நாளை தொடங்குகிறது மக்கள் தொகை கணக்கெடுப்பு.. இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது!
Population Census First Phase Begins From April 1, 2026 | 2011 ஆம ஆண்டுக்கு பிறகு தற்போது மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடங்க உள்ளது.

மாதிரி புகைப்படம்
புதுடெல்லி, மார்ச் 31 : இந்தியாவில் (India) 2021 ஆம் ஆண்டு கொரோனாவால் தள்ளிப்போன மக்கள் தொகை கணக்கெடுப்பு (Population Census), 2026 ஆம் ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, 2026 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு நாளை (ஏப்ரல் 01, 2026) முதல் தொடங்க உள்ளது. இந்த நிலையில், இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் முக்கியத்துவம் என்ன, இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய மாற்றாங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு
இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். இந்தியா சுதந்திரம் பெற்றதற்கு பிறகு இதுவரை 7 முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. கடைசியாக 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து சரியாக 10 ஆண்டுகள் கழித்து 2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், கோரோனா காரணமாக அப்போது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த முடியாமல் போனது.
இதையும் படிங்க : மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றம்.. எரிபொருள் விநியோகம் முதல் இந்தியர்களின் பாதுகாப்பு வரை முழுமையான நடவடிக்கைகள்
இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு
இந்தியாவில் 8வது முறையாக நடத்தப்படும் இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளன. அதாவது 2026-ல் ஒரு பகுதியும், 2027-ல் இரண்டாவது பகுதி மக்கள் தொகை கணக்கெடுப்பும் நடத்தப்பட உள்ளது. இந்த இரண்டு கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் முதற்கட்டம் நாளை (ஏப்ரல் 01, 2026) தொடங்க உள்ளது. இந்த முதற்கட்ட கணக்கெடுப்பு ஏப்ரல் 01, 2026 முதல் ஏப்ரல் 30, 2026 வரை நடைபெற உள்ளது.
இதையும் படிங்க : ‘இந்தியாவில் போதுமான எரிபொருள் உள்ளது, கவலைப்படத் தேவையில்லை’ – மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு!
மக்களே தங்கள் பெயர்களை இணைத்துக்கொள்ளலாம்
இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் மக்களே தங்களது பெயர்களை இணைத்துக்கொள்ளலாம். இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் மக்களே தங்களது சுய விவரங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு சுய விவரங்களை பதிவேற்றம் செய்யும் நபர்களுக்கு 16 இலக்க எண் ஒன்று வழங்கப்படும். மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது இந்த எண்ணை கணக்கெடுப்பாளர்களிடம் வழங்கினால் போதும். ஆதார், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட வேறு எந்த ஆவணங்களையும் வழங்க வேண்டிய அவசியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.