PM Modi: பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை.. தன்னிறைவு இந்தியா திட்டம்.. பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை!
PM Modi Independence Day Speech : சுதந்திர தினத்தையொட்டி, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றினார். தொடர்ந்து 12வது முறையாக பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றினார். தொடர்ந்து, உரையாற்றிய பிரதமர் மோடி, எந்தவொரு மிரட்டலையும் நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம், தகுந்த பதில் அளிக்கப்படும் என பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

பிரதமர் மோடி
டெல்லி, ஆகஸ்ட் 15 : அணு ஆயுத அச்சுறுத்தல்களால் இந்தியா இனி அச்சுறுத்தப்படாது என்று பிரதமர் மோடி செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 2025 ஆகஸ்ட் 15ஆம் தேதி (இன்று) நாடு முழுவதும் கோலாகலமாக சுதந்திர தினம் (Independence Day) கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தையொட்டி, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றினார். தொடர்ந்து 12வது முறையாக பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றினார். முப்படைகளின் அணிவகுப்பை ஏற்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு முன்பு பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றினார். முன்னதாக, முப்படைகளில் சாகச நிகழ்ச்சியும் நடைபெற்றது. மேலும், ராணுவம், விமானம் மற்றும் கப்பல் படை ஆகிய முப்படைகளில் அணிவகுப்பு நடந்தது. இந்த அணிவகுப்பை பார்வையிட்ட பிரதமர் மோடி, தொடர்ந்து, தேசியக் கொடியை ஏற்றினார். இதனை அடுத்து, தேசிய கீதம் இசைக்கப்பட்டது. மேலும், 21 குண்டுகள் முழங்க மரியாதையும் செலுத்தப்பட்டது. மேலும், எம்ஐ-17 ஹெலிகாப்டர் மலர் தூவப்பட்டது.
தொடர்ந்து, அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “நாடு ஒற்றுமை உணர்வை வலுப்படுத்தி வருகிறது. இது கூட்டு சாதனை மற்றும் பெருமைக்கான தருணம். இன்று நாம் மூவர்ணக் கொடியின் வண்ணங்களில் நனைந்துள்ளோம். நாடு முழுவதும் ஒரே குரல் ஒலிக்கிறது. நாம் அனைவரும் இந்தியாவை நம் உயிருக்கும் மேலாக நேசிக்கிறோம்.75 ஆண்டுகளாக, இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒரு கலங்கரை விளக்கம் போல நமக்குப் பாதையைக் காட்டி வருகிறது.
Also Read : செங்கோட்டையில் கொடியேற்றிய பிரதமர் மோடி
செங்கோட்டையில் கொடி ஏற்றிய பிரதமர் மோடி
#WATCH | Delhi: Prime Minister Narendra Modi hoists the national flag at the Red Fort. #IndependenceDay
(Video Source: DD) pic.twitter.com/UnthwfL72O
— ANI (@ANI) August 15, 2025
”அணு ஆயுத மிரட்டலை இந்தியா சகித்துக் கொள்ளாது”
VIDEO | Independence Day 2025: PM Modi (@narendramodi) says, “Nuclear blackmail has been continuing for a long time, but it will no longer be tolerated. If our enemies persist in such attempts, our armed forces will respond, on their own terms, at a time of their choosing, and by… pic.twitter.com/57xpzYy0Aj
— Press Trust of India (@PTI_News) August 15, 2025
1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, மகத்தான சாத்தியக்கூறுகள் இருந்தன, சவால்களும் பெரியவை. 79-வது சுதந்திர தினத்தன்று அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களுக்கு இந்தியா தலைவணங்குகிறது. நமது சுதந்திரப் போராட்டத்திற்கும், நமது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்கும் நமது பெண் சக்தியின் பங்களிப்பு முக்கியமாக உள்ளது” என கூறினார். தொடர்ந்து, ஆபரேஷன் சிந்தூர் குறித்து பிரதமர் மோடி பேசுகையில், “பயங்கரவாதத்தின் எஜமானர்களை தங்கள் கற்பனைக்கும் எட்டாத வகையில் தண்டித்த நமது துணிச்சலான வீரர்களுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன்.
ஏப்ரல் 22 ஆம் தேதி, எல்லைக்கு அப்பால் இருந்து பயங்கரவாதிகள் தங்கள் மதத்தைக் கேட்ட பிறகு அப்பாவி பொதுமக்களைக் குறிவைத்து கொன்றனர். முழு தேசமும் கோபமடைந்தது. பாகிஸ்தானில் நமது ஆயுதப் படைகளால் ஏற்பட்ட அழிவு மிகவும் பரவலாக இருந்தது. அணு ஆயுத அச்சுறுத்தல்களை இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று இந்தியா முடிவு செய்துள்ளது, எந்த மிரட்டலுக்கும் நாங்கள் ஆளாக மாட்டோம்” என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “அணு ஆயுத மிரட்டல் நீண்ட காலமாகத் தொடர்கிறது. ஆனால் இனி நாங்கள் பொறுத்துக்கொள்ளப்படாது. நமது எதிரிகள் இதுபோன்ற முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டால், நமது ஆயுதப் படைகள் மூலம் பதிலடி கொடுக்கப்படும். சரியான நேரத்தில் பதிலடி கொடுக்க நாங்கள் தயாராக உள்ளோம். இந்தியா இப்போது முடிவு செய்துள்ளது. இரத்தமும் தண்ணீரும் ஒன்றாகப் பாயக்கூடாது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் அநீதியானது என்பதை மக்கள் உணர்ந்துவிட்டனர். சிந்து நதி அமைப்பிலிருந்து வரும் நீர் எதிரிகளின் நிலங்களுக்கு பாசனம் செய்து வருகிறது” என கூறினார்.
ஆத்மநிர்பர் பாரத் (தன்னிறைவு இந்தியா) உரை
- பிரதமர் மோடி, ஆபரேஷன் சிந்தூரை இந்தியாவின் பாதுகாப்பு துறையில் தன்னிறைவு பெற்றதன் சான்றாக குறிப்பிட்டுள்ளார். “மேட் இன் இந்தியா” திட்டத்தின் கீழ் உள்நாட்டில் தயாரிக்கக்கூடிய பாதுகாப்பு உபகரணங்கள், இந்தியாவை தானாகவே தீர்மானிக்கக்கூடியதாக மாற்றுகின்றன என்றும், தேசிய பாதுகாப்பு விஷயத்தில் பிறநாடுகளை சார்ந்து இருக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
- கண்டுபிடிப்பாளர்களும் ஈடுபட வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். ஆற்றல், தொழில்துறை மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் முக்கியமான கனிமங்களுக்காக 1,200 இடங்களை இந்தியா ஆய்வு செய்து வருகிறது என குறிப்பிட்ட பிரதமர் மோடி, இது தொழில்துறை மற்றும் பாதுகாப்புத் துறைகளில் இந்தியா தன்னிறைவு பெறுவதை உறுதி செய்யும் எனவும் தெரிவித்தார்.
- 10 புதிய அணு உலைகள் தற்போது செயல்பாட்டில் உள்ளன. இந்தியாவின் 100வது சுதந்திர ஆண்டுக்குள், நம் நாடு அதன் அணுசக்தி திறனை பத்து மடங்கு அதிகரிக்கவும், எரிசக்தி தன்னிறைவை வலுப்படுத்தவும், நிலையான வளர்ச்சியை ஆதரிக்கவும் இலக்கு வைத்துள்ளது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
- விவசாயிகள் நலனை காப்பதற்கும், தேசிய உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் உள்நாட்டில் உரங்களை உற்பத்தி செய்வதற்கான தேவையை பிரதமர் மோடி வலியுறுத்தினார். இறக்குமதி சார்பு நிலையைக் குறைப்பது நாட்டின் விவசாயத் துறை சுயமாக செழித்து வளர்வதை உறுதி செய்யும். இதனால் இந்தியாவின் பொருளாதார இறையாண்மை வலுப்படுத்துகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
- இந்திய இளைஞர்கள் தங்களுடைய சொந்த சமூக ஊடக தளங்களை மற்றும் டிஜிட்டல் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். தகவல் தொடர்பு, தரவு மற்றும் தொழில்நுட்ப சுற்றுச்சூழல் அமைப்புகள் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் இருப்பதை உறுதிசெய்யும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
- உள்நாட்டு மருந்து கண்டுபிடிப்புகளில் இந்தியாவின் வளர்ச்சியைப் பற்றி பேசிய பிரதமர் மோடி, புதிய மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் உயிர்காக்கும் சிகிச்சைகளை இந்தியாவிற்குள் முழுமையாக உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.