பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதல் முடியல, பதிலடி உக்கிரமாக இருக்கும் – பிரதமர் மோடி எச்சரிக்கை

PM Modi on Pakistan : ஆபரேஷன் சிந்தூர் குறித்து பேசிய பிரதமர் மோடி, பாகிஸ்தானுக்கு எதிராக தாக்குதல்கள் தற்காலிகமாகவே நிறுத்தப்பட்டுள்ளன எனவும் முடிவுக்கு வந்துவிடவில்லை. இனி இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் என்றால் இந்தியாவின் பதிலடி மிக உக்கிரமாக இருக்கும் என்று பேசினார்.

பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதல் முடியல, பதிலடி உக்கிரமாக இருக்கும் - பிரதமர் மோடி எச்சரிக்கை

பிரதமர் நரேந்திர மோடி

Updated On: 

12 May 2025 21:10 PM

இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் முடிவுக்கு வந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மே 12, 2025 அன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுடன் உரையாற்றினார்.  ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு பிரதமர் மோடி உரையாற்றும் முதல் நிகழ்ச்சி இதுவாகும். பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிரான பதற்றம் தொடங்கியதிலிருந்து பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. இந்த நிலையில் போர் பதற்றம் முடிவுக்கு வந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கம் அளிக்கும் விதமாக நாட்டு மக்களுடன் உரையாற்றினார்.

பாகிஸ்தான் ட்ரோன்களை சீட்டுக்கட்டுகள் போல வீழ்த்திய இந்தியா

அப்போது பேசிய அவர், ”இந்த வெற்றி நாட்டின் மகளிருக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. பாகிஸ்தானின் பகவல்பூர் பயங்கரவாதிகளின் பல்கலைக்கழகமாக உள்ளது. பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய பாகிஸ்தான், மாறாக இந்தியா மீது தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் ட்ரோன்களை சீட்டுக்கட்டுகளை போல இந்தியா பாதுகாப்புப்படை வீழ்த்தியது. பயங்கரவாதத்தின் மூளையாக செயல்பட்டவர்கள் பாகிஸ்தானில் சுதந்திரமாக உலாவினார்கள். நமது நாட்டு கோவில்கள் குருத்துவாரர்கள் மசூதிகள் மீது கூட பாகிஸ்தான் தாக்குதல் நடத்த போராடியது.

‘பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதல் முடிவுக்கு வரவில்லை’

இந்தியா தாக்குதலை நிறுத்த வேண்டுமென பாகிஸ்தான் ராணுவம் முறையிட்டது. இந்தியாவின் ஏவுகணைகள் பாகிஸ்தானில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தின. நமது விமானப்படை ராணுவம் கடற்படை எல்லை பாதுகாப்பு படையினர் ஒருங்கிணைந்து தாக்குதல் செய்தனர். பாகிஸ்தானுக்கு எதிராக தாக்குதல்கள் தற்காலிகமாகவே நிறுத்தப்பட்டுள்ளன முடிவுக்கு வந்துவிடவில்லை.இனி இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் என்றால் இந்தியாவின் பதிலடி மிக உக்கிரமாக இருக்கும். என்று எச்சரிக்கை விடுக்கும் தொணியில் பேசினார்.

போர் நிறுத்தத்திற்குப் பிறகு,  மூன்று படைகளின் டிஜிஎம்ஓக்கள் ஆபரேஷன் சிந்தூர் குறித்து செய்தியாளர் சந்திப்பை நடத்தினர். போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும் பதற்றம் குறையவில்லை. பயங்கரவாதத்திற்கு எதிரான அதன் ஆபரேஷன் சிந்தூர் தொடர்வதாக ராணுவம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தினால், அதற்கு பதிலடி கொடுக்கும் முழு அதிகாரமும் இந்திய ராணுவத்திற்கு உள்ளது என்றும் அவர்கள் எச்சரிக்கைவிடுத்தனர்.

இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்திருந்த நிலையில் பாகிஸ்தானின் நடவடிக்கைகளுக்கு இந்தியா பதிலடி கொடுத்து வந்தது. குறிப்பாக மே 7 முதல் 10, 2025  வரை  மூன்று நாட்களில் இருநாடுகளுக்கு இடையே தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்தன. ஒரு வழியாக மே 10, 2025 அன்று முடிவுக்கு வந்தது. அமெரிக்காவின் சமரசத்தின் கீழ் இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன, ஆனால் சில மணி நேரங்களுக்குள் பாகிஸ்தானால் போர் நிறுத்தம் மீறப்பட்டது. இந்தியா அதற்கு தகுந்த பதிலடி கொடுத்தது.