அமைப்பின் 100வது ஆண்டு விழா குறித்து அதன் தலைவர் மோகன் பகவத் ஆகஸ்ட் 28, 2025 அன்று  புதுடெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 75 வயது முடிந்ததும் ஒருவர் ஓய்வு பெற வேண்டும் என நான் ஒரு போதும் சொல்லவில்லை என்று விளக்கமளித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும் என எழுதப்படாத விதி உள்ளதாக கடந்த சில மாதங்களாக தகவல் பரவி வருகிறது. குறிப்பாக வருகிற செப்டம்பர், 2025ல் பிரதமர் நரேந்திர மோடி  (Narendra Modi) 75 வயதை எட்டும் நிலையில் இந்த பேச்சு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் மோகன் பகவத்தின் விளக்கம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

ஓய்வு பெறும் வயது குறித்து பேசிய மோகன் பகவத்

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மோகன் பகவத், நான் ஓய்வு பெறுவேன் என்றோ, அல்லது ஒருவர் 75 வயது முடிந்ததும் ஓய்வு பெற வேண்டும் என்றும் ஒரு போதும் சொல்லவில்லை. சங்கம் சொல்வதை நாங்கள் செய்கிறோம். எனக்கு 80 வயது இருக்கும்போது சங்கம் என்னிடம் வேலை கொடுத்தால் அதை செய்வேன் என விளக்கம் அளித்தார்.

இதையும் படிக்க : ஒரே சார்ஜில் 500 கி.மீ.. பிரதமர் மோடி தொடங்கி வைத்த சூப்பர் கார்.. 100 நாடுகளுக்கு ஏற்றுமதி!

பாஜக விளக்கம்

இந்த நிலையில் மோகன் பகவத் பேசியிருக்கும் நிலையில் பாரதிய ஜனதா கட்சியும் இது தொடர்பாக விளக்கமளித்துள்ளது. பாஜக அளித்துள்ள விளக்கத்தில் பிரதமர் மோடி 75 வயது ஆன பிறகு ஓய்வு பெறுவார் என்ற எந்த விதியும் எங்களிடம் இல்லை. மத்திய அரசில் கூட 80 வயதான ஜிதன் ராம் மாஞ்ஜி போன்ற மூத்த தலைவர்கள் அமைச்சரவையில் உள்ளனர். எனவே வயது வரம்பு வெறும் எதிர்கட்சிகளின் கற்பனை மட்டுமே என குறிப்பிட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன் உள்துறை அமைச்சர் அமித் ஷா, 75 வயதுக்கு பிறகு ஓய்வு பெற வேண்டும் என்ற கட்டாய விதி பாஜகவில் இல்லை. அது தேர்தல் சூழ்நிலையில் எடுக்கப்பட்ட முடிவு மட்டுமே என்றார்.

இதையும் படிக்க : எவ்வளவு அழுத்தம் வந்தாலும் நம் பலம் அதிகரிக்கும்.. டிரம்ப் வரி விதிப்பு குறித்து பேசிய பிரதமர் மோடி!

எதிர்க்கட்சிகளின் விமர்சனம்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பாஜக மீது எதிர்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. கடந்த சில மாதங்களாக எல்.கே.அத்வானி மற்றும் முரளி மனோஹர் ஜோஷி ஆகிய பாஜக தலைவர்கள் வயதைக் காரணம் காட்டி பாஜகவில் இருந்து விலக்கப்பட்டனர். பாஜக தங்கள் சூழ்நிலைகளுக்கு ஏற்ப விதிகளை மாற்றுகிறது என குற்றம்சாட்டினர்.  ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், மோடி அடுத்த ஆண்டு ஓய்வு பெறுவார். அவர் தற்போது மக்கள் வாக்குகளை கேட்பது, அமித் ஷாவை பிரதமராக்கத் தான் என்று கூறியிருந்தார். அதே போல சிவ சேனா தலைவர் சஞ்சய் ராவத் மோடி நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுலகத்துக்கு சென்றதை வைத்து அவர் தனது ஓய்வு கடிதம் கொடுக்க சென்றுள்ளார் என குறிப்பிட்டார்.