என்னை ப்ரோன்னு கூப்பிடுங்க… Gen Z இளைஞர்களுடன் ராகுல் காந்தி கலகலப்பு உரையாடல்
Rahul Gandhi : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி Gen Z இளைஞர்களுடன் பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாடினார். குறிப்பாக அவர்கள் தங்கள் பயன்படுத்தும் வார்த்தைகளின் அர்த்தங்கள் குறித்து ராகுல் காந்திக்கு கற்றுக்கொடுத்தனர். அப்போது தன்னை ப்ரோ என கூப்பிடுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

ராகுல் காந்தி
புதுடில்லி நவம்பர் 11: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி (Rahul Gandhi), இளம் தலைமுறை குறிப்பாக Gen Z எனப்படும் 1997 முதல் 2012 வரை பிறந்த இளைஞர்களுடன் கலகலப்பாக உரையாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ராகுல் காந்தி யூடியூப் (Youtube) சேனலில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவில் கலகலப்பாக மாணவர்களுடன் உரையாடுகிறார். அவர்கள் தங்கள் தலைமுறையில் பயன்படுத்தும் வார்த்தைகளுக்கு ராகுலிடம் அர்த்தம் கேட்க, அதற்கு அவரது ரியாக்ஷன்கள் நெட்டிசன்களைக் கவர்ந்துள்ளன. குறிப்பாக மாணவி ஒருவர் அவரை சார் என அழைக்க, சார் வேண்டாம் ப்ரோ என சொல்லுங்க என பேசி ஆச்சரியப்படுத்தினார். இந்த வீடியோவில் அவர் பேசிய குறித்து விரிவாக பார்க்கலாம்.
‘எனக்கு அரசியலில் Rizz தேவையா?’
மாணவி ஒருவர் அவரை சார் என அழைத்து கேள்வி கேட்க, அதற்கு ராகுல் காந்தி அவரை ப்ரோ என கூப்பிடுங்க என்கிறார். அதற்கு மற்றொரு மாணவி அவரை டியூட் என அழைக்க, வெடித்து சிரிக்கிறார். இந்த வீடியோவில், ராகுல் காந்திக்கு பல Gen Z வார்த்தைகளை மாணவர்கள் கற்றுக்கொடுக்கிறார்கள். ஒரு மாணவர் அவரிடம் cap? எனக் கேட்க, அதற்கு ராகுல் சிரித்தபடி, Cap என்பது பொய் சொல்வது தானே?” என்று எதிர்வினை அளித்தார். மாணவர்களும் அவர் சொன்னது சரிதான் என சொல்ல, ராகுலும் சிரித்தபடி ப்ரோ, நான் வேகமாக கத்துக்கிட்டே இருக்கேன் என்கிறார்.
இதையும் படிக்க : கோவா அயர்ன்மேன் போட்டி: வெற்றிகரமாக முடித்த அண்ணாமலை.. பாராட்டிய பிரதமர் மோடி!
மாணவர்களுடன் ராகுல் காந்தி பேசிய வீடியோ
மற்றொரு மாணவர், Rizz என்பது இயற்கையாகவே பிறரை ஈர்க்கும் சக்தி என சொல்ல, அதற்கு ராகுல் காந்தி, அருமை, அரசியலில் எனக்கு Rizz தேவையா என்கிறார். அப்போது மற்றொரு மாணவர் Pookie என்றால் மிகவும் அழகானவர் என சொல்ல, அப்போ நானும் Pookie என சிரித்தபடியே பதிலளிக்கிறார்.
‘ப்ரோ என கூப்பிடுங்க’
அந்த வீடியோவில் இளைஞர்கள் ராகுலிடம், சார், உங்களை எப்படி கூப்பிடலாம்? எனக் கேட்க, அதற்கு ராகுல் புன்னகையுடன், “எதாவது வேடிக்கையான பெயர் வைங்க, ப்ரோன்னு கூப்பிடலாமே என்றார். இதனையடுத்து இளைஞற்கள் உற்சாகமாக ப்ரோ என கூப்பிட்டு மகிழ்ந்தனர். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிக்க : பழைய பொருட்களை விற்று ரூ.800 கோடி சம்பாதித்த மத்திய அரசு – சந்திராயன் -3 செலவை விட அதிகம்
வேடிக்கையாக மட்டுமல்லாமல் அரசியல் ரீதியாகவும் இளைஞர்களுடன் ராகுல் காந்தி உரையாடினார். குறிப்பாக வாக்கு மோசடி குற்றச்சாட்டுகள், நேபாள இளைஞர்கள் போராட்டம், கல்வி, மருத்துவம் வேலைவாய்ப்பு போன்ற முக்கிய பிரச்னைகள் குறித்தும் பேசினார். அப்போது பேசிய அவர், அரசியல் என்பது வாக்கு வங்கிக்காக அல்ல, மக்கள் நலனுக்காக இருக்க வேண்டும். இளைஞர்கள் நேர்மை மற்றும் நம்பிக்கையுடன் அரசியலில் ஈடுபட வேண்டும் என்றார்.