தவறான விளம்பரம்… ரேபிடோ நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம்- என்ன காரணம் தெரியுமா?
Rapido Penalty: ரேபிடோ நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் மிகைப்படுத்த விளம்பரங்களால் தவறாக வழி நடத்தியதாக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்திருக்கிறது. மேலும் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ரூ.50 திருப்பித் தரவும் அறிவுறுத்தியிருக்கிறது. இதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
ரேபிடோ (Rapido)நிறுவனம் மீது தவறாக விளம்பரப்படுத்தியதாக கூறி மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது. மேலும், இந்த விளம்பரங்களால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு அந்த பணத்தை திருப்பி கொடுக்குமாறும் உத்தரவிட்டுள்ளது. ராபிடோ நிறுவனம் தங்கள் விளம்பரங்களில் உறுதியாக ஆட்டோ கிடைக்கும், 5 நிமிடங்களில் ஆட்டோ (Auto) கிடைக்கும் இல்லையென்றால் இழப்பீடாக ரூ.50 வழங்கப்படும் என உத்தரவாதம் அளித்திருந்தது. இதனால் அதிகமானோர் இந்த நிறுவன செயலியை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் பெரும்பாலானோருக்கு நிறுவனத்தின் வாக்குறுதிப்படி ஆட்டோ கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பான புகாரில் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நடவடிக்கை எடுத்திருக்கிறது.
ரேபிடோவின் தவறான விளம்பரம்
வாடிக்கையாளர்களை கவர்வதற்காக ரேபிடோ நிறுவனம் விளம்பரங்களில் உடனடி ஆட்டோ சேவைகள் கிடைக்கும் என வாக்குறுதி அளித்திருந்தது. குறிப்பாக 5 நிமிடங்களில் ஆடடோ கிடைக்கும் என தன் விளம்பரங்களில் தெரிவித்திருந்தது. சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் டிமாண்ட் காரணமாக உடனடியாக ஆட்டோ கிடைப்பதில் சிக்கல் இருந்தது. இதனால் ரேபிடோவின் விளம்பரங்களை நம்பி அந்த நிறுவன செயலியை பயன்படுத்தினர். ஆனால் ஆட்டோ கிடைக்காத நபர்களுக்கு விளம்பரத்தில் தெரிவித்ததன் படி ரூ.50 வழங்கப்படாமல், அதற்கு பதிலாக 7 நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும் ரேபிடோ காயின்ஸ் என்ற வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதனையும் பைக் டாக்சி பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. இதனால் வாடிக்கையாளர்கள் மீண்டும் மீண்டும் அந்த நிறுவனத்தை நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதையும் படிக்க : நீட் முதுநிலை தேர்வு முடிவுகள் வெளியானது.. ரிசல்ட் பார்ப்பது எப்படி? கட் ஆஃப் விவரம் இதோ
நீண்டகால விளம்பர ஒளிபரப்பு
ரேபிடோ நிறுவனங்களின் விளம்பரங்கள் சுமார் 1.5 ஆண்டுகளுக்கு மேலாக 120க்கும் மேற்பட்ட நகரங்களில் பல மொழிகளில் ஒளிபரப்பப்பட்டிருக்கின்றன. இதனால் மக்களிடையே அந்த விளம்பரங்களின் தாக்கம் அதிகம் இருந்ததாக குறிப்பிட்டுள்ளது. கடந்த ஜுன் ஜூன் 2024 முதல், ஜூலை, 2025 வரை 1200க்கும் மேற்பட்ட நுகர்வோர் புகார் தெரிவித்திருக்கின்றனர். இதில் பெரும்பாலான புகார்கள் தீர்க்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
உதாரணமாக வாடிக்கையாளர்கள் அதிக கட்டணம் வசூல், பணத்தை திருப்பித் தர தாமதம், டிரைவர்களின் தவறான நடத்தை, கேஷ்பேக் வாக்குறுதி கிடைக்காதது ஆகிய காரணங்களுக்காக ரேபிடோ வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு புகார் தெரிவித்திருக்கின்றனர்.
இதையும் படிக்க : தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்காவின் டோஸ்ட்டில் பிரபலத்தின் முகம்.. சமூக வலைதள பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவு!
இதனையடுத்து மத்திய அரசு ராபிடோ நிறுவனம் மோசடி செய்யும் வகையில் திட்டமிட்டு வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்தியிருப்பதாகவும், சேவைகளை மிகைப்படுத்தி விளம்பரம் செய்ததாகவும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து அந்த நிறுவனம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்திருக்கிறது. மேலும் புகார் தெரிவித்த வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் ரூ.50 திருப்பி தரவேண்டும் எனவும் இவை அனைத்தையும் 15 நாட்களுக்குள் செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.