ஆபரேஷன் சிந்தூர் – தன்னிறைவு பெற்ற இந்தியாவின் சக்தி.. வாரணாசியில் பிரதமர் மோடி உரை..

PM Modi In Varanasi: பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு உரையாற்றினார். மேலும், நாடு முழுவதும் உள்ள 9 கோடியே 70 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு ரூ. 20,500 கோடியை நேரடியாக செலுத்தி, கிசான் சம்மான் நிதியின் 20 வது தவணையை வெளியிட்டார்.

ஆபரேஷன் சிந்தூர் - தன்னிறைவு பெற்ற இந்தியாவின் சக்தி.. வாரணாசியில் பிரதமர் மோடி உரை..

கோப்பு புகைப்படம்

Updated On: 

02 Aug 2025 17:12 PM

 IST

வாரணாசி, ஆகஸ்ட் 2, 2025: பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஆகஸ்ட் 2, 2025) வாரணாசியில் இருந்து நாடு முழுவதும் உள்ள 9 கோடியே 70 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு ரூ. 20,500 கோடியை நேரடியாக செலுத்தி, கிசான் சம்மான் நிதியின் 20 வது தவணையை வெளியிட்டார். பிரதமர் ரூ. 2,200 கோடி ரூபாய் மதிப்புள்ள 52 வளர்ச்சித் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், காசியுடனான தனது தொடர்பை எடுத்துரைத்தார். சிந்தூர் நடவடிக்கையின் வெற்றிக்குப் பிறகு, தான் முதல் முறையாக காசிக்கு வருகை தருவதாகக் கூறினார். பாபா விஸ்வநாத்தின் அருளால், பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தியா நீதி வழங்கியுள்ளது. சிந்தூர் நடவடிக்கையின் வெற்றியை பாபா விஸ்வநாத்துக்கு அர்ப்பணித்தார். 140 கோடி மக்களின் ஒற்றுமையும் வலிமையும்தான் சிந்தூர் நடவடிக்கையின் வெற்றிக்குக் காரணம் என்று அவர் கூறினார்.

அபரேஷன் சிந்தூர் – தன்னிறைவு பெற்ற இந்தியாவின் சக்தி:


எதிர்க்கட்சிகளை விமர்சித்த பிரதமர் மோடி, இது புதிய இந்தியா என்று கூறினார். சிந்தூர் நடவடிக்கையின் போது, முழு உலகமும் தன்னிறைவு பெற்ற இந்தியாவின் சக்தியைக் கண்டது. வரும் நாட்களில், உத்தரப்பிரதேசத்தில் தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணைகள் மற்றும் ஆயுதங்கள் எதிரிகளை அழிக்கும் என்பதை பிரதமர் எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் விவசாயிகளைப் பற்றிப் பேசிய பிரதமர் மோடி, விவசாயிகளின் நலனுக்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டிற்கு பிரதமரின் கிசான் சம்மான் நிதி ஒரு எடுத்துக்காட்டு என்றும், கடந்த பத்தாண்டுகளில் விவசாயிகளின் ஒவ்வொரு பிரச்சினையையும் தீர்க்க எங்கள் அரசாங்கம் முழு பலத்துடன் பணியாற்றியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் தன் தன்யா யோஜனா:

பிரதமர் கிஷான் சம்மான் நிதியின் கீழ் இதுவரை 3 லட்சத்து 75 கோடி ரூபாய் விவசாயிகளின் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். இந்த தொகையில் 90 ஆயிரம் கோடி உத்தரபிரதேசத்தின் 2.5 கோடி விவசாயிகளுக்கும், 900 கோடி காசி விவசாயிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்காக பிரதமர் தன் தன்யா யோஜனா என்ற புதிய திட்டத்தையும் அரசாங்கம் தொடங்கியுள்ளதாக தெரிவித்தார். இந்த திட்டத்தின் கீழ் 24,000 கோடி ரூபாய் செலவிடப்படும், மேலும் இந்த திட்டத்தின் கீழ் சிறிய மாவட்டங்களில் கவனம் செலுத்தப்படும்.

Also Read: நான் என்ன பேசணும்? நாட்டு மக்களிடம் கருத்து கேட்டு பிரதமர் மோடி.. வெளியான அறிவிப்பு!

விவசாயிகளுக்கு வானிலை எப்போதும் ஒரு சவாலாகவே இருக்கும் நிலையில் பிரதமர் ஃபசல் பீமா யோஜனாவின் கீழ் இதுவரை விவசாயிகளுக்கு 1.75 லட்சம் கோடி ரூபாய் கோரிக்கை வழங்கப்பட்டுள்ளது. விக்ஸித் க்ரிஷி சங்கல்ப் அபியான் கீழ், நிலத்திற்கு ஆய்வகம் என்ற செய்தியுடன், அரசாங்கம் 1.25 லட்சம் கோடி விவசாயிகளுடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.