கர்ப்பமாக்கிய காதலன்.. திருமணம் செய்ய மறுத்ததால் இளம் பெண் தற்கொலை!

Pregnant Young Woman Killed Herself | பெங்களூருவை சேர்ந்த இளம் பெண் ஒருவர், இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அந்த பெண் கர்ப்பமான நிலையில், அவரது காதலன் திருமணம் செய்ய மருத்துள்ளார். இதன் காரணமாக மனமுடைந்த அந்த பெண் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

கர்ப்பமாக்கிய காதலன்.. திருமணம் செய்ய மறுத்ததால் இளம் பெண் தற்கொலை!

உயிரிழந்த இளம் பெண்

Updated On: 

10 Nov 2025 22:29 PM

 IST

பெங்களூரு, நவம்பர் 10 : கர்நாடகா (Karnataka) மாநிலம் பெங்களூரில் (Bengaluru) உள்ளாசமாக இருந்துவிட்டு திருமணம் செய்ய காதலன் மறுத்த நிலையில், கர்ப்பமான இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை வலைவீடி தேடி வருகின்றனர். இந்த நிலையில், கர்ப்பமாக இருந்த இளம் பெண் காதலன் ஏமாற்றியதால் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

திருமணம் செய்யாமல் ஏமாற்றிய காதலன்

கர்நாடகா மாநிலம் ஹாவேரி மாவட்டத்தை சேர்ந்தவர் சிந்து பரவன்னவர் என்ற 25 வயது இளம் பெண். இவர் நான்கு ஆண்டுகளாக சரத் நீலப்பா என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில்,  திருமணம் செய்துக்கொள்வதாக கூறி சிந்துவுடன், நீலப்பா உள்ளாசமாக இருந்துள்ளார். இதன் காரணமாக சிந்து கர்ப்பமான நிலையில், நீலப்பா அவரை திருமணம் செய்துக்கொள்ள மருத்துள்ளார்.

இதையும் படிங்க : இரண்டு மகள்களுடன் கால்வாயில் குதித்து தற்கொலை செய்துக்கொண்ட தொழிலதிபர்.. அதிர்ச்சி சம்பவம்!

இதனால் என்ன செய்வது என தெரியாமல் தவித்த சிந்து அது குறித்து தனது தோழியும், நீலப்பாவின் தங்கையுமான காவியாவிடம் கூறியுள்ளார். ஆனால், காவியா சிந்துவுக்கு உதவி செய்யாமல் அவரும் மிரட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த சிந்து நவம்பர் 07, 2205 அன்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளும் காவல்துறை

இந்த நிலையில், சிந்துவின் மரணத்திற்கு சரத் தான் காரணம் என கூறி அவரது உறவினர்கள் சிந்துவின் உடலை அவரது வீட்டின் முன்பு வைத்து போராட்டம் நடத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து சிந்துவின் அண்ணன் அளித்த புகாரின் அடிப்படையில் அவரது காதலன் சரத், தந்தை சுரேஷ், தாய் புட்டவா மற்றும் சகோதரி காவியா உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : பீகாரின் மஹ்னார் தொகுதி.. 30 நிமிடங்கள் நிறுத்தப்பட்ட ஸ்ட்ராங் ரூம் காட்சிகள்.. நடந்தது என்ன? விளக்கும் மாவட்ட நீதிபதி..

இந்த விவகாரத்தை தொடர்ந்து சிந்துவின் குடும்பத்தார் உட்பட அந்த 11 பேர் தலைமறைவான நிலையில், அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.