Rahul Gandhi: ஹரியானா தேர்தலில் பிரேசில் மாடல் பெயர் எப்படி..? தேர்தல் ஆணையத்திற்கு ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
Rahul Gandhi exposed Vote Scam: காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, பீகார் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் (Haryana Assembly Elections) மோசடி நடந்தது குறித்தும், வாக்காளர் பட்டியலில் பிரேசிலிய மாடலின் புகைப்படம் இடம்பெற்றது குறித்தும் குற்றம் சாட்டினார்.

ராகுல் காந்தி
ஹரியானா, நவம்பர் 5: காங்கிரஸ் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி (Rahul Gandhi) வாக்கு திருட்டு விவகாரத்தை கையில் எடுத்தது மட்டுமின்றி இந்திய தேர்தல் ஆணையத்தையும் தாக்கி பேசினார், இன்று அதாவது 2025 நவம்பர் 5ம் தேதி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, பீகார் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் (Haryana Assembly Elections) மோசடி நடந்தது குறித்தும், வாக்காளர் பட்டியலில் பிரேசிலிய மாடலின் புகைப்படம் இடம்பெற்றது குறித்தும் குற்றம் சாட்டினார். மேலும், இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் வாக்காளர் மோசடி செய்ததற்கான முக்கிய ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
வாக்கு திருட்டு:
வாக்கு திருட்டு விவகாரம் குறித்து பேசிய ராகுல் காந்தி, ”நான் உட்பட மில்லியன் கணக்கான மக்களுக்கு உத்வேகமாக இருக்கும் குருநானக் தேவ் ஜியை முதலில் இந்த இடத்தில் நினைவுகூர விரும்புகிறேன். ஹரியானா தேர்தல்கள் தொடர்பாக எங்களுக்கு ஏராளமான புகார்கள் வந்தது. இது தொடர்பாக நாங்கள் விரிவாக ஆராய்ந்து குறிப்பிடத்தக்க முறைகேடுகளை கண்டறிந்தோம். நாட்டின் இளைஞர்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன் , இது உங்கள் எதிர்காலத்தைப் பற்றிய கேள்வி. ஹரியானாவில் எக்ஸிட் போல்கள் எங்கள் வெற்றியைக் காட்டின. நாங்கள் அரசாங்கத்தை அமைக்கப் போகிறோம், எங்களிடம் அனைத்து ஏற்பாடுகளும் உள்ளன என்று ஹரியானா முதல்வர் நயாப் சைனி கூறும் இந்த வீடியோவைப் பாருங்கள்” என்றார்.
ALSO READ: பீகாரில் பிரமாண்ட ‘ரோடு ஷோ’ சென்ற பிரதமர் மோடி: பரபரக்கும் தேர்தல் களம்!
வாக்காளர் பட்டியலில் பிரேசிலிய மாடலின் பெயர்:
𝐖𝐡𝐚𝐭 𝐢𝐬 𝐚 𝐁𝐫𝐚𝐳𝐢𝐥𝐢𝐚𝐧 𝐰𝐨𝐦𝐚𝐧 𝐝𝐨𝐢𝐧𝐠 𝐨𝐧 𝐇𝐚𝐫𝐲𝐚𝐧𝐚’𝐬 𝐞𝐥𝐞𝐜𝐭𝐨𝐫𝐚𝐥 𝐥𝐢𝐬𝐭?
❓ Who is this lady?
❓ How old is she?
❓ Where is she from?She voted 22 times in Haryana, across 10 different booths in the state, using multiple names: Seema,… pic.twitter.com/3VHdBDLc14
— Congress (@INCIndia) November 5, 2025
தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பிரேசிலிய மாடல் பெயர் இடம்பெற்றதாக குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, ”நாங்கள் நிறைய விசாரணை நடத்தினோம் . நாட்டின் இளைஞர்களின் இந்த வாக்குத் திருட்டைப் பற்றி ஆராய வேண்டும். ஒரு பிரேசிலிய மாடல் ஹரியானாவில் வாக்களித்தார். இது மட்டுமின்றி இந்த பிரேசிலிய மாடல் ஹரியானாவில் உள்ள 10 வாக்குச் சாவடிகளில் 22 முறை வாக்களித்தார். அவரது பெயர் சீமா, சரஸ்வதி, ஸ்வீட்டி, விமலா போன்றவர்கள் பெயர்களால் மாற்றப்பட்டு வாக்களிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டது. 2.5 மில்லியன் வாக்குகள் திருடப்பட்டுள்ளன. போலி வாக்காளர்களின் எண்ணிக்கை 5,21,619 ஆக கண்டறியப்பட்டுள்ளது. மேலும், தவறான முகவரிகளுடன் 93,174 வாக்காளர்கள் உள்ளனர். ஒரே சாவடியில் ஒரே பெயரில் 223 முறை எவ்வாறு வாக்களித்தார்கள் என்பதை தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும். தேர்தல் ஆணையத்திற்கு எதிராக நாங்கள் உறுதியான ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளோம்” என்றார்.
ALSO READ: பீகார் சட்டமன்ற தேர்தல்: அனல் பறந்த தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது.. நாளை முதற்கட்ட வாக்குபதிவு..
ஒரு பெண் 223 முறை வாக்களிப்பு:
செய்தியாளர் சந்திப்பின் போது வாக்காளர் பட்டியலில் ஒரு பெண்ணின் புகைப்படத்தைக் காட்டிய ராகுல் காந்தி, ”இது ஹரியானாவின் வாக்காளர் பட்டியல். இது 2 வாக்குச் சாவடிகளின் உள்ள பட்டியலில் உள்ள பெயர்கள் ஆகும். இங்கு ஒரு பெண் 2 வாக்குச் சாவடிகளில் 223 முறை வாக்களிக்கிறார். இந்தப் பெண் எத்தனை முறை வாக்களித்தார் என்பதை தேர்தல் ஆணையம் எங்களுக்குத் தெரிவிக்க வேண்டும்” என்றார்.