Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அயோத்தி ராமர் கோவிலில் காவிக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

Ayodhya Ram Mandir: அயோத்தி சென்றுள்ள பிரதமர் மோடி, ராமர் கோவில் செல்லும் பாதையில் ரோடு ஷோ நடத்தினார். அப்போது, அவருக்கு சாலையின் இருபுறமும் திரண்ட ஏராளமான பக்தர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னதாக, விமான நிலையத்தில் பிரதமர் மோடியை உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் சென்று வரவேற்றார்.

அயோத்தி ராமர் கோவிலில் காவிக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!
அயோத்தி ராமர் கோவிலில் காவிக்கொடி ஏற்றிய பிரதமர் மோடி!
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 25 Nov 2025 12:18 PM IST

அயோத்தி ராமர் கோயிலின் 161 அடி உயர கோபுரத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள 30 அடி உயர கம்பத்தில் பிரதமர் மோடி இன்று காலை காவிக்கொடி கொடியேற்றினார். ராமர் கோவில் கட்டுமான பணிகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில் இந்த காவிக்கொடியை ஏற்றி அவர் உரையாற்றி வருகிறார். முன்னதாக, அயோத்தி சென்ற பிரதமர் மோடி, ராமர் கோவில் செல்லும் பாதையில் ரோடு ஷோ நடத்தினார். தொடர்ந்து, ராமர் கோவிலில் மோடி சிறப்பு வழிபாடு நடத்தினார். ராமர் பிறந்த சூரிய குலத்தை குறிக்கும் வகையில் சூரிய சின்னம், மையத்தில் ஓம் மற்றும் மந்தாரை மரம் பொறிக்கப்பட்ட காவிக்கொடி உருவாக்கப்பட்டுள்ளது.

முதலில், சப்தமந்திருக்குச் சென்ற பிரதமர் மோடி, அங்கு மகரிஷி வசிஷ்டர், மகரிஷி விஸ்வாமித்ரா, மகரிஷி அகஸ்தியர், மகரிஷி வால்மீகி, தேவி அஹல்யா, நிஷாத்ராஜ் குஹா மற்றும் மாதா ஷபரி ஆகியோரின் கோயில்களிலும் தரிசனம் செய்தார். தொடர்ந்து, மாதா அன்னபூர்ணா கோயிலுக்கும் சென்ற அவர், பிறகு ராம் தர்பார் கருவறையில் தரிசனம் மற்றும் பூஜை செய்தார்.

இதையும் படிங்க : BAPS மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் 30 ஆண்டுகால கொண்டாட்டம் – தலைவர்களின் ஊக்கமளிக்கும் கருத்துக்கள்

பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு:

இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் அயோத்திக்கு பிரதமர் மோடி வருகை தந்தார். அங்கு உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் வரவேற்பு அளித்தார்.தொடர்ந்து, காரில் ரோடுஷோ சென்ற அவரை சாலையின் இருபுறமும் குவிந்திருந்த பக்தர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

காவிக்கொடி ஏற்றிய பிரதமர் மோடி:

பிரதமர் மோடி, காலை 11.50 மணியளவில் ஸ்ரீராமர் ஜென்மபூமி கோவிலின் சிகரத்தில் 10 அடி உயரமும் 20 அடி நீளமும் கொண்ட முக்கோண வடிவ காவிக்கொடியை ஏற்றினார். இந்த நிகழ்வு மார்கழி மாதத்தின் சுக்ல பட்ச பஞ்சமி திதியில், ஸ்ரீராமர் மற்றும் சீதா தேவியின் விவாஹ பஞ்சமியின் சுப அபிஜித் முகூர்த்தத்தில் நடைபெற்றது. அப்போது, அங்கிருந்த பக்தர்கள் ஜெய்ஸ்ரீராம் கோஷம் எழுப்பி, உற்சாகத்துடன் தரிசனம் மேற்கொண்டனர்.

இதையும் படிங்க : திடீரென பெப்பர் ஸ்பிரே தாக்குதல்.. டெல்லி காற்று மாசு போராட்டத்தில் ஷாக்கான போலீசார்

காவிக்கொடியின் சிறப்பு:

பிரதமர் மோடி ஏற்றிய காவிக்கோடியானது 20 அடி நீளமும், 10 அடி உயரமும் கொண்டதாகும். உறுதியான பாராசூட் துணி மற்றும் பட்டு நூலால் இந்த கொடி தயார் செய்யப்பட்டுள்ளது. சுமார் 42 அடி உயர கம்பத்தில் 360 கோணத்திலும் சுழலும் வகையில் பொருத்தப்பட்டுள்ள முக்கோண வடிவிலான கொடியில், ஸ்ரீராமரின் வீரம், பெருமை ஆகியவற்றைச் சுட்டிக்காட்டும் விதமாக ஒளிரும் சூரியன், ஓம் மற்றும் மந்தாரை மரம் போன்ற புனிதச்சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.