7.8% வளர்ச்சி… சவால்களை மீறி இந்தியா முன்னேற்றம்… டிரம்ப்பிற்கு பிரதமர் மோடி மறைமுக பதில்

PM Modi Slams Tariffs : புதுடெல்லியில் செப்டம்பர் 2, 2025 அன்று நடைபெற்ற செமிகான் இந்தியா 2025 நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, இந்தியா, உள் நாட்டு உற்பத்தியில் முதல் காலாண்டில் 7.8 சதவிகிதம் வளர்ச்சியடைந்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தார். இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

7.8% வளர்ச்சி... சவால்களை மீறி இந்தியா முன்னேற்றம்... டிரம்ப்பிற்கு பிரதமர் மோடி மறைமுக பதில்

டொனால்ட் டிரம்ப் - நரேந்திர மோடி

Published: 

02 Sep 2025 18:38 PM

புதுடெல்லி, 2025:  புதுடெல்லியில் நடைபெற்ற செப்டம்பர் 2, 2025 அன்று நடைபெற்ற செமிகான் இந்தியா 2025 (Semicon India 2025 ) மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தற்போதைய நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 7.8 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளதாகவும், தனி நபர் சுயலாபத்தால் உருவாகும் சவால்களையும் மீறி இந்தியா இந்த நிலையை அடைந்திருப்பதாக தெரிவித்தார்.  மேலும் பேசிய அவர், இந்த வளர்ச்சி தொழில்துறை, சேவை, வேளாண்மை, கட்டுமான துறைகளில் தெளிவாகக் காணப்படுகிறது என்றார். பிரதமர் பேசியது குறித்து விரிவாக பார்க்கலாம்.

செமிகான் இந்தியா 2025 மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, உலகின் பிற நாடுகள் தற்சார்பு பொருளாதாரத்தில் பெரும் சவால்களை சந்தித்து வரும் நிலையில், அதே காலகட்டத்தில் 7.8 சதவிகிதம் வளர்ச்சியடைந்துள்ளது என்றார். இந்த வளர்ச்சி கடந்த ஆண்டு அதே காலகட்டத்தில் 6.5 ஆக இருந்தது. தனி நபர் சுயலாபத்தால் உருவாகும் சவால்களையும் மீறி இந்தியா இந்த நிலையை அடைந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.  என்றார். அவர் அமெரிக்காவின் வரிவிதிப்பை தான் அவ்வாறு விமர்சித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க : இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தி 7.8 சதவிகிதமாக அதிகரிப்பு – கணிப்புகளை பொய்யாக்கி சாதனை

செமிகான் இந்தியா 2025 நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி

 

இந்தியாவின் பொருளாதார முன்னேற்றம்

இந்தியாவில் தொழில்துறை, சேவை, வேளாண்மை, மற்றும் கட்டுமான துறைகளில் தெளிவான வளர்ச்சி காணப்படுகிறது என்ற அவர், இந்த வளர்ச்சி இந்தியாவை விரைவில் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாற்றும் பாதையில் இருப்பதை உறுதி செய்கிறது. Made In India, Trusted by the World என்ற வாசகத்தின் படி உலக தரவரிசையில் இந்தியா முன்னணி இடத்தை பிடிக்கும் நாள் விரைவில் வரும் என்றார்.

இதையும் படிக்க : ’280 கோடி மக்களின் நலன்.. வரலாற்று பொறுப்பு’ – பரஸ்பர அன்பை பரிமாறிய பிரதமர் மோடி – ஜின்பிங்!

டாரிப்கள் குறித்து டிரம்ப் விமர்சனம்

அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த மாதம் இந்தியாவுக்கு 50 சதவிகிதம் வரி விதித்தார்.  இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதால் யுக்ரைன் – ரஷ்யா மோதலுக்கு காரணமாகிறது என்று அவர் குற்றம்சாட்டினார். இந்தியாவுடன் நாம் மிக குறைவான அளவில் வர்த்தகம் செய்கிறோம். ஆனால் இந்தியா எங்களிடம் அதிக வர்த்தமகம் செய்கிறது என்று குறிப்பிட்டார்.  இந்த நிலையில் இந்தியா அமெரிக்காவின் வரிவிதிப்பை நியாமற்றது என்று குற்றம் சுமத்தியது.