அடுத்த வெளிநாடு டூர்… மாலத்தீவு, இங்கிலாந்து செல்லும் பிரதமர் மோடி.. திட்டம் என்ன?

PM Modi Maldives UK Visit : பிரதமர் மோடி அடுத்த வாரம் இங்கிலாந்து மற்றும் மாலத்தீவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்மையில் தான் பிரதமர் மோடி ஐந்து நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், அடுத்தகட்டமாக தனது வெளிநாடு பயணத்தை அடுத்த வாரம் தொடங்குகிறார். இதில், பிரதமர் மோடியின் மாலத்தீவின் பயணம் பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்தது.

அடுத்த வெளிநாடு டூர்... மாலத்தீவு, இங்கிலாந்து செல்லும் பிரதமர் மோடி.. திட்டம் என்ன?

பிரதமர் மோடி

Updated On: 

19 Jul 2025 18:04 PM

டெல்லி, ஜூலை 19 : பிரதமர் மோடி (PM Modi) அடுத்த வாரம் இங்கிலாந்து மற்றும் மாலத்தீவுக்கு (PM Modi Maldives, UK Visit) பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையே த வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. மேலும், மாலத்தீவின் 60வது தேசிய விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து 2025 ஜூலை 23ஆம் தேதி புறப்பட்டு, 2025 ஜூலை 27ஆம் தேதி இந்தியா திரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் மோடி அரசு முறைப்பயணமாக பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அரசியல் மற்றும் வர்த்தகம் சார்ந்த நடவடிக்கையை பிரதமர் மோடி மேற்கொண்டு வருகிறார். இதனால், உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயர்ந்துள்ளது. அண்மையில் தான் பிரதமர் மோடி நீண்ட சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்.

மாலத்தீவு, இங்கிலாந்து செல்லும் பிரதமர் மோடி

அதாவது, 2025 ஜூலை 2ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை 8 நாட்கள் 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கானா, டிரினிடாட், டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இந்த பயணம் பெரிதும் முக்கியத்துவம் பெற்றது. இந்த நிலையில், அடுத்த வாரம் பிரதமர் மோடி சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரதமர் மோடி 2025 ஜூலை 23ஆம் தேதி டெல்லியில் இருந்து புறப்படுகிறார். 2025 ஜூலை 23ஆம் தேதி இங்கிலாந்துக்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ரோட்னி ஸ்டார்மருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

Also Read : இரண்டு நாள் பயணமாக தமிழகம் வரும் பிரதமர் மோடி.. பயணத்திட்டம் என்ன?

மேலும், இருநாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தமும் கையெழுத்தாகிறது. இதன் மூலம், இருநாடுகளுக்கு இடையே வர்த்தகம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து பயணத்தை நிறைவு செய்த பிறகு, பிரதமர் மோடி 2025 ஜூலை 25ஆம் மாலத்தீவுக்கு செல்கிறார். அங்கு 2 நாட்கள் தங்கும் பிரதமர் மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

Also Read : பிரதமர் மோடிக்கு மேலும் ஒரு கவுரவம்.. நமீபியாவின் உயரிய விருது.. முழு விவரம்

குறிப்பாக, மாலத்தீவின் 60வது தேசிய தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். பிரதமர் மோடியின் மாலத்தீவு பயணம் பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த பயணத்தை நிறைவு செய்த பிறகு, பிரதமர் மோடி டெல்லி திரும்புகிறார்.  அதைத் தொடர்ந்து, 2025 ஜூலை 27ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகி  உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.